ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
பொதுத் தேர்தலிலும் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் – லக்ஷமன் யாப்பா! by : Jeyachandran Vithushan இரண்டாக பிளவடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர், பொதுத் தேர்தலிலும் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறான தீர்வுகளை முன்வைக்க முயற்சித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியினர் இரண்டாக பிளவடைவதை நிறுத்த யாராலும் முடியாது. ஜனாதிபதித் தேர்தலின்போது அனைத்துத் தரப…
-
- 0 replies
- 185 views
-
-
ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமையப்பெற்றாலே நாட்டை கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை), இபலோகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியினை பெற்றுக்கொண்டோம். இன்று ஜனாதிபதி நம்மவராக இருக்கின்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் கிடையாது. புதுவருட பிறப்பினை முன்னிட்டு மக்களுக்கு அபிவிருத்தி …
-
- 0 replies
- 377 views
-
-
கொரோனா தொற்று அறிகுறி – வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் 18 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களுள் நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் மூன்று வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். றாகமை போதனா வைத்தியசாலையில் ஒருவரும் குருணாகல் வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 359 views
-
-
முல்லைத்தீவு யுவதி 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்! சசிகுமார் சரணியா முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (01-03-2020) இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் ச…
-
- 6 replies
- 908 views
-
-
எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்றது. புள்ளி விபரங்களின் படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறு இடம்பெறும் மாவட்ட குழுக் கூட்டத்திற்காக செலவாகும் தொகையை மட்டுப்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை கிர…
-
- 6 replies
- 755 views
-
-
உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா! உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது. 2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lyc…
-
- 14 replies
- 1.7k views
-
-
புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு! by : Dhackshala யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மயானப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புத்தூரில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! …
-
- 66 replies
- 6k views
-
-
விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை’ என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு வடமராட்சி மாலுசந்திப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர். எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தமிழ்த் தே…
-
- 6 replies
- 638 views
-
-
பிரதான கட்சிகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது -மகேஸ்வரி விஜயனந்தன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பிரதான கட்சிகள் 4, சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி (சமஹி ஜனபலவேகய) கூட்டமைப்பானது, இன்று (2) காலை கொழும்பு- தாமரைத் தடாக அரங்கில் உதயமானது. இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, சிவில் அமைப்புகள் சார்பில் ஜாதிக மஹஜன கட்சி, பிரஜைகள் கூட்டணி சார்பில் அபி புரவெசியோ அமைப்பு, ஊடகவியலாளர்கள் ச…
-
- 2 replies
- 620 views
-
-
இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை வடமாகாணசபை ஏகோபித்து ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என் மீது வைர்யம் கொண்டார்கள். பின்னர் வடமாகாணசபையில் என்னை வெளியேற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நான் இன்று உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். உங்களைப் போன்ற இளைஞர்கள் பலர் தெருவேறி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதாலேயே எனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. அப்போது இளைஞர்களுக்கு இந்த முதியவர் ஒரு உறுதிமொழி அளித்தார். “உங்களுடன் இருப்பேன்” என்று அன்று கூறியிருந்தேன்.ஆகவே தான் உங்களுடன் இருக்க இந்தக் கட்சியைத் தொடங்கினேன். இவ்வாறு புதிய கட்சிக்கான விளக்கத்தை மக்கள் முன் வைத்துள்ளார் வடக்கு முன்னாள் முத…
-
- 0 replies
- 547 views
-
-
இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நளளரவ-நடளமனறம-கலபப-ஏபரல-25இல-தரதல/150-246313
-
- 0 replies
- 352 views
-
-
போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந் நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளையோர்களை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று குறித்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை அந் நபர் கொச்சைப்படுத்திவிட்டார். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சி தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு …
-
- 0 replies
- 775 views
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணைவது சம்பந்தமாக அழைப்புவிடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று மிக விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தன…
-
- 3 replies
- 636 views
-
-
