Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது இனத்திற்கு விரோதமாக இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு எமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளீர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கு சமஸ்டி கட்டமைப்பில் ஒரு தீர்வு வரவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறி…

    • 3 replies
    • 612 views
  2. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை – மக்களே அவதானம்! இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் இதனை ஏற்ற வகையில் கருவிகளை பயனபடுத்தி பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள். இது வடமாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் கிளிநொச்சிக்கு கீழாக அநுராதபுரம…

  3. எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் 4 ஆவது அமர்வு ஜன­வரி 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த அமர்வில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் அர­சாங்க கொள்கை பிர­க­டனம் இடம்­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­ட­னத்­தை­ய­டுத்து பிற்­பகல் 12.30 மணிக்கு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜன­வரி 7 ஆம் திக­தி­யி­லி­ருந்து சபையின் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய முறை­மைகள் குறித்து அவ­தானம் செலுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஜன­வரி மாதம் 3 ஆம் திகதி பிற்­பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் பாரா­ளு­மன்ற அமர்வு கூட­வுள்­ளது. இதன்போத…

    • 0 replies
    • 182 views
  4. கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா (பாறுக் ஷிஹான்) கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார். இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கருணா அம்மான், “அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது. இங்கு பயணிகளும் வாகன சாரதிகளும் பல்…

    • 162 replies
    • 15k views
  5. தமிழ் பிரிவினைவாதத்தை வளர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உடனடியாக புனர்வாழ்வளிக்க வேண்டும்-மாகல்கந்தே சுதந்த தேரர் தமிழ் மக்களை வைத்துக் கொண்டு ஏதாவது புரட்சி ஏற்படுத்த முயன்றால் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஏற்பட்ட நிலைதான் சுமந்திரனுக்கும் ஏற்படும். மேலும் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றும் கூட்டமைப்பின் உறுப்பினர் வெளியிடும் கருத்துக்கள் பாரதூரமானவை என பிக்குகள் என்ற ரீதியில் கண்டிக்கின்றோம் என சிஹலே ராவய அமைப்பின் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தமிழ் பிரிவினைவாதத்தை போசிக்கும், தமிழ் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும், சமஷ்டி கேட்கும், வடக்…

  6. காணிகளில் குடியேறாதவர்களின் காணிகளை சுவீகரியுங்கள் - வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு 800 இற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதனால் ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்க…

  7. தேசிய ஐக்கியம் பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கை-சஜித் பிரேமதாச அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது தேசிய ஐக்கியம், பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கையாகும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அத்துடன் எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள நான் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு, எக்ஸா, சோஃபா ஆகிய சர்வதேச உடன்படிக்கைகளை இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார். பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும…

  8. மஹிந்தவை சந்திக்க தயாராகும் கூட்டமைப்பு பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் சந்­திப்­பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கி ­வ­ரு­வ­தாக கூறப்படுகின்றது. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாடாளுமன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்யப்­பட்ட நிதியின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்கள் நிறை­வு­ பெறாமல் காணப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். எனவே, குறித்த அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்டை முழு­மை­யாக வழங்கி, அவற்றை நிறை­வு பெறச்செய்ய வேண்டும் என்­பதில் கூட்ட­மைப்பு அக்கறை காட்டி வருதாக கூறப்படுகின்றது. இந்­நி­லை…

  9. பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் December 26, 2019 பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப…

    • 10 replies
    • 2.1k views
  10. நாட்டில் பௌத்தத்தை இல்லாதொழிக்க திட்டம் – மஹிந்த சாடல் வரலாற்றைத் திரிபுபடுத்தி, நாட்டில் ஐக்கியத்தையும் பௌத்தத்தையும் இல்லாதொழிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும். இதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் அவதானித்துக் கொண்டுதான் வந்தோம். பௌத்தர்களைக் கொண்டே பௌத்தத்திற்கு எதிராக செயற்பட்டார்கள். சிங்களவர்களின் உரிமை எதிர்க்கப்பட்டது. இது ஒரு கட்டத்தி…

    • 2 replies
    • 799 views
  11. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" - நடிகர், ஜெயபாலன்

  12. கொழும்பு வருகிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் DEC 28, 2019 | 4:38by கார்வண்ணன்in செய்திகள் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சர்க்ஹாரோவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் கொழும்பு வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். “இதன் போது, ரஷ்ய – சிறிலங்கா உறவுகளின் தற்போதைய நிலை, அரசியல் பேச்சுக்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், வர்த்தகம், பொருளா…

  13. வடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார DEC 28, 2019 | 4:43by கி.தவசீலன்in செய்திகள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார். ”சிறிலங்கா அதிபரின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோருவோம். மேலும் 2020 ஜனவரி 3 ஆம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று அதிபர் ராஜபக்கவிடம் கேட்டுக்கொள்கிறோம். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/12/28/news/41717

