ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் குவிந்த இளைஞர்கள் மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுவதினால் நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் இன்று (22) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் இரத்ததானம் வழங்கி வைத்தனர். இதன்படி O,A,B போன்ற எதிர்மறை…
-
- 1 reply
- 478 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து வவுனியாவில் பிரார்த்தனை நிகழ்வுகள்! by : Litharsan ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து நினைவு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. வவுனியா, குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனையில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட அரச திணைக்கள உத்தியோத்தர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதையடுத்து விசேட ஆத்மசாந்தி பிரார்த்தினையும் இடம்பெற்றிருந்தது. இதேவேளை, வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர்…
-
- 9 replies
- 719 views
-
-
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 785 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 785 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற விமான பொறியியலாளர்கள் சங்கம் 1.5 மில்லியன் ரூபாவும், கிலக்சோ ஸ்மித் கிளைன் மருந்துப்பொருட்கள் நிறுவனமும் விஜய உற்பத்தி தனியார் நிறுவனமும் தலா 05 மில்லியன் ரூபாவும், நிஷிகோ சர்வதேச தனியார் கம்பனி, பீபல்ஸ் காப்புறுதி நிறுவனம் மற்றும் ரஷ்ய கல்வி மத்திய நிலையம் தலா ஒரு மில்லியன் ரூபாவும் கெமுனு ஹேவா ரெஜிமன…
-
- 0 replies
- 394 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில்குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும் அதனை ரத்து செய்யுமாறும்கோரியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கேசவன் சயந்தன்இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினைஇலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக இன்றுதாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்…
-
- 6 replies
- 655 views
-
-
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களை வெளிப்படுத்த வேண்டும் – முன்னாள் சபாநாயகர் by : Jeyachandran Vithushan ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு உதவியளித்தவர்கள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரையும் இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறித்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருடம் கடந்திருக்கும் நிலையில், அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பிரார்த்திப்போம். அதில் காயமடைந்தவர்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவோம். ஒரே நாட்டவர் என்ற வகையில் நாமனைவரு…
-
- 1 reply
- 325 views
-
-
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியல்ல- ஆனந்தசங்கரி by : Litharsan மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேசமே தனது நிகழ்ச்சி நிரலில் இயங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கையில் தேர்தலை நடத்துவது மனிதாபிமானம் உள்ள எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களு…
-
- 2 replies
- 581 views
-
-
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அராலி மேற்கைச் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரின் வீட்டில் 19 ஆம் திகதி இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர். அந்தக் குடும்பத்தலைவரின் வீட்டு வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப்…
-
- 1 reply
- 544 views
-
-
மதுபான சாலைகளை மூடுமாறு உத்தரவு! நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் மதுபான சாலைகள் திறக்கப்பட்டிருந்தன. இதன்போது மதுபான சாலைகளில் அதிகளவான மக்கள் கூடியிருந்த நிலையில் உடன் அமுலுக்கு வரையில் அவற்றினை மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. http://athavannews.com/மதுபான-சாலைகளை-மூடி-வைக்/
-
- 5 replies
- 616 views
-
-
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர். இந்நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நி…
-
- 30 replies
- 3k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் இதுவரை 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியை அண்மித்த ஆமர் வீதியை ஒட்டியுள்ள பகுதிகளும், வாழைத்தோட்டம் , புதுக் கடை பகுதியுடன் தொடர்புபடும் பகுதிகள் பலவும் முற்றாக முடக்கப்பட்டு, பண்டாரநாயக்க மாவத்தை, அதனை சுற்றியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படிஇன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் மூன்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பட்டதாக , கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி, வ…
-
- 0 replies
- 300 views
-
-
ஓட்டோ பயணத்தின்போது இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படினும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஓட்டோவில்-இருவர்-மாத்திரமே-பயணிக்க-அனுமதி/175-249026
-
- 0 replies
- 363 views
-
-
கொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது. முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் …
-
- 1 reply
- 424 views
-
-
மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட தையடுத்து அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (20.04.2020) மாலை கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்தது. இதனடிப்படையில் இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதுடன் இதில் இயங்கி வந்த நோயாளர் பிரிவுகள் அனைத்தும் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபம் மற்றும் வேறு அரச கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. இதற்கு அந்த…
-
- 0 replies
- 312 views
-
-
2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும். கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் என 8 இடங்களை குறிவைத்து, குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 250 க்கு மேற்பட்டோர் பலியானதுடன், 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி இன்றைய தினம் காலை 8.40 மணியளவில் சகல கத்தோலிக்க மக்களும் தங்களது வீடுகளில் விளக்கேற்றுமாறும் தேவாலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்யுமாறும் பேராயர் வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்…
