ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கப்பட்டு 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் இலங்கை விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வௌியிட்டுள்ள அவர், “அவருடன் தொடர்புகளில் இருந்த 62 விமானப்படை வீர வீராங்கனைகள், கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப…
-
- 0 replies
- 220 views
-
-
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் அங்கு முப்படையினரைத் தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. விடுவிப்பில் வீடு திரும்பிய நிலையில் உள்ள படையினரை மீளவும் கடமைக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தன…
-
- 3 replies
- 741 views
-
-
பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு by : Litharsan சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸின் பரவலால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். …
-
- 2 replies
- 458 views
-
-
மலையகத்தில் கொரொனா பீதி பொறுப்பற்ற செயல்: திலகர் தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி 7 பேர் தப்பிச்சென்று அங்கு அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி 7000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலை பொறுப்புவாய்ந்தவர்கள் தெரிவிப்பது பொறுப்பற்ற செயலாகும் என தொழிலாளர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். மலையகத்திற்கு குறிப்பாக நுவரஎலியா மாவட்டத்துக்குள் 7000 மலையக இளைஞர் தலைநகரில் இருந்து ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி தெரியாது என்றும் அவர்களுக்கு தொற்று இருக்கலாம் எனவும் சமூக வலுவூட்ட…
-
- 1 reply
- 409 views
-
-
இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயா போர்ஸ், ரொஷான் குணதிலக தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முப்படைக்கு சொந்தமான அனைத்து முகாம்களையும் கண்காணித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளார். http://tamilmirror.lk/
-
- 0 replies
- 321 views
-
-
(ஆர்.யசி) கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தற்போது எவ்வாறான நிலைமையில் உள்ளது என்பது குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இது குறித்து கூறுகையில், நாட்டில் ஊரடங்கை தளர்த்த மீண்டும் நடவைக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மீண்டும் மக்…
-
- 0 replies
- 286 views
-
-
கல்லுண்டாயில் மலக்கழிவுகளை காெட்ட முயன்ற பவுசரை மடக்கிய மக்கள் மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக் கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (26) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது. நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக் கழிவுகளைக் கொட்டுவதற்கு தடை விதித்து மல்லாகம் நீதிமன்றம் 2018ம் ஆண்டில் கட்டளை வழங்கியிருந்தது. அக்கட்டளையை மீறி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கல்லுண்டாய் பகுதியில் மலக் கழிவுகளை கொட்டி வந்…
-
- 3 replies
- 917 views
-
-
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி முகக்கவசம் கையளிப்பு மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி நீக்கி என்பன கையளிக்கப்பட்டது. லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வவுனியா அந்தனர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது. -இதன் போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது உன்னதமான பணியாற்றி வரும் மருத்துவ துறை சார் உத்தியோகத்தர்…
-
- 24 replies
- 2k views
-
-
யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆலய-வழபடடல-ஈடபடடரநதவரகள-கத/71-249309 ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் …
-
- 7 replies
- 1.4k views
-
-
உயிர்தப்பிய முன்னாள் எம்பி முஸ்தாபா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா மற்றும் அவரது மகள் ஆகியோர் பயணித்த கார் மட்டக்களப்பு – அரசடி பகுதியில் இன்று (27) காலை மதில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவரும் காயமின்றி தப்பியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://newuthayan.com/உயிர்தப்பிய-முன்னாள்-எ/
-
- 0 replies
- 399 views
-
-
எலிகாய்ச்சலினால் வெலிசறை கடற்படை தள கமாண்டர் பலி! கொழும்பு – வெலிசறை கடற்படை தளத்தின் கடற்படை அதிகாரி ஒருவர் எலிகாய்ச்சல் காரணமாக இன்று (26) அதிகாலை மரணமடைந்துள்ளார் என்று கடற்படை அறிவித்துள்ளது. வெலிசறை கடற்படை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கலென்பிந்துவேவா பகுதியை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் சுனில் பண்டார (35-) வயது என்பவரே மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் வெலிசறை கடற்படை தளத்தின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனா நடைமுறையை பின்பற்றி அவரது இறுதி சடங்கை செய்ய சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். https://newuthayan.com/எலிகாய்ச்சலினால்-வெலி/
-
- 8 replies
- 1.1k views
-
-