எட்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு முடியும். அத்துடன் இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~ ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரான தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் நாளை நள்ளிரவு பாராளுமன்றைக் கலைக்கும் உத்தியோக ப+ர்வமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இதேவேளை,…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக இலங்கை கடந்த வாரம் அறிவித்தது. இந்தநிலையில் ஐக்கிய நாடு களின் ஒழுங்குவிதிகளின்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன் றில் இருந்து நாடு ஒன்று வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இணை அனுசரணையாளராக சேர்ந்து கொள்வதற்கு நாடுகளுக்கு வாய்ப்பிருக்கி…
-
- 1 reply
- 342 views
-
-
நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் போட்டித்தன்மையான சூழலே ஏற்படும். இதனால் எவருக்கும் நன்மை கிடைக்காது .என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இபலோகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியினை பெற்றுக் கொண்டோம். இன்று ஜனாதிபதி நம்மவராக இருக்கின்றார். ஆனால் பாராளு…
-
- 0 replies
- 321 views
-
-
(செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலே பொதுத் தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கட்சியின் யாப்பை மீறும் வகையிலும் செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மதித்து, செயற்குழுவின் தீர்மானத்திற்கினங்க செயற்படுபவர்களுக்கு மாத்திரமே கட்சிக்குள் இருப்பதற்கான அனுமதியிருக்கின்றது. இவ்வாறு இருக்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறல…
-
- 0 replies
- 199 views
-
-
(எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தின் இயலாமையே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்படக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச, புதிய கூட்டணிக்கான தலைவர் மற்றும் செயலாளரை நியமித்து அனைத்து அதிகாரங்களையும் வழங்கிய பின்னர் தற்போது முரண்பாடுகளை உண்டாக்குவது சிறந்ததல்ல என்றும் கூறினார். பாராளுமன்ற குழு அறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் முறையான வாக்கெடுப்பொன்று இடம்பெறவில்லை. வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தால் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்து அனைவரும் பங்குபற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு அழைப்பு எதுவும்…
-
- 0 replies
- 270 views
-
-
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுமென, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு, நேற்று (01) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளதாகவும் அந்த நோக்கத்துக்காகவே விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியும் இருந்தார்களெனவ…
-
- 0 replies
- 727 views
-
-
மஹிந்தவின் காலத்தில் நாம் நிம்மதியாக வாழ்ந்தோம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் நிம்மதியாக வாழ்ந்தது போன்று இனிவரும் காலமும் நிம்மதியாக வாழ சிந்தித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியினால் கல்குடா பிரதேசத்திற்கான பொதுத் தேர்தல் தொடர்பாக கட்சி பிரதிநிதிகளுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல் வாழைச்சேனையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற போது கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள், பல அபிவிருத்திகளை பார்த்தார்…
-
- 0 replies
- 402 views
-
-
புதிய மக்கள் ஐனநாயக கட்சியாக நாங்கள் ஒன்றினைந்த செயற்படுவோம் முரண்பாடு அற்ற மிகவும் இயல்பாக நியாயமான ஒரு சமூகபங்கினை வகிக்ககூடிய வகையில் புதிய தலைமுறைகளை வழிவகுக்கின்ற நிலைமையினை எடுத்துக்காட்டுகின்ற வகையில் எதிர்வரும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் உருவாக்க வேண்டும் அது காலத்திற்கு உகந்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்களுக்கு தெரிவுப்படுத்தும் மக்கள் சந்திப்பு நேற்று யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவ…
-
- 0 replies
- 274 views
-
-
யோஷித ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக பொதுஜன பெரமுன கருத்து by : Yuganthini பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்க போவதாக இணைய தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அவர் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரத்தகவல்கள், அவ்வாறான எந்தவொரு முன்னேற்பாடும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிடையே யோஷித ராஜபக்ஷ கடற்படை சேவையில் இருந்து விலகுவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென கூறப்படுகின்றது. http:/…
-
- 0 replies
- 343 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் – யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்! by : Benitlas நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட், தனது பதவியினை இராஜினாமா செய்திருந்ததுடன், மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இந்தநிலையிலேயே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய…
-
- 0 replies
- 253 views
-
-
-என்.ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின்யின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு, இன்று மாலை 3 மணியளவில், வடமராட்சி - நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வகனஸவரனன-மகததரய-கழததறய-வணடம/71-246235
-
- 3 replies
- 1k views
-
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய் சாட்சியம் வழங்கினார் – ஆசு மாரசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடுதிரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பிரசாரம் செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் இதுதெ…
-
- 1 reply
- 309 views
-