-
- 2 replies
- 392 views
-
-
வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை குடும்ப பட்டியலில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கும் வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள், ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவோர் (ஏப்ரல் மாத வேதனம் கிடைக்காதவர்கள்), 5,000 ரூபாய்க்கும் குறைந்த வருமானம் பெறுவோர், 5,000 ரூபாய்க்கு குறைந்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோர், இதுவரை 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராமிய குழுக்களிடம் மேன்முறையீடு செய்தால், குறித்த கொடுப்பனவை நாளை (22) தினத்துக்குள் வழங்குமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். http://www.t…
-
- 1 reply
- 330 views
-
-
யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – எச்சரிக்கின்றார் த.சத்தியமூர்த்தி! by : Benitlas யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனோ வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒருவரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 16 பேருமாக இதுவர…
-
- 2 replies
- 402 views
-
-
நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என்று வடக்கு மாகணா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தங்களது பிரதேச செயலர்களுடாக சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அறிவுறுத்தல்கள்: சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும். முடி திருத்துநர்கள் கட்டாயமாக முகக் கவசம் …
-
- 22 replies
- 1.3k views
-
-
எஸ்.நிதர்ஷன் கொரோனொ வைரஸ் தொற்று நோய் சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால், கொரோனோ அபாயம் நீங்கும் வரையில், குறித்த அத்தியட்சகரைப் பணியில் இருந்த நீக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், குறித்த வைத்திய அத்தியட்சகர், தங்களுடன் சேர்ந்துச் செயலாற்றுவதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக, தமக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது, குறித்த வைத்திய அத்தியட்சகர், நோயாளிகள் உள்ளே வருகின்ற போது, அவ…
-
- 17 replies
- 1.4k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) களுத்துறை - கெலிடோ கடற்கரை மற்றும் கல்கிசை கடற்கரைக்கு இடைப்பட்ட கரையோர பிரதேசத்தில் செயற்கை கடற் கரையை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் இந்த செயற்கை கரையோர அமைப்பு ஊடாக சூழல் சார் பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் குறித்த திட்டம் அமுல் செய்யப்படும் பகுதிகளில் கடும் பாதுகாப்பு அமுல் செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு நிருவனம் ஒன்று உள் நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந் நடவடிக்கைகளை தொடர்வதாக அறிய முடிகின்றது. இந்த செயற்கை கடற்கரை திட்டம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவடைந்ததும் பிரதேசத்தின் மீன் பிடி மற்றும் சுற்றுலாத் து…
-
- 2 replies
- 593 views
-
-
வடக்கில் கொரோனா பரவுவதற்கு சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால் தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை தாம் நம்பத் தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் யாராவது ஒருவருக்குக் கொரோனா ஏற்பட்டாலும் அங்குள்ள ஏனையோருக்கும் பரவும் நிலை காணப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டு…
-
- 14 replies
- 1.2k views
-
-
கொரோனா தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்கு உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தற்பொழுது மிகவும் ஆபத்தாக கொரோனா தொற்று பரவிவருவதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உணவு கையாளும் ஒழுங்கு விதிகளை முற்றாக அமுல்படுத்துவதுடன் மேலதிகமாக கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக கீழ் குறிப்பிடப்ப ட்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். 1 உணவு கையாளும் நிலையத்தில் பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும். 2 இயலுமானவரை உணவு வகைகளை வாங்கிச் சென்று உண்பதை ஊக்குவியுங்கள். 3 உணவு கைய…
-
- 2 replies
- 318 views
-
-
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொரோனா அச்ச நிலமை காணப்படுகின்றது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து அரச போக்குவரத்து சேவைகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற போதிலும் தனியார் சேவைகள் முழுமையாக இடம் பெறவில்லை. அதே நேரத்தில் நீதிமன்ற செயற்பாடுகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெறத் தொடங்கியுள்ளது. அத்துடன் கடந்த ஊரடங்கு தளர்வு நேரங்களை பார்க்கிலும் இம்முறை மிகவும் குறைந்த அளவிலான மக்களே பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளுக்கு வருகை …
-
- 0 replies
- 380 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் இன்று (20) தளர்த்தப்பட்ட நிலையில் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, சேருவில,வெருகல், குச்சவெளி பிரதேசங்களில் சமூக இடைவெளியை பேணி மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். ச.தொ.ச. உள்ளிட்ட முக்கிய வியாபார நிலையங்களில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போக்குவரத்துகள் சுமூகமாக இடம் பெற்று வருகின்றது ஆனால் மக்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணி கொள்வனவு செய்தனர். மேலும் உள்ளூராட்சி மன்றங்கள், அரச காரியலயங்கள் இயங்கி வருகின்றபோதும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவே காணப…
-
- 0 replies
- 370 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை ஏனைய மாவட்டங்களிலும் வெளியில் நடமாடுவதை இயன்றவரை குறைத்துக்கொள்ளுங்கள். https://www.ibctamil.com/srilanka/80/141571
-
- 4 replies
- 460 views
-
-
வவுனியா வைத்தியசாலையில் சிறுமி திடீர் மரணம்! கொரோனா பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் அனுப்பி வைப்பு வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி, சுகயீனம் காரணமாக நேற்றையதினம் மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி, வவுனியா - தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடையவரென தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவச…
-
- 1 reply
- 342 views
-