மயிலங்காடு வீதியோரம் எரிந்த சடலம் மீட்பு! யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் இன்று (26) காலை எரிந்த நிலையில் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு காணப்பட்டுள்ளது. குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/மயிலங்காடு-வீதியோரம்-எர/
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார். அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக மாணவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்தார். மேலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட…
-
- 1 reply
- 497 views
-
-
மான், பண்டி இறைச்சியினை வைத்திருந்த மூவர் கைது வவுனியா – கூமாங்குளத்தில் மான் மற்றும் பண்டி இறைச்சியினை உடமையில் மறைத்து வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பிராந்திய போ தை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்றைய தினம் கூமாங்குளம் பகுதியில் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ காட்டுபன்றி மற்றும் 10 கிலோ மான் இறைச்சியை மீட்டுள்ளனர். அதனை உடமையில் மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித…
-
- 3 replies
- 675 views
-
-
யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் வயது-65 என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. https://www.ibctamil.com/srilanka/80/141965?ref=home-imp-flag
-
- 1 reply
- 510 views
-
-
வடக்கு கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் வைத்தியசாலை? வடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மாகாணத்திற்கொரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வடக்கு மாகாண கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அக்கராயன் வைத்தியசாலை இடம்பெற்ற வைத்திய சேவைகளில் சிலவற்றை ஸ்கந்தபுரம் ஆயுள்வேத மற்றும் பொது கட்டடங்களுக்கு மாற்றுமாறும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 530 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிச்செல்ல 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்! யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்களுடைய சொந்த மாவட்டத்திற்குத் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 2 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட 2 ஆயிரம் பேர் அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே என அவர் குறிப்பிட்டார். அடுத்தக் கட்டமா…
-
- 1 reply
- 317 views
-
-
கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்! கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அவரது அனுமதியுடன் பாடசாலையினை தங்களின் தேவைக்குப் பெற்றுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலையினைச் …
-
- 2 replies
- 368 views
-
-
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை கூட்ட முடியாத சூழ்நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 5 replies
- 785 views
-
-
G.C.E(O/L) பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் வெளியாகின்றது! கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாய…
-
- 0 replies
- 276 views
-
-
ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டை இலக்க அடிப்படையில் அத்தியாவசிய நடமாட்ட ஏற்பாடுகளும் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04ஆம் திகதி, திங்கள், அதிகாலை 5.00 மணி வரையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் – ஏப்ரல் 27, திங்கள், அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00…
-
- 0 replies
- 338 views
-
-
பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன ஐக்கிய நாடுகள் சபையின் 50வது உலக பூமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி 2006ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 24ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி வாழைச்சேனை, பேத்தாழை, முறக்கொட்டான்சேனை, செங்கலடி, கரடியனாறு தன்னாமுனை, சின்ன உப்போடை, புளியந்தீவு, கல்லடி மற்றும் நாவற்குடா போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன்போது மருத்துவ ஊட்ட சத்துகள் நிறைந்த சுற்றுசூழல் வாயுச் சமநிலையை பேணும் வகையிலான மா, பப்பாசி, வேம்பு, கொய்யா, வில்வம், மாதுளை போன்ற ஐம்பது பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. (150) https://newuthayan.com/…
-
- 1 reply
- 350 views
-
-
மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார். செயற்கையாக ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு! ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரம் இன்றைய தினம்(சனிக்கிழமை) நண்பகல் சித்தங்கேணி பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள சித்தங்கேணி பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார். அவ்வேளை சித்தங்கேணி சந்தியில் கடமையில் நின்ற பொலிசார் அவரை மறித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அதன் போது அவர் தான் ஒரு ஓய்வு பெற்ற அரச அதிகாரி இவ்வாறு என்னுடம் தகாத வார்த்தைகள் தூசணத்தால் சீருடையுடன் நின்று பேசுவது ந…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அந்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்து அந்த…
-
- 1 reply
- 576 views
-