ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
(எம்.எப்.எம்.பஸீர்) யாரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதனை வெளிப்படுத்தாமல் பொது மக்களிடையே நடமாடுவாராயின், அந்த நோயை பரப்பமுயற்சிப்பாராயின் அந் நடவடிக்கைகளும் அந் நிலைமையை அறிந்தும் வேறு ஒருவர் அதனை மறைப்பாறாக இருப்பின் அதுவும் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக் குரிய குற்றமாகும் என சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவ்வாறு பொறுப்பற்று செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தகையோர் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். கொரோனா மருத்துவ கண்காணிப்பை நிராகரிப்பதும் அதே தண்டனையை பெறத் தக்க குற்றமாகும். இந் நிலையில் அது குறித்து செ…
-
- 6 replies
- 1.3k views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரம்- உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர தயார்.! கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கடந்த காலம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (16) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு கூறினார்.தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட…
-
- 0 replies
- 345 views
-
-
இந்த வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமூல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்திவருகிறது. இந்நிலையில் வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுபடுத்தும் நோக்கில் தேசிய கொள்கைக்கு அமைவாக சில நடைமுறைகளை உரியமுறையில் ந…
-
- 0 replies
- 320 views
-
-
வவுனியா, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். குறித்த பரிசோதனைத் தடுப்பு முகாமுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் 265 வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 5 பேருந்துகளில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதேவேளை,…
-
- 3 replies
- 774 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளியன்று கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலானது கறுவாத்தோட்டம் பொலிஸார் ஊடாக அனுப்பட்டுள்ளது. ச.தொ.ச நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றை மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் கைக்கு கிடைகக் செய்தமை மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் 7,340 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணைகளுக்காக ரிஷாத் பதியுதீன் இவ்வாறு சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/…
-
- 0 replies
- 230 views
-
-
புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளிர் அணி குற்றச்சாட்டு.! சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது… சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட…
-
- 10 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் இலங…
-
- 1 reply
- 389 views
-
-
வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இந்த உயிர்க்கொல்லி வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமே. எனினும் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் தடுப்பு முகாமை வடக்கு கிழக்கை மையப்படுத்தி அமைப்பதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. கடந்த வ…
-
- 7 replies
- 825 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட 11 ஆவது நோயாளருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக, குறித்த நோய் நிலைமையை மறைத்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்கிசை பதில் நீதிவான் சி.ஏ. தர்மதிலக முன்னிலையில் கல்கிசை பொலிஸார் சார்பில் பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இந்த வழக்கை இன்றைய தினம் தாக்கல் செய்து நீதிவானுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினார். இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான் இது குறித்து விசாரணை செய்து எதிர்வரும் ஏபரல் 02 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். h…
-
- 0 replies
- 337 views
-
-
விடுதலைப் புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து டெனிஸ்வரன் தேர்தலில் போட்டி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் விடுதலைப் புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் த. இ .மலரவன் தெரிவித்தார்.அண்மையில் பா.டெனிஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வேட்பாளர் தெரிவின்போது முன்னாள் போராளிகளையும் உள்வாங்குமாறு பகிரங்கமாக கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். இந்நிலையில் அது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளிக்காத நிலையிலேயே, அவர் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்து வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.விடுதலைப்புலிகள் மக்கள் போரவை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்…
-
- 1 reply
- 389 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் – பொதுத்தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை! by : Benitlas நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது. நாட்டிலே தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடி…
-
- 1 reply
- 291 views
-
-
டக்ளஸ் தேவானந்தா நிந்தவூர் பகுதிக்கு திடீர் பயணம் March 15, 2020 பாறுக் ஷிஹான்- கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை(15) காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் இடம்பெறும் கடலரிப்பு தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு சென்று பார்வையிட்டார். மேலும் நிந்தவூர் மீனவர்களின் தேவைக்கென ஏற்கனவே அமைக்கப்பட்டு இயங்காநிலையில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் அதனை உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொ…