  14. அமைச்சர்களுக்கான வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் – தகவல் கசிவு முன்னாள் அமைச்சர்கள் ஐந்துபேர் இதுவரையில் அமைச்சர்களுக்குரிய உத்தியோகபுர்வ இல்லங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்களான, ராஜித சேனாரத்ன, பி. ஹரிசன் மற்றும் கயந்த கருணாதிலக்க உட்பட ஐந்து பேர் இவ்வாறு அமைச்சர்களுக்கான உத்தியோகபுர்வ இல்லங்களை ஒப்படைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெர்ணாந்து மற்றும் நிரோசன் பெரேரா உட்பட முன்னாள் அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களுக்கான வாசஸ்தலங்களை ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. …

  15. கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல் DEC 28, 2019 | 4:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு எதிர்வரும் 30ஆம் நாளே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ராஜித சேனாரத்னவை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டார். அதற்கமைய கொழும்பு நீதி…

  16. பொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதன்போது முக்கியமாக வேட்பாளர் பட்டியலில் ஆசனப் பங்கீடு குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில், வேட்பாளர் பட்டியலில்…

  17. (ஆர்.யசி) நாடு பாரிய நெருக்­க­டிக்குள் உள்­ளது. ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி கடந்த காலங்­களில் 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி மாதத்தில் ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்க கொள்கை அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் 6 வீத வளர்ச்சி அல்­லது 6.5 வீத வளர்ச்­சியை நோக்கி பய­ணிக்க முடியும் என அர­சாங்கம் கூறு­வ­தா­கவும் அது எந்­த­ளவு சாத்­தியம் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும் எனவும் மத்­திய வங்கி ஆளுநர் பேரா­சி­ரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் தெரி­வித்தார். 2020 ஆம் ஆண்­ட…

  18. மிலேனியம் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் – சஜித் மிலேனியம் சவால் நிதிய ஒப்பந்தம் மட்டுமல்லாது எக்சா, சோபா, இலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் என இலங்கைக்கு எதிரான அனைத்து ஒப்பந்தங்களையும், ஸ்ரீ மா போதிக்கு முன்னாள் துண்டுத் துண்டுகளாக கிழித்தெறிவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் பெரும்பான்மையானோர், நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால், இந்த சர்ச்சை எப்படி ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் வந்தது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. இவ்…

  19. பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71728 முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு…

    • 10 replies
    • 2.5k views
  20. குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் மகேஷ் சேனநாயக்க! முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஷ் சேனநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. டுபாயிலுள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அவர் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/குடும்பத்துடன்-நாட்டை-வி/

    • 1 reply
    • 464 views
  21. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் போலியான செய்திகள் – அங்கஜன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ்ப்பாணத் தில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “வருமானம் குறைந்த குடும்பங்களான சமுர்த்தி பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய அரசின் வேலைத்திட்டம் என இரு ஆவணங்கள் முகநூலில் பலரால் பரப்புரை செய்வதில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரின் கடிதம் வருடாந்தம் மாவட்ட செயலகத்தினால் வழமையாக வேலையற்றோரின் கணக்கெடுப்பைப் பெறுவதற்காகப் பிரதேச செயலாளர்…

  22. பேசுவதற்கான ஜனநாயகம் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது-சுரேஷ் பிரேமச்சந்திரன் வெள்ளைவான் விவகாரம் என்பது யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து அதற்குப்பின்னரும் தொடர்ந்துதான் நடந்தது.இந்த வெள்ளைவானில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் நூற்றுக் கணக்கில் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறான சூழலில் வெள்ளைவான் என்ற கருத்து மீளவும் எழுந்துள்ளது.எனவே பேசுவதற்கான ஜனநாயகம் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என ஈ.பி.ஆர்.எல.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தான் விரு…

  23. அரசாங்கம் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது- அநுர சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முனையுமானால் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால்,வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது. அத்துடன் ஜனாதிபதியின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளோம். ம…

  24. வௌ்ளை வான் சந்தேகநபர்கள் இருவரினது குரல் மாதிரிகள் பரிசோதனை? தமிழர்களை வெள்ளை வாகனத்தில் கடத்தி முதலைக்கு இரையாக்கியதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த இருவரினதும் குரல் மாதிரிகளை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியப்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தேர்தல் பிரசாரங்களின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இருவர், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். இதனையடுத்து தேர்தலின் பின்னர் மஹர பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர்…

  25. மாத்­தளை நாவுல பிர­தேச விஹாரை ஒன்­றி­லி­ருந்த மன்னர் காலத்து விலை­ம­திப்­பற்ற கஜ­முத்­துக்கள்இரண்டைத் திருடி விற்­பனை செய்ய முயற்­சித்த பௌத்­த ­பிக்கு ஒருவர் உட்­பட ஐவரைக் கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர்.அதி­ர­டிப்­படை பிரிவின் உளவுப் பிரி­வுக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு கம்­பளை ஹெட்­காலை பிர­தே­சத்தில் வைத்து சந்­தேக நபர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டியை நிறுத்தி சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போதே குறித்த கஜ முத்­துக்கள் இருப்­பது கண்டு பிடிக்­கப்­பட்டு கைப்­பற்­றப்­பட்­டன.இத­னை­ய­டுத்து முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்த பௌத்த பிக்கு உட்­பட ஐவ­ரையும் அதி­ர­டிப்­ப­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.