Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் இன்று! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பணத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நண்பகல் 2 மணிக்கு இந்த தேர்தல் பிரசார கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன. மேலும் தென்னிலங்கையில் இருந்து இளைஞர்கள் வடக்கிற்கு அழைத்து வரப்பட்டு வாடகை…

    • 11 replies
    • 1.9k views
  2. வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன – நீதிமன்றில் மனு தாக்கல் வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகள், தொல்பொருள் அடையாளமிடப்பட்ட இடங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் மண்டலங்கள் மற்றும் டபிள்யூ.இ.வெருடுவகே என்பவர் சார்பாக சட்டத்தரணி தர்சன வேருவுககேயினால் நேற்று (திங்கட்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவ தளபதி சவேந்திர சில்வா, பதில் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன, முல்லைத்தீவு மற்றும் உப்புவேளி, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, பு…

  3. காணி அளவீடு நிறுத்தம் October 28, 2019 மாதகல்- பொன்னாலை வீதியில் தனியாா் காணியை கடற்படையின் தேவைக்காக 4 ஏக்கா் காணியை சுவீகாிக்கும் நடவடிக்கை பொதுமக்களுடைய கடுமையான எதிா்ப் பினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிந்த உள்ளூர் மக்கள் இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் திரண்டனர். வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அங்கு வருகை தந்தனர். இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பக…

  4. ஜனாதிபதி தேர்தலில் சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்துவிட்டு வேட்பாளர்களுடனும் பேச முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர் என்று வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார். வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 13 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இந்த ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் கோரிக்கைகளை விட்டுவிட்டு யதார்த்த பூர்வமாக யார் சில விடயங்களை …

  5. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் பிரதிவாதிகளான பிள்ளையான் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸதீன் முன்னிலையில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார்…

    • 0 replies
    • 288 views
  6. வவுனியாவில் உறங்கச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியான பேரின்பநாதன் (35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை தீபாவளி தினமான நேற்று திடீரென மரணமானார். வவுனியா பறண்நட்டகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடிவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளார்.இதன்போது உறங்கிய சில நிமிடங்களில் அவரிடம் மாற்றம் ஒன்றை உணர்ந்த மனைவி அவரை எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை. இந்நிலையில் அயலவர்களை அழைத்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலு…

    • 1 reply
    • 476 views
  7. வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு வழிபடச் சென்ற பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிலில் தப்பிச் சென்ற இரு இளைஞர்களை துரத்திச் சென்றபோதிலும் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வாகனம் ஒன்றில் வந்தவர்களிடம் சங்கிலி திருடப்பட்ட விடயங்களைத…

    • 1 reply
    • 518 views
  8. ஜனாதிபதித் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு அதற்கான கருமங்கள் தொடர்கின்றன… இரா.சம்பந்தன் October 27, 2019 எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் தமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிக்க உள்ளதாக என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் …

    • 3 replies
    • 711 views
  9. ஐந்து தமிழ்க்கட்சிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன – முக்கிய தீர்மானம் எட்டப்படலாம் என நம்பிக்கை! யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக, தமிழ் மக்களின் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க்கட்சிகளும் இன்று(திங்கட்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்…

    • 3 replies
    • 734 views
  10. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். மதமாற்றத்தால், மக்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளும், மதம்மாறிச் சென்றவர்கள், ஏற்கெனவே, கடைபிடித்த மதத்தை நிந்திப்பதனால், வேண்டாத கசப்புணர்வுகள…

  11. க.அகரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளதுடன், கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளது. வவுனியாவில் இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய செயற்குழு சுமார் நான்கு மணி நேரங்களாக கூடி ஆராய்ந்து 11 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க தீர்மானித்துள்ளனர். இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பரவலாக்கல் முறையிலான அதிகார பரவலாக்கல் வழங்கப்படவேண்டும். அத்துடன…

    • 0 replies
    • 484 views
  12. அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாடு அணிசேரா இயக்கத்தின் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 18 வது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகின்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன செவ்வாய்க்கிழமை அஸர்பைஜான், பாகு நகரை சென்றடைந்தார். அணிசேரா இயக்கத்திற்கான அஸர்பைஜானின் புதிய தலைமையின் கீழ் அக்டோபர் 25 முதல் 26 வரை நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு வழிவகுக்கும் ஆயத்த அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் அமைச்சர் மாரப்பன பங்கேற்கின்றார். ஆயத்த அமைச்சர்கள் மட்ட கூட்டமானது, அக்டோபர் 21 முதல் 22 வரை நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறுகின்றது. அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாடு ‘சமகால உலகொன்றின்…

