Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வேட்புமனு தாக்கலுக்கு 2 மணி நேரமே காலஅவகாசம் Sep 19, 2019 | 10:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடத்தப்படவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒக்ரோபர் 6ஆம் நாள் மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும். …

  2. பி.ப 3 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு Sep 19, 2019 | 10:11by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே, இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை …

  3. அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி? Sep 19, 2019 | 10:50by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக, தேசிய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஒரு வேட்பாளர் குறித்தும், அரசியல்வாதி அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் நன்மை தீமைகள் குறித்தும் தேசிய மக்கள் இயக்கம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் கேட்டபோது, அவ்வாறான முடிவை தான் எடுக்கவில்லை என்று தெரிவித்…

  4. செயற்கை கை உருவாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு இளைஞன்! முல்லைத்தீவு- மல்லாவியைச் சோ்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மல்லாவியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதனின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 2009 ஜனவரி 20ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். போரின்போது கண்முன்னே கண்ட அவல காட்சிகள் துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இதனையடுத்து, போர்க் காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை …

    • 6 replies
    • 637 views
  5. 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, பி.ப. 01:41 -செல்வநாயகம் ரவிசாந் தியாகதீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வை முன்னிட்டு, ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. தியாகதீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு, நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியடியில் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் தியாகங்களை வெளிக்கொணரும் வகையிலான கவிதைகள், பாடல்கள், பேச்சு, நாடகங்கள், வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகளில் ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முடியும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களது ஆக்கங்களை, வௌ்ளிக்கிழமைக்கு (20) முன்னர் thilepanmemorial@gmail.com எனும் மின்னஞ்…

  6. வேட்பாளர் விடயத்தில் ரணில் தவறிழைத்து விட்டார் – மனோ! ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறிழைத்து விட்டார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த வருட 52 நாள் ஒக்டோபர் நெருக்கடியின் போது, நாம் அனைவரும் எமக்கு பல கோடிகள் விலை பேசி வந்த எதிரணியை நிராகரித்து, அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் போராடி வென்று எம் ஆட்சியை நிலை நாட்டினோம். இவை அனைத்திற்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் விடாப்பிடியாக தங்கி இருந்தபடி தலைமை வழங்கினார். அன்று ஐதேக நாடாளுமன்ற குழுவை அழைத்த…

  7. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது என்பதை, பஷீரின் பதிவுக்கு எழுதப்பட்ட கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த…

  8. (ரெ.கிறிஷ்ணகாந்) இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தை தழுவி உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலை ஒத்ததான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் விடயத்தை முற்றாக மறுப்பதாகவும், இது தொடர்பில் இராணுவ மட்டத்தில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் கடந்த 16 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய, மக்கள் சேவை அமைப்பு என்ற அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் ரிஷாம் மரூஷ் என்ற நபர், கொமாண்டோ படையணியைச் சேர்ந்த அசங்க பிரியந்த என்பவரின் அறிவுறுத்தலுக்கமைய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம…

  9. 48 மணித்தியாலங்களுக்குள் எழுத்து மூலமாக, தமக்கான நிரந்தர தீர்வை அறிவிக்காத பட்சத்தில் தீக்குளிப்போமென, அரசாங்கத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (19) நிரந்தர நியமனம் கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, பட்டதாரிகள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தனர். https://www.madawalaenews.com/2019/09/blog-post_959.html

  10. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/65088

  11. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபாய் மேலதிகக் கொடுப்பனவு இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலில் ஆயிரத்து 492 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத…

  12. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை எனும் தனியான பிரிவை ஆரம்பிக்கும் முயற்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் இயக்கத்தின் அகிலத் தலைவர் வி. சு. துரைராஜா கையளித்தார். மிகவும் தொன்மையான தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைகள் மற்றும் கலாசார விழுமியங்கள் தொடர்பான பாடநெறி ஒன்றை ஆரம்பித்து வளர்ந்து வரும் மாணவர்களுக்கு அது தெளிவாக கற்பிக்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தலைவர் துரைராஜா அமைச்சரிடம் தெரிவித்தார். இ…

    • 0 replies
    • 344 views
  13. பலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சிறப்புச் செய்தியாளர்Sep 17, 2019 | 15:06 by in செய்திகள் பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், 300 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க முன்வைத்திருந்தார். அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக, பலாலி விமான நிலைய ஓடுபாதை …

  14. நாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரில் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். மேலும், பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் …

  15. நொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு Sep 18, 2019 | 2:28by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நொவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதன்போதே, நொவம்பர் 15ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், அதிபர் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களிடம் தெரிவித்துள்ளது. …

  16. தகவல் அறியும் உரிமைக்கு.. வலுச்சேர்க்க, ‘தகவல் மாதம்’ பிரகடனம் சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்படுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அமைச்சரவை முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 12இன் கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கான சட்டம் தற்பொழுது உலகில் சிறந்த 4ஆவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்…

  17. வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு அகலமாக்கப்பட்டு மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கலந்…

  18. இலங்கையில் பொதுமக்களை சித்திரவதை செய்யும் 50 பயங்கரவாத விசாரணை பிரிவினரின் பெயர் விபரங்கள்- வெளியிட்டது யஸ்மின் சூக்கா அமைப்பு இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவு குறித்த தனது புதிய விசாரணை அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது அறிக்கையில் சித்திரவதைகளில் ஈடுபடும் 58 பேரின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது. இவர்களில் பலர் அதிகாரிகள் நிலையிலுள்ளனர் என தெரிவித்துள்ள ச…

    • 2 replies
    • 579 views
  19. அம்பாறை, பாலமுனை பகுதியில் வெடிப்பொருள்கள் மீட்பு -வசந்த சந்திரபால, எம்.ஏ.றமீஸ் அம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து வெடிப்பொருள்கள் சில இன்று (18) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிப்பொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றக்கட்டுள்ளன. இதேவேளை, பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tam…

  20. தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை என தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள் என்றும் எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ((16) நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இன அழிப்பு என்பது வெறும் கொல்லுதலைக் …

    • 2 replies
    • 595 views
  21. எழுக தமிழ் பேரணி பெரும் வெற்றி-வி.விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான். அவர்கள் பேரணிக்கு வந்திருந்தால், கலந்து கொண்ட மக்களை பார்த்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை. இம்முறை வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். …

  22. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினை அல்ல, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கு தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவுசெய்வீர்களா என்பதை கூறுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரா. சம்பந்தன் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமை சந்திக்க முன்னர் இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூ…

  23. சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்? Sep 18, 2019 | 2:35by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய திட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட சீனாவினால் மேற்கொள்ளப்படும், திட்டங்களை ஆய்வு செய்யவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 9 மணியளவில் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் தாமரைக் கோபுர திறப்பு…

  24. கிங்ஸ்பெரி தற்கொலை குண்டுதாரியின் சடலத்தை அடக்கம் செய்ய உத்தரவு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட அசாம் மொஹமட் முபாரக் என்பவரின் சடலத்தை பொரள்ளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த சடலத்தை அடக்கம் செய்வதற்காக திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தற்கொலை குண்டுதாரியின் சடலம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்றம் இ…

  25. சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி நிலைகளை பெறும் முன்னாள் தளபதிகள் Sep 18, 2019 | 2:22by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பதவிநிலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை உள்ளன. இதற்கான அரசிதழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.