ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளன. படையினர் வசமிருந்து விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு நாளை அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. நாளை காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் அண்மையில் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டபோது, மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை விடுவிக்கப்பட ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கிளிநொச்சி இராணுவ தலைம…
-
- 0 replies
- 215 views
-
-
(எம்.நியூட்டன், ஆர். யசி) யாழப்பாணத்தில் சர்வதேச விமானநிலையத்தை அமைத்து உலகத்தரத்துடன் இணைத்தது போன்று நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புத் தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டியில் 70 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை குறிப்பாக அரசியல் தீர்வுகள் ஏற்படவில்லை இப்போது தேர்தல் காலம் என்பதால் அதைப் பற்றி பேச விருப்பவில்லை எவ்வளவு விரைவாக எவ்வளவு ஆற்றல் திறனுடன் இந்த நாட்டின் அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவின் பணிப்பி…
-
- 0 replies
- 213 views
-
-
யாழ். நிகழ்வில், சஜித்தின் போஸ்டர்களுடன்... தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்லுண்டாய் வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டார். அந்நிகழ்வில் பிரதமருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியும் கலந்துகொண்டது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஒளிப்படங்கள் பொறிக்கப்பட்ட துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன. ஜனாதிபதி வேட்பாளர் எவருக்கு தமது ஆதரவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்காத நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இது பரப்புரை நிகழ்வு அல்லாமல் அரச முறை ந…
-
- 1 reply
- 387 views
-
-
2015 இல்ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை நியாயப்படுத்தி நிதியமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தான் ஜனாதிபதியானால் ஐநா தீர்மானத்தை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ள நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் மாதமளவில் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ள மங்களசமரவீர இலங்கை படையினர் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இழந்திருந்தனர் வர்த்தக வாய்ப்புகளும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ளார். தற்பெருமைக்காக முன்னெடுக்ப்பட்ட பல திட்டங்களிற…
-
- 0 replies
- 130 views
-
-
உலகிலேயே அதிகளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, தமது உயிரை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் பல இலங்கையர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றமையை காண முடிகின்றது. தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. யுத்த சூழ்நிலை மாத்திரமன்றி, அரசியல் பிரச்சினைகள் காரணமாக ஊடகவியலாளர்கள், செல்வந்தர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் பிறந்து, வெளிநாடுகளில் வாழ்ந்து வரு…
-
- 0 replies
- 215 views
-
-
(இராஜதுரை ஹஷhன்) ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக ஆவணங்களின் ஊடாக நிறைவேற்ற இடமளிக்க முடியாது என்றும் கூறினார். அத்துடன் அரசியல் நோக்கங்களை கொண்ட அரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம். அரசியலமைப்பின் 13 வது திருத்த உள்ளடக்கங்கள் அனைவருக்கும் ஏற்றால்போல் பாதிப்பின்றி செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/67110
-
- 0 replies
- 202 views
-
-
சரணடைந்தோர் எண்ணிக்கையில் குளறுபடி; 2994 பேர் மாயம் பா.நிரோஸ் யுத்தத்தின் போது, சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது தொடர்பில், தமிழ்மிரருக்கு உத்தியோகபூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சரணடைந்தோர் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவிப்புக்கும், தகவலறியும் சட்டத்தின் ஊடாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தகவலுக்கு அமையவும் 2,994 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில், எங்குமே கணக்கில்லை. இராணுவத்திடம் 13 ஆயிரத்து 784 பேர் சரணடைந்ததாகவும், அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், க…
-
- 1 reply
- 468 views
-
-
வடக்கின் 13 அம்ச கோரிக்கை : ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஓமல்பே தேரர் எச்சரிக்கை வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஐந்து ஒன்றிணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைக்கு நாட்டிலுள்ள எந்தக் கட்சி ஆதரவு வழங்குகின்றது என்பதை நாம் அவதானத்துடன் உள்ளோம் என தெற்கு மகா சங்கத்தின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். 13 அம்ச கோரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். இந்த நாட்டிலுள்ள எந்தவொரு கட்சிக்கும் இந்த அடிப்படைவாத, பயங்கரவாத, பிரிவினைவாத சிந்தனைக்கு ஆதரவு வழங்க முடியாது. குறைந்த பட்சம் இந்த கோரிக்கைகளை கையில் எடுத்து வாசிப்பதற்காகவாவது எந்தவொ…
-
- 1 reply
- 427 views
-
-
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக, ஐ.நா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவோம். ஆனால், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது. அந்த தீர்மானம் நாங்கள…
-
- 0 replies
- 251 views
-
-
கோட்டாபயவின் நழுவல் குறித்து சஜித் பகிரங்க விளக்கம் பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது எனவும், ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போருக்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை எனவும், இராணுவத் தளபதியே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதையும் கோட்டாபய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார் எனவும் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். இராணுவத்தினரைப் பாதுகாக…
-
- 0 replies
- 661 views
-
-
யாழ்ப்பாண விமான நிலையம் உள்நுழைவு, புறப்படுகைத் தளமாக பிரகடனம் Oct 17, 2019 | 5:35by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானை அனைத்துலக விமான நிலையங்களை, குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களின் கீழ், புறப்படுகை மற்றும் உள்நுழைவுக்கான புதிய தளங்களாக, சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் மூன்று புதிய உள்நுழைவு மற்றும் புறப்படுகைத் தளங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான பிரகடனம், உள்நாட்டு மற்றும் உள்விவகார மற்றும் மாகாணசபை…