  13. சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் – சஜித் அறிவிப்பு Oct 28, 2019 | 2:02by கார்வண்ணன் in செய்திகள் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன், அவரே சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக தொடருவார் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிவிற்றிகலவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நாவினால், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நில…

  14. அச்சத்தின் காரணமாகவே எதிரணி தெரிவிக்குழு அறிக்கையை சந்தேகிக்கிறது – ரவூப் ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் இரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (26) குருநாகல், சியம்பலாகஸ்கொடுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல…

    • 0 replies
    • 297 views
  15. அனுரகுமாரவின் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரம் Oct 28, 2019 | 2:07by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என்று, அந்த அமைப்பின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம், அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அவரது தேர்தல் அறிக்கையிலேயே, 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ நியமிக்கப்படமாட்டார்கள் என்றும் அ…

    • 0 replies
    • 204 views
  16. யாழில் தனியார் பேருந்து எரியூட்டப்பட்டது யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துதொன்று இனந்தெரியாதோரால் எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/யாழில்-தனியார்-பேருந்து/

  17. பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம்! ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, நான்கு மாகாணங்களின் ஆளுநர்கள் உதவிபுரிவதாக தெரியவந்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபட வேண்டுமென்றால், அவர்கள் தமது பதவிநிலைகளில் இருந்து விலகவேண்டும். இம்முறை தேர்தலில் தாம் சுயாதீனமாகவும் நடுநிலை வகிக்கப்போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பிரதிநிதி…

  18. தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் : மஹிந்த அணி நம்பிக்கை! தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என மஹிந்த அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பாரம்பரியமான அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும். போலியாக குற்றச்சாட்டுக்களுக்கு இம்முறையும் தமிழ் மக்கள் கவனம் செலுத்த கூடாது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பாக எத்தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்க முடியா…

  19. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு! ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளைவழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்காக அதிகளவானோரின் பங்களிப்பு ஆணைக்குழுவிற்குத் தேவைப்படுகிறது. உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேவையான வாகனங்கள் உட்பட ஏனைய வசதிகளை வழங்குவது பற்றி ஆணைக்குழு கவனம் செலுத்தியிருக்கிறது. இவர்களுக்குத் தே…

  20. சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை October 26, 2019 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்த மனித எச்சங்கள் முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்கும் நடவடிக்கைகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 20ம் திகதி சுதந்திரபுரம் கிராம பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதி மண்ணை எடுத்து மறுபகுதியில் கொட்டியபோது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டதனையடுத்து அப்பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்றையதினம் மனித எச்சங்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்கும…

  21. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்காமன் தங்கேஸ்வரி காலமானார் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொல்பியல் ஆய்வாளருமான கதிர்காமன் தங்கேஸ்வரி சற்று முன்னர் இயற்கையெய்தியுள்ளார். இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ளார். ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். 2010ம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால்,[2] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010 தேர…

  22. ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்றைய தீபாவளி பண்டிகை உறுதுணையாக அமைகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக்கொள்ளும் மானிட சமூகம் அவ்வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக இருந்து வருகின்றது. அதேபோல் மனிதர்களின் தீய குணங்களாக கருதப்படுகின்ற அகங்காரம், பொறாமை, கோபம், கு…

  23. தீபாவளி தினமான இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், பல நாட்களாக நாங்கள் வீதிகளில் போராடிவருகிறோம். எமக்கான நீதியை வழங்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதனை பெற்றுக்கொள்ளலாம் என்று பேரம் பேசும் செயற்பாட்டில் தமிழ்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அத்துடன் இனத்தை அழித்த மகிந்தவின் மகனிற்கு எமது அரசியல்வாதிகள் ஆதரவு அழிப்பது கவலை அளிப்பதுடன் 2017 ஆம் ஆண்டு தீர்வு வரும் என்று…

    • 0 replies
    • 348 views
  24. பல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன. மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள…

  25. ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தை நிறுத்தினார் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, நாடு முழுவதும் தனது பிரச்சார பேரணிகளை நடத்துவதனை இடைநிறுத்தியுள்ளார். அவரது பிரச்சார பேரணிகளில் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாதமையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம், என்பது தொடர்பாக கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தனது பிரசாரத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் ஒருபோதும் பின்னிற்கவோ சளைக்கவோ மாட்டேன் எனவும் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athav…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.