ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
இலங்கைக்கான விமான சேவைகளை குவைத் ரத்துச் செய்துள்ளது…. March 7, 2020 இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையிலான அனைத்து விமான பயணங்களையும் ஒரு வார காலத்திற்கு ரத்துசெய்ய குவைத் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினத்தில் (06.03.20) இருந்து அமுலுக்கு வரும் வகையில் குவைத் சிவில் விமான சேவை பிரதி பணிப்பாளர் நாயகத்தினால குறித்து அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, லெபனான், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2020/13…
-
- 0 replies
- 219 views
-
-
முன்னாள் போராளி விடுதலை March 6, 2020 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ். மேல் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. முல்லைத்தீவு கோப்பாபிலவு முள்ளியவளையைச் சேர்ந்த காளிமுத்து மகேந்திரன் அல்லது தமிழ்ப்புலவன் என்ற முன்னாள் போராளியே குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக் கடற்படையினரைத் தாக்கியள…
-
- 2 replies
- 676 views
-
-
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: 'போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்' Getty Images காணமால் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோட்டாபய கூறியிருந்தார். இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, ராணுவத்தைச் சேர்ந்த பெருந்திரளானோரும் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது …
-
- 3 replies
- 475 views
-
-
நான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே! கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. இலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (Dondura தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது. ஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வர…
-
- 8 replies
- 1.1k views
-
-
(செ.தேன்மொழி) அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்களையும் பெற்றுக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பட்டதாரி நியமணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் , தேர்தல் ஆணையகம் தேர்தல் முடிவுறும் வரையில் அதனை செயற்படுத்த மு…
-
- 4 replies
- 412 views
-
-
பட்டதாரிகளுக்கான நிய மனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்து மாறு தேர்தல் ஆணைக் குழு உத்தரவிட்டுள் ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவுறும் வரை அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுத்தப்படு வதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூல…
-
- 7 replies
- 886 views
-
-
இலங்கை - சீனாவிற்கிடையிலான விமானசேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி ஜெத்தாவுக்கான விமான சேவைகளைய நிறுத்துவதற்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/77257
-
- 2 replies
- 412 views
-
-
இரா.துரைரெட்ணம் த.தே.கூட்டமைப்புடன் இணைவு: இனி தொடர்பு இல்லையென சுரேஷ் அறிவிப்பு by : Litharsan ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இரா.துரைரட்ணத்திற்கும் கட்சிக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன…
-
- 1 reply
- 497 views
-
-
தமிழா்கள் மீது போா் குற்றம் புாியப்படவில்லை என ஐ.நா வரையில் சென்ற சுரேன் ராகவன் எந்த முகத்துடன் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கிறாா்..? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவுடன் இணைந்து தமிழா்கள் மீது போா் குற்றங்கள் புாியப்படவில்லை, மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லை. எ ன ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் வரை சென்று கூறியவா் சுரேன் ராகவன். அவருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற தோ்தலுக்கான ஆசனம் வழங்குவதா? அதனை மக்கள் ஏற்றுக் கொள்வாா்களா ? என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இது தொ…
-
- 3 replies
- 698 views
-
-
தலைமன்னாரில் இருந்து கச்சதீவுக்கு படகுகள் மூலம் பக்தர்கள் பயணம்! by : Litharsan வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா நாளை காலை இடம்பெறவுள்ளது. இந்தத் திருவிழா, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதுடன் திருச் செரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும். அத்துடன் நாளை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து மக்கள், படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி இன்று மதியம் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர். தலைமன்னார் கடற்கரையில் கடற்படையினர் கு…
-
- 3 replies
- 663 views
-
-
குடும்ப ஆட்சியை ஒழிக்கவே ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணி களமிறக்கம்: சம்பிக்க by : Litharsan குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மாற்றத்தின் அணியாகவே ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாவதிலிருந்து மீள்வதற்கும் இதுவே சந்தர்ப்பம் என கம்பஹாவில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலின்போது நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன்காரணமாக எமக்கு வாக்களித்த அனைவரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. …
-
- 2 replies
- 339 views
-
-
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்குகின்றோம். எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றார். https://www.virakesari.lk/article/77221
-
- 6 replies
- 1.4k views
-
-
கோண்டாவில் சந்தியில் தரித்து நின்ற வாகனத்தை, ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (05) இரவு 9 மணியளவில், கோண்டாவில் சந்தியில் உள்ள கடைத்தொகுதிக்கு முன்னாள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த கடைத்தொகுதியில் பணி புரியும் முகாமையாளரின் வாகனமொன்றே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியாதென வாகன உரிமையாளர் தெரிவித்தார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை . முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 492 views
-
-
9 சுயாதீனக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, ஒன்பது சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலேயே, இந்தச் சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன. வன்னி தேர்தல் தொகுதிக்காக நாமல் லியனபத்திரண, நீல் சாந்த, எம்.பி.நடராஜா ஆகியோர், சுயாதீனக் குழுக்களாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மயில்வாகனம் விமல்தாஸ், ஐங்கரநேசன் பொன்னுதுறை, விக்டர் அன்டனி வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான மூன்று ச…
-
- 2 replies
- 365 views
-
-
(ஆர்.விதுஷா) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன்தொடர்புடைய துருக்கிபயங்கரவாதக்குழுவொன்றுடன் தானும், முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிங்களபத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருக்கும்செய்தியை திட்டவட்டமாக மறுப்பதாகஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் கபீர்ஹசிம் தெரிவித்தார். இது தேர்தலை மையமாக கொண்டு தனக்கு எதிராகமுன்னெடுக்கப்படும்சதியெனவும் வர்ணித்த அவர் இதற்குஎதிராகதான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்காககுற்றப்புலனாய்வுபிரிவில்முயைப்பாடொன்றை அளிக்கவுள்ளதாகவும் அவர்மேலும் குறிப்பிட்டார்.
