Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி …

    • 0 replies
    • 354 views
  2. புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷ அதிக வாக்குகள் வித்தியசத்தில் முன்னிலை வகிக்கின்றார். இந்நிலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ, “ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது வாழ்த்துக்கள். ஜனாதிபதி கோட்டாபய, நம் பொது தாய்நாட்டில், இலங்கையர் அடையாளத்தை பலப்படுத்தி, உயர்த்துவார் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். http://athavannews.com/கோட்டாபய-ராஜபக்ஷவிற்கு-அ/

  3. தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/69140 மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ, அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் நாளை (18) முற்பகல் 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மறபகல-11-மணகக-கடமகள-ஆரமபம/175-241104 ஜனாதிபதி கோட்டாபய ந…

    • 3 replies
    • 531 views
  4. ஸ்ரீலங்காவின் அரசியலில் தீர்க்கமான சக்தியாக இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்காது என்ற தெளிவான பதிலை இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச கூறினார். நடைபெற்றுமுடிந்த ஸ்ரீலங்காவின் 08ஆவது ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலை வகித்து வருகின்றார். இந்த நிலையில், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, இந்த வெற்றி தொடர…

    • 2 replies
    • 452 views
  5. நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறை நடத்த உதவியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இதுவரை காலமும் தன்னுடன் அரயல் பயணத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்ட…

    • 2 replies
    • 700 views
  6. கோத்தாபயவிற்கு இந்திய பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து (நா.தனுஜா) நாட்டின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பதுடன், பிராந்தியத்தின் சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்து, ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில் குறித்த டுவிட்டர் பதிவில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோதத்தாபய ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்து…

    • 5 replies
    • 932 views
  7. ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் சாய்ந்தமருது மக்களால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது. இன்று காலை 10 மணியளவில் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து வரவேற்று கொண்டாடிய சாய்ந்தமருது மக்கள் மற்றும் இளைஞர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பதாதைகளை ஏந்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பவனி வந்துள்ளனர். இதன்போது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இத்தாக்குதலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரின் வீட்டின் முன்னால் நின்ற அவரது ஆதரவாளர்கள் என நம்பப்படுபவர்களால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை தடுக்க முற்பட்டவேளை குறித்த பிரதேசத்தில் சற்று பதற்றம் உருவாக…

  8. அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை கொண்டாடும் முகமாக கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடியதை காணமுடிந்தது. அத்துடன் இன்றைய தினம் பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடிரென அமைக்கபட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நாட்டின் 7ஆவது தலைவரை தேர்ந்தெடுக்கும் சனாதிபதி தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினர் முன்னர் அமைத்திருந்த சாவடிகளிலிருந்து மீள அழைக்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று மீண்டும் புதிய சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுததப்பட்டு சோதன…

    • 0 replies
    • 445 views
  9. எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்- கோட்டாபய In இலங்கை November 17, 2019 10:46 am GMT 0 Comments 1213 by : Yuganthini என்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜகிரியாவிலுள்ள தேர்தல் ஆணைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதை இட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அந்தவகையில் குறித்த வெற்றியை பிளாஸ்டிக் மற்…

  10. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வடக்கு, கிழக்கு மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற சஜித் 46 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசஜித் பிரேமதாஸ இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் ஒரு தரப்பிற்கும், பெரும்பான்மை சிங்கள சமூகம் ஒரு தரப்பிற்கும் ஆதரவு வழங்கியுள்ளமையை காண முடிகின்றது. இலங்கை வ…

  11. தமது பிள்ளைகளை கொண்டு சென்று விட்டு தற்போது இல்லை என கூறுகிறார் வரதராஜபெருமாள்.1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமற் போயினர். அசோகா ஹோட்டலில் பெருமளவில் கொலைகள் நடந்தன. அவர்களின் குழு மண்டையன் குழு எனவும் அழைக்கப்பட்டனர். உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணையை பற்றி பயப்படுகிறார். ஏனெனில் அவரும் அவரை சார்ந்தவர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச சிறைக்கு செல்ல நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோத்தபாயவுக்கு எந்தவித புரிந்துணர்வும் இல்லாமலேயே நாம் ஆதரவு கொடுத்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு சாத்தியமே இல்லை.தான் துப்பாக்கி சூடு பயிற்சியும் எடுக்கவில்லை. தனக்கு சுட…

    • 10 replies
    • 1.6k views
  12. தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பிரச்சினைகள் ஏற்படலாம் – அமெரிக்க தூதரகம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பெரிய கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுற்றுலா தளங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்கும…

