ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
ஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு! by : Jeyachandran Vithushan நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) அறிக்கைவெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை இணைந்து இழைத்த வரலாற்று துரோகத்தின் காரணமாகவே இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இல…
-
- 0 replies
- 295 views
-
-
விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் – செ.கஜேந்திரன் விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வர வைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருகிறார் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.இன்று விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றார். கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலைபோய்விட்டதாக கூறுகின்றார். ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வை…
-
- 1 reply
- 392 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றிய சீனப் பெண் முற்றாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் Feb 19, 20200 கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சைப் பெற்றுவந்த சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இவரின் உடலில் இருந்த வைரஸ் முற்றாக நீங்கியுள்ள நிலையில் இவர் முற்றாக குணமடைந்துள்ளார். இதன்படி இன்று முற்பகல் வைத்தியசாலையிலிருந்து அவர் வெளியேறி சென்றுள்ளார். வைத்தியசாலையிலிருந்து வெளியேறி செல்லும் போது வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அவரால் நன்றி தெரிவிக்கப்பட்டது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்-தொற்றிய-…
-
- 0 replies
- 248 views
-
-
கிழக்கு ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடு: ஜனாதிபதியிடம் கோரிக்கை! பல இனங்கள், பல மதங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழிகள், பல கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன. கிழக்கில் தமிழர் 40வீதமும், முஸ்லிம்கள் 37வீதமும் சிங்களவர்கள் 23வீதமும் வாழ்ந்து வருகின்றார்கள். கடந்த பல வருடங்களாக இம்மாகாணத்தில் ஆட்சியாளர்களின் பக்கச்சார்பான செயற்பாடுகளினால் சில அரச நிர…
-
- 0 replies
- 347 views
-
-
அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது! ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார். புதிய கூட்டணி மற்றும் அதன் சின்னம் குறித்து இறுதி முடிவை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கூடியது. குறித்த செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த மாதம், இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவ…
-
- 0 replies
- 281 views
-
-
சாய்ந்தமருது நகரசபை 2022, மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியானது. 1987 ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 உள்ளூராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் நவம்பர் எழுச்சி, டிசம்பர் புரட்சி என பல்வேறு போராட்டம் நடாத்தியதுடன், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகரசபைக்க…
-
- 9 replies
- 939 views
-
-
மிகவும் கெட்ட பெயரெடுத்த தளபதிகளில் ஒருவரை இராணுவத்தளபதியாக நியமித்தபோது அதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் எவ்வாறு நினைத்திருக்க முடியும்? இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்திருக் கும் பயணத்தடை தொடர்பில் பி.பி. சி.யின் முன்னாள் செய்தியாளரும், இலங்கையில் பாரிய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக வாதி டும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரான்சிஸ் ஹரிஸன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். 'இராணுவத்தளபதியா கவும் பின்னர் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் சவேந்திர சில்வாவை பதவியுயர்த்திய இலங்கை அரசாங்கத்தின் செயல் சர்வதேச சட…
-
- 2 replies
- 534 views
-
-
வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். …
-
- 1 reply
- 651 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை..! சம்மந்தன், சுமந்திரனுக்கு எச்சாிக்கை.! தமிழீழ விடுதலை புலிகளின் கொள்ளைகளை காவிக் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கா க சம்மந்தன், சுமந்திரன் போன்றவா்கள் அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அமைச்சா் லக்ஸ்மன் யாப்பா அபேவா்த்தன கூறியுள்ளாா். அரசியல் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தொிவித்துள்ளார் .அரசியல் தீர்வு குறித்து கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை…
-
- 0 replies
- 473 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) அமெரிக்காவினால் விசா வழங்கமால் மறுக்கப்பட்டதில் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது இதுதொடர்பாக பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அது பற்றி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்காகும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போதைய இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். https:/…
-
- 0 replies
- 311 views
-
-
இலங்கை அரசாங்கமானது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனா சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா நேற்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்…
-
- 1 reply
- 359 views
-
-
-எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லூரி மாணவனும் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் தர்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே இரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவர், வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உள்ளே அழைத்து வந்து, மோதலில் ஈடுபட்டுள்ளார். இதனை அவதானி…
-
- 2 replies
- 722 views
-
-
கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் 50 ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பெரும்பான்மை பிரதிநிதிகளாக உலகம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டு அரசுகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு கட்சி. 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நாங்கள் 2011ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 254 views
-
-
கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியாது…
-
- 1 reply
- 351 views
-
-
சஜித் பிரேமதாசவை கூட்டமைப்பினர் பின்பற்ற வேண்டும்- பந்துல சஜித் பிரேமதாச கொண்டுள்ள நாட்டுப்பற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “பிரிவினைவாதத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறியாக இருக்கின்றனர். இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்ப…
-
- 1 reply
- 634 views
-
-
30/1 பிரேரணையில் இருந்து விலகத் தயார் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 30/1 பிரேரணையிலிருந்து விலக அரசாங்கம் தயாராகி வருகின்றதென தெரிவிக்கும் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில் 2015, 2016 ஆம்…
-
- 1 reply
- 379 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி! இலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்…
-
- 2 replies
- 676 views
-
-
ஸ்ரீலங்கா இராணுவ உறுப்பினருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்! Ronees முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி மூதூர் பாரதிபுரத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை தொடர்பில் குறித்த முன்னாள் இராணுவ உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்…
-
- 0 replies
- 610 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை – பாலித by : Dhackshala ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாது போய்விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 524 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து இந்தியா வரலாற்று தவறை இழைத்துவிட்டது: விக்னேஸ்வரன் ஆதங்கம் “இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது” என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். “இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்…
-
- 3 replies
- 555 views
-
-
யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், அரச அதிபர் சமன் பந்துலசேன, வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன், ஒருங்கிணைப்புகுழு தலைவரின் இணைப்பாளர் க. கணேசலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஜந்து மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தால் வளாகத்தில் கல்வி பயிலும் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் அதனை அண்டிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயனடையவுள்ளனர்.குறித்த அம்மாச்சி உணவகம் வவுனியா வளாகத்தினுள் அமை…
-
- 3 replies
- 1k views
-
-
நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு, அவர்களைத் தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்! சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கும் கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் “சாய்ந்தமருது தனி பிரதேச செயலக பிரிவாக பிரித்தமை உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுதொடர்பில் இன்று பலரும் அச்சமடைந்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எதிர்ப்பினை வெள…
-
- 0 replies
- 461 views
-
-
143 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்…
-
- 0 replies
- 306 views
-
-
வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது. இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக வர்த்தகம…
-
- 3 replies
- 779 views
-