-
- 0 replies
- 390 views
-
-
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய குமார வெல்கம தலைமையில் நவ லங்கா நிதாஹஸ் பக்ஷயா (புதிய லங்கா சுதந்திரக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியொன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்சியின் தொடக்க நிகழ்வானது கட்சியின் தலைவர் குமார வெல்கமவின் ஆதரவின் கோட்டை, ஸ்ரீஜவர்தனபுரவில் இடம்பெற்றது.</p> முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுடமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசீர்வாதத்துடன் இந்த கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய குமார வெல்கம தெரிவித்தார். https://www.virakesari.lk/article/77240
-
- 1 reply
- 551 views
-
-
முன்னாள் ஐதேக அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 9 பேரை கைது செய்யுமாறு இன்று (06) சற்றுமுன் கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/ரவி-மற்றும்-9-பேரை-கைது-செய/
-
- 0 replies
- 338 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடமாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து, இன்று வெள்ளிக்கிழமை (6) காலை, மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் குறித்த பேரணி இடம் பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்தக் கவனயீர்ப்பு ஊர்வலம், மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது…
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கு கிழக்கு நிலைப்பாடு என்ன?: சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா?- ஜனாதிபதி அறிவிப்பு by : Benitlas சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தினை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்குப் பணியாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சில சிக்கல்களே இதற்குப் பிரதான காரணமாக இருக்கின்றது. …
-
- 6 replies
- 1k views
-
-
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத் திருகோணமலை ஆத்திமோட்டை அரச தமிழ் கலவன் பாடசாலைக்கு, திருகோணமலை றோட்டரிக் கழகத்தால் ஸ்மார்ட் வகுப்பறை, நேற்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான தொடுகைத் திரை, மடிக் கணினிகள், இதரத் தேவையான உபகரணங்களும் கையளிக்கப்பட்டன. இதன்மூலம், பாடசாலை மாணவ, மாணவிகளின் பாடசாலை வரவை அதிகரிக்கவும், நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வெளியூருக்குக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்களை உள்ளூரில் கல்வி பயில்வதற்கும் ஊக்கமளிக்கும். http://www.tamilmirror.lk/திருகோணமலை/ஸமரட-வகபபற/75-246417
-
- 16 replies
- 2.2k views
-
-
ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவாலாகும் – ஜனாதிபதி! ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவாலாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஜெனீவா யோசனை நாட்டின் இறைமைக்கு மற்றும் அபிமானத்திற்கு சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இணை அனுசணையிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும். உமா மகேஷ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்தது பொருளாதார பின்ன…
-
- 1 reply
- 825 views
-
-
யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள். வேட்பாளர் பட்டியல் வருமாறு: 1. மாவை.சேனாதிராஜா 2. ஆபிரகாம் சுமந்திரன் 3. ஈஸ்வரபாதம் சரவணபவான் 4. சிவாஞானம் சி…
-
- 13 replies
- 1.9k views
-
-
’தேர்தலுக்குப் பின் புதிய அரசமைப்பு’ நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டுக்குள் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது இடம்பெறும் பிரச்சினைகளும், இந்தப் 19ஆவது திருத்தம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதென்றும், அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (09), ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்துக் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 292 views
-
-
அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன் by : Litharsan இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தா…
-
- 0 replies
- 379 views
-
-
ஐ.நா.பேரவை உறுப்பு நாடுகளிடம் மாவை வேண்டுகோள்! இலங்கையில் இறுதிப் போரின்போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதற்கு ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான இந்த சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்…
-
- 0 replies
- 330 views
-