ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
மட்டக்களப்பு - மாந்தீவை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியாக மாற்றுவதற்கு அனுமதி வழங்குவதில்லையென்று, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, மாந்தீவு பகுதியை தெரிவுசெய்ய இலங்கை வைத்திய சங்கம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அது குறித்து ஆராயும் வகையிலான அவசரக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (02) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…
-
- 0 replies
- 323 views
-
-
6 TNA உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை? March 2, 2020 நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவு கலைக்கப்பட்டால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் என, தெரிவிக்கப்படுகின்றது. 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. http://globaltamilnews.net/2020/137686/
-
- 1 reply
- 230 views
-
-
பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்! பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாட…
-
- 0 replies
- 262 views
-
-
கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள், ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது! கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் சோதனை செய்தனர். இதன்போது, ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஐம்பது கிராம் ஜஸ் போதைப் பொருளும் ஜி.பி.எஸ். கருவியும் கைப்பற்றப்பட்டதோடு சந்தேகநபரான வாகன சாரதி கைதுசெய்யப்பட்டார். அத்துடன், குறித்த வாகனத்துடன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு…
-
- 0 replies
- 288 views
-
-
தோட்ட தொழிலானர்களின் நாளாந்த ஊதியமாக ரூபாய் 1000 வழங்குவதற்கான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/235572/1000-ரூபாய்-அடிப்படை-வேதனம்-கிடைக்கும்-நாள்-அறிவித்த-அமைச்சர் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார்.! மார்ச் முதலாம் திகதி முதல் கிடைக்கும் என கூறப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் ஏப்ரல் மாதம் கிடைக்கும் என தற்போது கூறப்…
-
- 2 replies
- 602 views
-
-
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகப் பணிகள் தொடர்ந்தும் அரசாங்க கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக் கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் உறுதியளித்தார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்றுமுன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லட்டை சந்தித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் பங்கேற்க சென்றுள்ள நிலையிலேயே தினேஷ் குணவர்த்தன மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித் துள்ளார். இதன்போது ஐக்கிய நாடுகளின் 40{1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக் கொண்டமைக் கான காரணங்களை அவர் விளக்கியுள் ளார். முன்னாள் வெளியுறவு அமைச்சரும் கூட இந்த யோசனைகளி…
-
- 1 reply
- 457 views
-
-
மதமாற்றத்தினால் பௌத்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றே ஆக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச சதித்திட்டங்களுக்கு மத்தியில்தான் இடம்பெற்றது. எனினும், தேரர்களின் ஒத்துழைப்பினாலேயே, கடந்த 5 வருடங்களாக நாட்டையே அழிவுக்குட்படுத்திய அ…
-
- 9 replies
- 673 views
-
-
ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங் கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்ப்பாட்ட பிரச்சினைகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று கண்கா ணிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட் டக்காரர்களுக்கு என தனியான இடமொன…
-
- 5 replies
- 909 views
-
-
சர்வதேச விசாரணை முடியவில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். நடந்தது என்ன என்ற உண்மைகளைக் கண்டறியும் செயற்பாடுகளே ஐ.நா. மட்டத்தில் நடைபெற்றுள்ளன. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை செய்யும் எந்த ஒரு சர்வதேச விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. சிலவேளை, எவருக்காவது, அவர்களின் கனவில் இது நடைபெற்றிருக்கலாம். ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறுபவர்கள், கல்வியிலும் புத்திக்கூர்மையிலும் சிறந்த எமது மக்களை அந்தளவுக்கு குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதுதான் என தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தின் சார்பில் எழுப்பப்பட்டிருந்த கேள…
-
- 4 replies
- 871 views
-
-
இலங்கை அரசாங்கம் இந்தி யாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலை க்கு தள்ளப்படப் போகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை முகாமைப்படுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது. கடந்த காலத்தில் மைத்திரி அரசாங் கத்தை விமர்சித்து வந்த ராஜபக்ஷவினருடன் இணைந்து புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கொண்டது . எனினும் முன்னர் அரசாங்கம் மீது முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் ரணில் சுட்டிக் காட்டினார். இந்தநிலையில் இலங்கையை பிச்சைக்கார நாடாக மாறிவிடக்கூடாது என்று ரணில் குறி…
-
- 0 replies
- 306 views
-
-
மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு இஸ்லாமிய பெண்கள் உட்பட நால்வர் கைது மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராதனை இடம்பெற்றது. இதன்போது அங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லிம்கள் ஆலயத்தினுள் உட்புகுந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
தேர்தல்களின் போது செலவிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபா பணம் கொட்டுகின்றது. அக்கட்சியின் பொறுப்புள்ள பிரமுகர்களே இந்த தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிதி வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு வந்து சேருகின்றதா? அது உரிய முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பது பற்றிய விசாரணைகளை அதிகார வர்க்கம் ஆரம்பிக்கும் சூழல் இருப்பதாக அறிய வருகின்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தற்போதைய தலைவர் கதிரவேலு குகதாசன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை கனடாவில் உயர்பதவியில் இருந்தவர். கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உட்படப் பல பொறுப…
-
- 5 replies
- 1k views
-
-
