ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.யுத்தம் நடந்தபோது ஆட்சியிலிருந்தவர்கள், 2019இல் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பி இன்று தீர்மானத்தில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்ற…
-
- 2 replies
- 416 views
-
-
இலங்கை அரசின் முடிவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார் ரவிநாத் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபெத் டிச்சி பிஸ்ல்பெர்கரை (Elisabeth Tichy-Fisslberger) சந்தித்த வெளியுறவு செயலாளர், இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து தகவல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர…
-
- 0 replies
- 681 views
-
-
நான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னைத்துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நேற்று -22- இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமாம். சரி …
-
- 0 replies
- 445 views
-
-
தற்போது செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகவே காணப்படும் என மலேஷியா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு மலேஷிய சட்ட மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு பதிலளிக்கும் வகையில் மலேஷிய உள்துறை அமைச்சர் Muhyiddin Yassin இதனை தெரிவித்துள்ளார். இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலிலேயே உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மலேஷிய ஆளும் பக்காத்தான் ஹரப்பன் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சி…
-
- 0 replies
- 335 views
-
-
கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென அக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்ப…
-
- 1 reply
- 370 views
-
-
இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன. பிரித்தானியா, சுவிஸ்,கனடா ஆகிய நாடுகளில் உள்ள சட்டவல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் முதற்கட்ட பொறிமுறைகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு உத்தியோக பூர்வமாக தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பினை நாளை ஆரம்பமாகும் 43ஆவது கூட்டத்தொடரில் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டினை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினுள் மட்டுப்படுத்தி வைப்பதானால் எவ்விதமான பயனும் பாதிக்கப்…
-
- 2 replies
- 529 views
-
-
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களிற்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே, சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது. அமெரிக்காவை பின்பற்றி ஏனைய நாடுகளும் தடைகளை விதிக்குமென எதிர்பார்க்கிறோம். ஒருவருக்கல்ல, இன்னும் பலரிற்கு தடைகள் வரலாமென எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர் “ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை விலகுவதால் வலுவிழக்காது. இந்த தீர்மானங்கள் இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஏற்கனவே இலங்கை எதிர்ப்பு தெரிவித்தபோதும், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது! இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் தென்கிழக்கில் உள்ள துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே இந்த மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த மீனவர்கள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுகள…
-
- 1 reply
- 516 views
-
-
சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு! by : Jeyachandran Vithushan பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவ…
-
- 22 replies
- 1.6k views
-
-
காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா அரங்கினுள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளன…
-
- 2 replies
- 399 views
-
-
புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிரீட் வீடுகள் அமைக்கும் திட்டம்- யாழில் ஆரம்பம்! by : Litharsan புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிரீட்டிலான நிரந்தர வீடுகள் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்படும் குறித்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அங்கஜன் இராமநாதனின் பங்கேற்பில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்-மயிலிட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்…
-
- 4 replies
- 748 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில், ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இதேவேளை, இன்று மாலை 5மணிக்கு நாடாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன்போது மாவட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்ப…
-
- 1 reply
- 810 views
-
-
புதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என இந்திய மத்திய …
-
- 9 replies
- 2k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித…
-
- 10 replies
- 848 views
-
-
யாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம் -குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்க தீர்மானம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் பகிடிவதை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணைக்கு மேலதிகமாக குற்றச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழில்நுட்பப்பீட நிர்வாகத்தால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புத…
-
- 1 reply