    • 8 replies
    • 835 views
  13. நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கிய முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுமக்களுக்கு ஆற்றிய இறுதி பிரியாவிடை உரையில் தெரிவித்திருக்கிறார். ஊழலற்ற அமைச்சரவையொன்றை உருவாக்கிக் கொள்வதே நாட்டின் புதிய ஜனாதிபதி எதிர்கொள்கின்ற முதலாவது சவாலாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ஏற்கனவே வென்றெடுத்த ஜனநா…

    • 5 replies
    • 614 views
  14. புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இரவு 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச போரூந்தை மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு தடுத்து நிறுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் சென்றிருந்தார். தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/131273

    • 5 replies
    • 666 views
  15. இறுதியுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத்தின் மூன்று முக்கிய தளபதிகளின் பிள்ளைகளின் உயர்கல்வி விசாக்களை மூன்று நாடுகள் நிராகரித்துள்ளன. உயர்கல்வி நோக்கத்திற்காக அவர்களின் பிள்ளைகள் சமர்ப்பத்த விசாக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானிய விசாக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் மனித உரிமைமீறல், போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் இந்த மூன்று தளபதிகளும் மேற்படி நாடுகளிற்கு செல்ல ஏற்கனவே விசா மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/86936/?fbclid=IwAR3hLzsrLPHrqfkV2Wn78AadS2CX-iXgnyd4VqH37iTe6LtNKbzhGD-hGuE

    • 4 replies
    • 732 views
  16. இன்று காலை 10 மணி வரையான 3 மணித்தியாலங்களில் 69 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சாரம் மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 49 முறைப்பாடுகளும் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இரு முறைப்பாடுகளை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. http://athavannews.com/3-மணித்தியாலங்களுக்கு-69-வ/ கல்முனையில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படும் மக்கள்! நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்…

  17. (இராஜதுரை ஹஷான்) மதகுருமார்களையும், மத தலைவர்களையும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.மதகுருமார்களை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை தற்போது பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதமாக அமையாது. அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் கட்சியிகளின் செயற்பாடுகள் குறித்…

  18. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று நவ…

  19. 'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள் ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவத…

  20. Published by J Anojan on 2019-11-16 23:31:17 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாக்கொண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் வெளிவரும் தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்கள் அதிகாரபூர்வமானதல்ல எனவும் தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/69053 முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் - காரணம் கூறுகிறார் தேசப்பிரிய 371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இறுதி செய்யமுடியாதுள…

    • 0 replies
    • 351 views
  21. யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து இன்று முற்பகல் 10.35 மணிக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு இந்தியா நோக்கி விமானமொன்று பயணிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிப்பதற்காக ஒரு வழி விமான கட்டணமாக 12,990 ரூபாய் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் விமான சேவைகள்…

  22. யாழ் நகரில் தம்பிராசா மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் யாழ்ப்பாணம் நகரில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த தம்பிராசா சென்ற வேளை எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரதான அரசியல் கட்சியொன்றின் குழுவொன்றே தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, தம்பிராசா தெரிவித்துள்ளார்.மேலும் இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-நகரில்-தம்பிராசா-மீ/

    • 2 replies
    • 481 views
  23. பொதுஜன பெரமுனவிற்கு எதிராக அதிகளவு தேர்தல் முறைப்பாடுகள்…. November 16, 2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு எதிராக 130 முறைப்பாடுகளும், புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 45 முறைப்பாடுகளும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராகமூன்று முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று சட்டவிரோத பிரச்சாரமே அதிகளவில் இடம்பெற்றது இது தொடர்பில் 67 முறைப்பாடுகள் கிடைத்துள்…

  24. ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு வடக்கின் சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பழைய வீதித் தடைகளை அகற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு பிரதான வீதி தடுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் ணனுமதி இல்லாமல் வீதித் தடையை அமைந்தமை சட்டவிரோதமானது” என்பதால், பாலாலி மற்றும் பாலாலி பொலிஸ் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ள வீதித் தடுப்புகளை அகற்றுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக நேற்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. இருப்பினும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் வீதித் தடைகள் அகற்றப்பட்டதாகவும், பொலிஸாரின் அறிவுறுத்தலின் கீழ் அல்ல என்றும்…

  25. டெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இவ்விடயம் தொடர்பில் ரெலோவின் ஒருபகுதியினர் சிறிகாந்தவினதும் அவர் சார்பானவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர் இந்நிலையில் வவுனியாவில் அவசரமாக கூடிய பதினொரு பேர் கொண்ட ரெலோவின் உயர்மட்ட குழு கட்சியின் செயலாளர் பதவியிலிருந்தும…

    • 7 replies
    • 962 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.