ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கின – சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்! கொழும்பில் பெய்யும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி சந்தி, புளூமெண்டல் ஜோர்ஜ் ஆர் டி சில்வா சந்தி, ஜேத்தவன வீதி, பேஸ்லைன் வீதி, ரொபர்ட் குணவர்தன சந்தி மற்றும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, பலத்த மழையால் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்…
-
- 0 replies
- 396 views
-
-
Monday, September 23, 2019 - 10:53am இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது வந்துள்ளது. எனவே அவர் இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கட்டபிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியல் சாசனம் நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்று பதவி விலகுவேன் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்தி…
-
- 1 reply
- 721 views
-
-
“இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள். இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்…
-
- 3 replies
- 440 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி? – ரணில், சஜித், கரு ஆலோசனை Sep 23, 2019 | 2:30by கி.தவசீலன் in செய்திகள் ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்தவுள்ள அதிபர் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. …
-
- 3 replies
- 688 views
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம் முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் . நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் . கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார்…
-
- 10 replies
- 1.2k views
-
-
யாழ் இந்துவின் அதிபர், பிள்ளை ஒருவரை பாடசாலையில் சேர்க்க 1 லட்சம் கையூட்டு பெற்றதாக கூறி கைதாகியுள்ளார். http://www.hirunews.lk/224658/jaffna-hindu-college-principal-who-accepted-a-bribe-arrested
-
- 15 replies
- 2.2k views
-
-
இராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க தூதுவர் Sep 22, 2019by கார்வண்ணன் in செய்திகள் இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகள், இராஜதந்திரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும் என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் பணியாற்றும் 12 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும், சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று கொழும்பில் சந்தித்து, பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் 12 நாடுகளின் பாதுகாப்பு ஆலோ…
-
- 1 reply
- 365 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார். ஐவர் அடங்கிய இந்த ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜகத் டி சில்வா இந்த ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, மேல் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் அமைச்சுக்களில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம்.எம்.அதிகாரி ஆகியோரே ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். ஈஸ…
-
- 4 replies
- 592 views
-
-
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளில் ஏதோவொரு கட்சி தான் ஜனாதிபதி ஆட்சியை கைப்பற்றும். ஒரு தேசியக் கட்சி தங்களுடைய வேட்பாளரை அறிவிக்காது தங்களுக்குள் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு தேசியக் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. அவருடைய பெயரைக் கேட்டாலே எங்களுக்கு எல்லாம் பயமாய் இருந்தது. சிலவேளை அவர் வந்து விட்டால் என்ன நடக்கும் என்ற பயம் பல பேர் மத்தியில் இருக்கிறது. மீண்டும் வெள்ளை வேன் வரும…
-
- 1 reply
- 498 views
-
-
எவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை! கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 20 ஆம் திகதி வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. …
-
- 2 replies
- 628 views
-
-
வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன் , அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும்…
-
- 0 replies
- 298 views
-
-
யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளைத் தேடிக்கொள்வது என்பது பெரும் சவாலான விடையமாகவுள்ளதுடன். யாழ்.மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ளார்கள் என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட கல்லுண்டாய் வெளியில் புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளக வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காணியற்றவர்களாக உள்ளவர்கள் நிரந்தர வீடுகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சால் வழங்கப்பட்ட வீடுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே வ…
-
- 0 replies
- 325 views
-
-
Monday, September 23, 2019 - 12:02pm அரசாங்கத்தில் பதவிகள் வகித்தும் பங்காளிகளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பழைய பிரச்சினைகளுக்கும் புதிய நெருக்கடிகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை நீடிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுத்தும் ஆதரவளித்தும் செயலாற்றுவது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளில் ஒரு பங்கைக்கூட ஆளுங்கட்சி அமைச்ச…
-
- 0 replies
- 387 views
-
-
பதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை! பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடு…
-
- 3 replies
- 920 views
-
-
ஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு Sep 23, 2019 | 2:39by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அலரி மாளிகையில், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே ஆகியோர் பங்கேற்றனர். இரகசிய வாக்கெடுப்பை ந…
-
- 0 replies
- 266 views
-
-
சர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி Sep 23, 2019 | 2:41by கி.தவசீலன் in செய்திகள் ஒரு சர்வாதிகாரியை நாட்டின் அதிபராக உயர்த்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். “வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுக்களை நடத்தி வருகிறது. ஆனாலும், அதில் இணைந்து கொள்வதற்கு கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்ளமாட்டோம். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு, ச…
-
- 0 replies
- 241 views
-
-
திருகோணமலையில் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை விமானப்படை மற்றும் கடற்படையுடன் இணைந்து இராணுவம் நடத்தி வரும் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகிய நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சி நாளையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், பிரமாண்டமான இறுதி ஒத்திகைப் பயிற்சி இன்று நடைபெறவுள்ளது. மூன்று வாரகால கூட்டுப் பயிற்சியில் 100 வெளிநாட்டுப் படையினர், நேரடியாகவும் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர். இலங்கையின் 2400 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும் இந்த…
-
- 0 replies
- 294 views
-
-
இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 23.09.2019
-
- 0 replies
- 391 views
-
-
-க. அகரன் தமிழர்களுக்கு கல்வி ஒன்று தான் கையில் இருக்கும் இறுதி ஆயுதமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், அதன் மூலம் தான் தமிழர்கள் மீண்டெழ முடியுமெனவும் கூறினார். வவுனியா சைவ பிரகாச ஆரம்பப் பாடசாலையின் கற்றல் வள நிலையத்தை இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் கல்வியில் தான் கை வைக்க வேண்டுமெனவும் அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஓர் இனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால், முதலில் தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், …
-
- 12 replies
- 2k views
-
-
வடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம் வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிப்பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த வீதிப் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இப்பாதுகாப்பு வாரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதோடு, வட மாகாண ஆளுநர் செயலகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவூட்டும் வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களிடையே போக்குவரத்துப் பிரிவை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். https://w…
-
- 0 replies
- 282 views
-
-
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு! கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார். 356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும். இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன. …
-
- 15 replies
- 2.7k views
- 1 follower
-
-
முல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019 புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் பொதுமக்கள் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து முல்லைத்தீவு காவற்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஆதரவுடன் பிள்ளையார் ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும…
-
- 1 reply
- 693 views
-
-
நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர். பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம…
-
- 0 replies
- 404 views
-
-
இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019 -மயூரப்பிரியன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநருக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் வடம…
-
- 2 replies
- 617 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப்பயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைப்பயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் திரு…
-
- 1 reply
- 470 views
-