- 808 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பததை கோரியுள்ளோம் எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்தர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புககளும், தன்டனைகளும், எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன. சட்டக்கோவையை படித்தவர்ககளுக்கு நன்கு தெரியும். அரச காணி என்றபேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும், பூர்வீக காணிகள…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 19ஆம் தேதி விசேட அறிக்கையொன்றின் ஊடாக இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார் இதையடுத்து, மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடந்த 19ஆம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் (பிப்ரவரி 20)தெரிவித்திருந்தார். 30/1 தீர்மானம் பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கையின் இணை அனுசரணையில் ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையே 30/1 தீர்மானமாக…
-
- 1 reply
- 760 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) 21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை பின்னணியிலிருந்து வழி நடத்தியதாக நம்பப்படும் நான்கு மாலை தீவு பிரஜைகளைக் கைது செய்ய சி.ஐ.டி.யின் தனிப்படையொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ள சி.ஐ.டி., சர்வதேச பொலிஸாருடன் இணைந்து அவர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனைய இருவர் குறித்த தகவல்களையும் சர்வதேச பொலிஸாரின் தகவல் கட்டமைப்பு ஊடாக பகிர்ந்து தேடி வருகின்றனர். இந்த நான்கு மாலை தீவு பிரஜைகளும் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில், அல்லது அதனை அண்மித்த நடகளில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரானின் பயங்கரவாத கும்ப…
-
- 1 reply
- 375 views
-
-
நிதி நடவடிக்கையில் தொடர்ந்தும் முதல்நிலை பெறும் வடக்கு மாகாணம் இலங்கையில் உள்ள மாகாணங்களின் நிதி நடவடிக்கையில் வடக்கு மாகாணமே தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்று விருதினைப் பெறுகின்றது. 2016, 2017ஆம் ஆண்டுகளில் மாகாணத் திணைக்களங்களின் கணக்கியலில் வடக்கு மாகாணமே முதலிடம் வகித்த நிலையில் மூன்றாம் முறையாக 2018ஆம் ஆண்டும் வடக்கு மாகாணமே முதலிடத்தை பிடித்துள்ளது. இதேநேரம் 2017ஆம் ஆண்டு 95.09 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2018ஆம் ஆண்டு இன்னும் முன்னேற்றம் அடைந்து 97.75 புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதலிடம் பிடித்தமைக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத்த…
-
- 2 replies
- 603 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்கப்போகும் பெண் வேட்பாளர் இலங்கை அரசியலில் அடுத்த பெரும் பரபரப்பு நாடாளுமன்ற தேர்தல். இதில் கட்சிகள் தம் சார்பு வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண் வேட்பாளர்களையே தெரிவு செய்வதில் எந்த கட்சிக்கும் பெரும் பிரயத்தனம் இருக்கவில்லை ஆனால் ஆளுமையான பெண் வேட்பாளர்களை தெரிவுசெய்வதில் ஒவ்வொரு கட்சியும் பெரும் பகீரத பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது . அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் உறுப்புரிமை பெற்று கட்சியில் மகளீர் அணி தலைவியாக செயற்படும் திருமதி மதினி நெல்சன் அவர்களை இம்மமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் யாழ்மாவட்டத்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
(ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அதற்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை. பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கவுமில்லை என்றும் வெ ளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். ஜெனிவா மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் 26 ஆம் திகதி வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவ…
-
- 2 replies
- 403 views
-
-
வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம் வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ் பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர். இதனால் சை…
-
- 21 replies
- 1.5k views
-
-
2009 ற்கு பின்னர் எல்லாரும் பொட்டம்மானாக மாறியதால் தான் பல பிரச்சனைகள்
-
- 1 reply
- 364 views
-
-
குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இலங்கையின் இராணுவதளபதிக்கு எதிராக தடைகளை விதிப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளாலும் ஆதரிக்கப்படும் இயற்கை நீதிக்கு இதுமுரணான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையை அதன் இறைமை பாதுகாப்பு தேசிய பெருமை ஆகியவற்றை பேண அனுமதிக்கும், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடக்கும் கௌரவமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதே இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின்; நோக்கம் என அமெரிக்காவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். <p>அமெரிக்கா தனது படையினர் குறித்து எப்படி பெருமிதம் கொள்கின்றதோ இலங்கையும் அவ்வாறே தனது படையினர் குறித்து பெருமிதம் அடைகின்றது …
-
- 1 reply
- 349 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள், பிரச்சினைகள் வரும் என பொய் சொன்னவர்கள் இன்று வாயடைத்துப்போயுள்ளனர். அந்தளவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை அனைத்து மக்களும் போற்றுகின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார். ஸ்டேண்ட் அப் வித் பிரசிடண்ட்“ ( ஜனாதிபதியை பலப்படுத்துவோம் வேலைத்திட்டம்) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இப்போது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் சேர்ந்து இனவாத கட்சிகளை ஒதுக்கி தேசிய ரீதியில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், அற…
-
- 2 replies
- 583 views
-