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர், நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளனரென்று, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கிளடம் இருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர், வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனரென்றும், பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவரெனவும், ஏனையோர் சிறுப்பிட…
-
- 3 replies
- 654 views
-
-
இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு 8 மனித உரிமை அமைப்புகள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாரை கேட்டுக்கொண்டுள்ளன. மனித உரிமை கண்காணிப்பகம், மன்னிப்புச்சபை உட்பட எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரிற்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இலங்கையில் மனித உரிமை விடயத்தில் குறிப்பிடத்தக்க பின்னோக்கி நகர்வுகள் இடம்பெறுகின்றனஎன்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என எட்டு மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் ஆற்றியுள்ள உரை இதனை உறுதி செய்வது போல காணப்படுகின்றது என அந்த அமைப்புகள…
-
- 3 replies
- 489 views
-
-
மூன்று வருடங்களை கடந்த கேப்பாபுலவு நில மீட்பு போரட்டம்: மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ! முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் ஆரம்பிக்கபட்டு இன்றுடன் மூன்றுவருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கேப்பாபுலவு மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் நிலங்களில் அமைக்கபட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும் ,இராணுவமே எமது நிலத்தை விட்டு வெளியேறு " சொந்த நிலமிழந்து வாழும் அகதிகள் நாமா ? எமக்கு மாற்று காணிகள் வேண்டாம் , ச…
-
- 1 reply
- 793 views
-
-
மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை February 28, 2020 அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்கத் …
-
- 6 replies
- 694 views
-
-
வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக்…
-
- 4 replies
- 470 views
-
-
இந்தியாவின் பிண்ணணியுடன் கூட்டணியா? யார் சொன்னது? - February 29, 2020 யாழ்.ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கான கேள்விகள் கேள்வி:- முன்னைய அரசுகளை சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு இப்போது சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றிய போன்றவை பேசுகிறதே? பதில்:- தேர்தல் வருகின்றது அல்லவா? அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்! கூட்டமைப்பு என்னதான் நாடகம் ஆடினாலும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள். சர்வதேச விசாரணைகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் காலத்தை இழுத்தடிப்பதற்கு கூட்டமைப்பு எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். எவ்வாறு கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கூட்டமைப்பு செயற்பட்…
-
- 4 replies
- 517 views
-
-
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்களை ஆரம்பிப்பதற்கும், இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன, விளக்கமளிக்கையில், இந்த விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதன் பிரகாரம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் …
-
- 2 replies
- 432 views
-
-
பொதுத் தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுப்பு - மாவை (எம்.மனோசித்ரா) பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் வெகு விரைவில் தேர்தல் நியமனக் குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் ஓரிரு வாரத்திற்குள் இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்…
-
- 0 replies
- 356 views
-
-
தேர்தல் பிரசாரத்தில் சுவரொட்டிகள்- பதாதைகளுக்கு தடை- மஹிந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துவற்கு அறிவிக்கப்படுமாயின் அதனை நடத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்” என குறிப்ப…
-
- 0 replies
- 362 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை போன்றல்லாது, வேறுப்பட்ட சூழ்நிலையின் கீழேயே பொதுத் தேர்தலில் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு எமது எதிர்தரப்பினர்களுக்கு இருந்த கால நேரம் எமக்கு இருக்கவில்லை. காரணம், எம்மை அனைத்து இடத்திற்கும் அனுப்பினர், எமக்கும் செல்ல வேண்டிய நிலையிருந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எங்கும் செல்வதில்லை. அப்படி செல்லவும் நான் தயாராகவும் இல்லை. இந்நாட்டிற்கு புதிய ஆற்றல் மிகுந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என தெரிவித்துள்ளார். https://www…
-
- 0 replies
- 225 views
-
-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்து காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவம் இன்று (29.02.2020) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்ங அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்கள். பல வருட காலமாக காணி அனுமதிப் பத்திரம் அற்ற நிலையிலேயே பொது மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.இதன் போது 100 பேர்களுக்கான உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன. இவ் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ,மாகாண காணி உதவி ஆணையாளர் ரவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். https://www.virakesa…
-
- 0 replies
- 305 views
-
-
சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலை நிலைநாட்ட முடியும்- யோகேஸ்வரன் by : Litharsan சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே பொறுப்புக்கூறலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தற்போதைய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் நாங்கள் சோதனைகளுக்கு உட்படுவது மிகவும் குறைவாகேவே இருந்தது. இன்று வடகிழக்கில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள…
-
- 2 replies
- 493 views
-
-
உள்ளக விசாரணை எனபது இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால ஏமாற்றுத்திட்டமாகும். முள்ளிவாய்க்காலின் பின்னர் உள்ளக விசாரணைகள், உள்ளக விசாரணைகள் என்று 11 வருடங்கள் சென்று விட்டன. அதன் பின்னர் இராணுவ வீரர்கள் மன்னிக்கப்பட்டுள்ளார்கள். மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.இவைதான் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டம். எனவே உள்ளக விசார ணைகளில் சர்வதேசத்துக்கும் நம்பிக்கையில்லை. இனிவரும் காலங்களில் அது இறுக்கமான தீர்மானத்துக்கு வழி வகுக்கும் என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் ச.வெ.கிருபாகரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடருக்கு வருகை தந்திர…
-
- 0 replies
- 371 views
-