-
- 0 replies
- 510 views
-
-
யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை பெருமைமிக்க தருணம் – எயர் இந்தியா தலைவர் Oct 17, 2019by அ.எழிலரசன் in செய்திகள் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என்று எயர் இந்தியா நிறுவத்தின் தலைவரும், எயர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை, யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “அலையன்ஸ் எயர் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாகவும், முதலாவது அனைத்துலக சேவையாகவும் யாழ்ப்பாணத்துக்கான சேவை அமையவுள்ளது. …
-
- 0 replies
- 690 views
-
-
யாழில் தரையிறங்கவுள்ள, முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர். இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது. இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 19 replies
- 1.4k views
-
-
யாழ். குடா நாட்டின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு! யாழ். குடா நாட்டின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற பெயரில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணயட்ட கங்ஹக் – யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம் யாழ். தீவகத்தில் நதி இல்லாமை அங்கு நீர் தட்டுப்பாட்டை தவிர்த்தல் மற்றும் வடமராட்சி களப்பிற்கு எல்லையில் உள்ள கிணற்று நீரின் உவர்ப்புத் தன்மையைக் குறைத்தல், அந்த பிரதேச விவசாய நடவடிக்கைளுக்கான நீர் விநியோகத்தை ஒரு வருடத்திற்க…
-
- 0 replies
- 748 views
-
-
இரண்டொருவரை போடவேண்டும்! ஒட்டுக்குழு சித்தார்த்தனிடம் உதவி கேட்ட சுமந்திரன்? தேர்தல் காலத்தில் இரண்டொருவரை போடவேண்டியுள்ளது.உங்கள் தரப்பு இன்னமும் ஆயுதங்களை மௌனிக்காமையால் அதற்கு உதவவேண்டுமென சித்தார்த்தனிடம் கோரிக்கைவிடுத்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இன்று ரணில் பங்கெடுக்கும் நிகழ்வொன்று யாழில் நடைபெற்றிருந்தது.நிகழ்வில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் யாழில் செயற்படும் டாண் தொலைக்காட்சி கோத்தபாயவின் தரகு தொலைக்காட்சியாக செயற்படுவதாக செய்தியாளர்களிடையே நையாண்டி செய்திருந்தார்.அதுவும் அத்தொலைக்காட்சியால் நேரடி அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த சுமந்திரன் அங்கே நின்றிருந்த சித்தார்த்தனை பார்த்து நீங்கள் இன்ன…
-
- 2 replies
- 748 views
-
-
மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதா என்பதை உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையிடம் விட்டுவிடுவதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கை இருந்தால் மாத்திரமே நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அன்வார் கூறியுள்ளார். ஆனால், தனிப்பட்ட முறையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தமக்கு இணக்கபாடு இல்லையென்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார். “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதான முழு விசாரணையையும் நடத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் விட்டுவிட வேண்டும். போலி நெருக்குதல் அளிக்கக் கூடாது. பொலிஸ…
-
- 3 replies
- 960 views
-
-
Image caption சுப்ரமணியம் குணரத்னம் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வம்சாவளித் தமிழரின் பிரவேசம் அமைந்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரண்டு தமிழர்கள் களமிறங்கியுள்ள போதிலும், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக களமிறங்கியுள்ளார் சுப்ரமணியம் குணரத்னம். யார் இந்த சுப்ரமணியம் குணரத்னம்? கொழும்பில் 1973அம் ஆண்டு பிறந்த சுப்ரமணியம் குணரத்னம், பம்பலபிட்டி இந…
-
- 2 replies
- 479 views
-
-
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார். இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…
-
- 7 replies
- 1.1k views
-
-
பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித் Published by J Anojan on 2019-10-16 18:44:23 போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தபாய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார். பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உண்மையில் இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள்…
-
- 0 replies
- 287 views
-
-
(நா.தனுஜா) சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியை ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை. புலிகளிடம் திரைமறைவில் நிதிபெற்று மஹிந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைப்போன்று நாம் செயற்பட்டதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பில் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம். எம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும…
-
- 1 reply
- 334 views
-
-
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நவம்பர் 18ஆம் திகதி பிற்பகல் வேளையிலேயே அறிவிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார். இம்முறை இடம்பெறும் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு நீளமானது என்பதால், வாக்குகளை எண்ண நீண்ட நேரம் எடுக்கும் என்பதே அதற்கு காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.thinakaran.lk/2019/10/16/உள்நாடு/42173/வாக்குச்சீட்டு-நீளம்-என்பதால்-தேர்தல்-முடிவில்-தாமதம்
-
- 0 replies
- 382 views
-
-
யாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற பெயரில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த விபரம் பின்வருமாறு: யாழ்.தீவகத்தில் நதி இல்லாமை அங்கு நீர் தட்டுப்பாட்டை தவிர்த்தல் மற்றும் வடமராட்சி களப்பிற்கு எல்லையில் உள்ள கிணற்று நீரின் உவர்ப்புத் தன்மையைக் குறைத்தல், அந்த பிரதேச விவசாய நடவடிக்கைளுக்கான நீர் விநியோகத்தை ஒரு வருடத்திற்கான 8 மில்லியன் கனமீற்றர் அளவில் அதிகரித்தல், நன்னீர…
-
- 0 replies
- 387 views
-
-
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. கொழும்பு7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஓயவபறற-பனனரம-உததயகபபரவ-இலலததல-வசகக-அனமத/150-240063
-
- 0 replies
- 241 views
-
-
முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடவகக-வயழநதரன-ஆதரவ/175-239979
-
- 39 replies
- 4.3k views
-
-
ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்காவை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். இது தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த போது, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். உ…
-
- 0 replies
- 444 views
-