-
- 1 reply
- 510 views
-
-
தமிழ் மக்களை பலி எடுப்பதில் சிங்கள அரசு குறியாக இருக்கிறது…. March 14, 2020 வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளின் கொரேனா வைரஸ் தடுப்பு மையமாக வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து விதமான செயற்பாட்டு நிலையங்களையும் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் இருந்து அகற்றி சிங்களப்பிரதேசத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் -இவ்விடையம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், நடந்து முடி…
-
- 6 replies
- 726 views
-
-
நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள்-1723 பேர் கண்காணிப்பில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை 11ஆவது இலங்கையரான 46 வயதுடைய ஆணொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 7 பேர் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் 7 பேரும் இலங்கையர்கள்…
-
- 1 reply
- 437 views
-
-
மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு- யாழில் சம்பவம் யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்பும்போதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com…
-
- 1 reply
- 512 views
-
-
ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்- டக்ளஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை எனவும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஐக்கியம் பற்றிப் பேச்சு மாத்திரம் இறுதிவரை இருக்கின்றது. செயல்வடிவம் கொடுப்பது பற்றி பேச வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது போல இருக்க வேண்டும். …
-
- 7 replies
- 906 views
-
-
பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடக்கிற்கு வந்தவர்களின் ஆவணங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு! by : Jeyachandran Vithushan இந்த வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமூல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்க…
-
- 1 reply
- 535 views
-
-
நாளையதினம் பொது விடுமுறை நாளை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கவில்லை – அரசாங்கம்! Jeyachandran Vithushan நாளையதினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல அமைப்புக்கள் தொடர்ந்தும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாளை விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய ஆண் மற்றும் 50 வயதுடையவர்களுக்கு கொரோனா வைரஸ் …
-
- 0 replies
- 369 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் உங்கள் கருத்து தவறானது. தமிழ் மக்கள் கூட்டணி என்பது தமிழ் மக்கள் பேரவையின் ஒரு அலகோ அல்லது பரிமானமோ அல்ல, நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நிச்சயமாக மாற்றங்களை செய்யமுடியும், நாம் எல்லாவற்றையும் முயற்சித்து விட்டோம். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது தவறு, மக்களின் ஆலோசனைகளும் பங்குபற்றுதலுமே உண்மையான பலமாகும், உண்மைக்கு பலம் அதிகம். அதனால் தான் சிங்கள அரசியல்வாதிகள் தமது மக்களை இன்னமும் இருட்டில் வைத்திருக்கிறார்கள், அரசாங்கம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பற்றி கதைப்பது முதலை கண்ணீர் வடிக்கும் செயல் , நாம் அரசியல் ரீதியாக பலம் பெறும் போது இது மீண்டும் சாத்தியமாகும் …
-
- 0 replies
- 341 views
-
-
ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது. இதன்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார். இந்த காணொளி கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹ…
-
- 4 replies
- 393 views
-
-
வேகமாகப் பரவும் கொரோனா – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய 8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும் ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 183 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – இராணுவச் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட இருவர் யாழ் வைத்தியசாலையில்…. March 14, 2020 கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உள்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கோரானா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை…
-
- 4 replies
- 715 views
-
-
கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் சுகாதார திணைக்களம் மற்றும் இந் நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும் இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வருகைதருபவர்கள் தொடர்பிலும் கண்காணித்து உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். https:…
-
- 0 replies
- 232 views
-
-
சென்னையிலிருந்து யாழிற்கான விமான சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தினசரி விமான சேவையை மட்டுப்படுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் நான்கு பயணிகள் மாத்திரம் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்திய விமான நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையேயான விமான சேவையை மறு அறிவிப்பு வரும் வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. http://athavannews.com/சென்னையிலிருந்து-யாழிற்/
-
- 6 replies
- 542 views
-
-
திங்கட்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு! இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் இன்று (சனிக்கிழமை) எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை, அதிக மக்கள் கூடும் நிகழ்வுகள் மற்றும் விழாக்களையும், பொது இடங்களில் மக்களின் அதிக பிரசன்னத்தையும் தவிர்க்குமாறு அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/திங்கட்கிழமை-அரச-விடுமுற/
-
- 2 replies
- 497 views
-