ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டிலேயே குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரி, மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/62918
-
- 3 replies
- 1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாயவின் பயணத்தை தடுக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கோத்தபாய ராஜபக்ஷ் எந்த கட்சியையும் சேராதவர். அவர் பொது வேட்பாளராகவே பொதுஜ…
-
- 0 replies
- 463 views
-
-
மஹிந்த, 19 தடவைகள் கூட்டமைப்பை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு! எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 19 தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை ஏமாற்றியதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார்வீதியின் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டன. கம்பெரலிய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டு இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித…
-
- 0 replies
- 260 views
-
-
வா.கிருஸ்ணா / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 06:26 தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் தான் விலகியுள்ளதாகத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), தமிழ் மக்களுக்கு, பிரபாகரனால் பெற்றுக்கொடுக்க முடியாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெற்றுக்கொடுக்க முடியாதென்றார். மட்டக்களப்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, வெள்ளிமலை இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை எழுத்துமூலம் பெற்றுக்கொண்டே ஆதரவு வழங்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் கிழக்கில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேர…
-
- 3 replies
- 1.1k views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது. ஆனால் எதோ …
-
- 5 replies
- 834 views
-
-
Published by Daya on 2019-08-16 14:45:25 பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அத…
-
- 11 replies
- 1.5k views
-
-
‘சோபா’ உடன்பாடு – சிறிலங்காவுடனான பேச்சுக்களை நிறுத்தியதுஅமெரிக்கா அதிபர் தேர்தல் முடியும் வரை, சிறிலங்காவுடனான, சர்ச்சைக்குரிய சோபா உடன்பாடு குறித்த பேச்சுக்களை நிறுத்தி வைப்பதாக, சிறிலங்காவுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் அலய்னா பி.ரெப்லிட்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, தமது நாட்டின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபரைச் சந்திக்க அமெரிக்க தூதுவர் சில வாரங்களுக்கு முன்னரே, விருப்பம் வெளியிட்டிருந்தார், எனினும், அத்தகைய கூட்டம் சாத்தியமில்லை என்று சிறிலங்கா அதிபர் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்…
-
- 1 reply
- 283 views
-
-
2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 04:27 -க. அகரன் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களுக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்போமென, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையமும் இணைந்து, வவுனியா விருந்தினர் விடுதியில், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவ்வியக்கம் இவ்வாறு தெரிவித்தது. இது குறித்து அவ்வியக்கம் மேலும் தெரிவித்ததாவது, வடபகுதி மீனவர்கள், போருக்கு முன்னரும் சரி அதற்கு பின்னரும் சரி நிம்மதியான வாழ்வை வாழ்கின்றார்களா என்றால் அதற்கன பதில் கேள்விகுறியே எனவும் சட்டவிரோதமான மீன்பிடி முறை, தென்னிலங்கை மீனவர்களின் வருகை ஆகியன தொடர…
-
- 0 replies
- 283 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி பதிவாகிய உள்ளமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் கடந்த பல மாதங்களாக வரட்சியான காலநிலை நிலவி வந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை (16) மாலை முதல் திடீரென பெய்து வருகின்றது. இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வரட்சி நிலவியால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.அம்பாறை மாவட்டத்தில் வரட்சி நீடித்ததால் விவசாயச் செய்கை மேட்டு நிலப் பயிர்ச் செய்கை போன்றன வெகுவாகப் பாதிக்கப்பட்டன. ந…
-
- 1 reply
- 373 views
-
-
நா.தனுஜா) 'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்ப வைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது. அதிகார அரசியலைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களின் அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவிற்குக் கொண்டு வரும் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவருமான நாரா.டி.அருண்காந்த் மேலும் கூறியதாவது, தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் காணிகளையும், இரு மாகாண சபைகளையும் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் சூழ்நிலையில் யதார்த்த அரசியல் சூழ்நி…
-
- 0 replies
- 309 views
-
-
பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம் ; செ.கஜேந்திரன். கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம் பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், அண்மையில் பொது ஐன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர்களிற்கு ஆபத்தான பல விடயங்கள் அறிவிக்கபட்டிருப்பதுடன் தமிழர்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட கோத்தபய ராஜபக்ஷ ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருக்கிறார். இது மீண்டும் முள்ளிவாய்கால் நோக்கி தமிழ்மக்க…
-
- 3 replies
- 654 views
-
-
வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ வடிவாம்பிகை ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (17) ஆரம்பமாகியது. கொடிச்சீலை யானையில் சுமந்த வண்ணம் ஆலயத்தைச் சுற்றி வீதி வழியாக எடுத்து வரப்பட்டு ,பின்னர் கொடி ஏற்றப்பட்டது. கொடித்தம்பத்திற்கு அபிஷேகமும் இடம்பெற்றது. 'இந்நிகழ்வில் பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர். முக்கிய நிகழ்வுகளாக தீ மிதிப்பு உற்சவம் செப்டெம்பர் 08 ஆம் திகதியும், வேட்டைத் திருவிழா செப்டெம்பர் 11 ஆம்திகதியும் தேர்த்திருவிழா செப்டெம்பர் 12 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் செப்டெம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது -உடப்பு குறூப் நிருபர் - http:…
-
- 1 reply
- 998 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சிகளின் விஞ்ஞாபனத்தின் அடிப்டையிலேயே ஆதரவு தெரிவிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற தலைமைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற இருக்கின்ற நிலையில், இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை தமிழீழ விடுதலை இயக்கம் நேற்றைய தினம் ஐந்து மணி நேரத்…
-
- 0 replies
- 283 views
-
-
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்அல்ல. அவர் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே அமையும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, கோத்தபாய ராஜபக்சவிற்கு உண்மையான எந்தத் தமிழரும் வ…
-
- 0 replies
- 566 views
-
-
Monday, August 19, 2019 - 6:00am இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒரு கட்சியினர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளனர். ஒரு இனம் இன்னொரு இனத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18. அத்தனை விடயங்களும் நடந்த போது இராணுவத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒருவர் அதற்கான பொறுப்புக் கூறலை முதலில் தெரியப்படுத்த வேண்டும். அங்கு வெள்ளைக் கொடிக…
-
- 1 reply
- 440 views
-
-
நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடிய, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/126225
-
- 11 replies
- 1.6k views
-
-
அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன் நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.. மேலும் கருத்து தெரிவித்த அவர், கூட்டுறவு என்ற இயக்கம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாகரிகத்தைகொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது. அது மனிதாபிமான ரீதியான நுண்கடன்களை வழங்கி மக்களிற்கு உதவி செய்திருந்தது. ஆனால் இப்போதும் நுண்கடன் நிறுவனங்கள் இருக்கிறது அவற்றிடம் மனிதாபிமானத்தை காணவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் கூட்டுறவின் மூ…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத் பென்சேக்காவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அவருக்கு அன்று வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான); கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சி காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட கட்சி தலைவர் வி.முரளிதரன் (கருணா அம்மான்…
-
- 0 replies
- 909 views
-
-
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின் கீழ் யுத்தத்தால் மற்றும் வறுமையால் மாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கும் திட்டம் இன்று காலை 10 மணியலவில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது மாங்குளம் பகுதியில் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு எதிராக உள்ள கிராம சேவையாளர் வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மு/மாங்குளம் மகா வித்தியாலய அதிபர் திரு யோகானந்தராசா மங்கல விளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ச்சியாக கல்வி நிலைய பெயர்ப்பலகையினையும் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் வைபவ ரீதியாக கல்வி நிலையத்த…
-
- 1 reply
- 477 views
-
-
வேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுணவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ 2005இல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இரகசியமாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டமை, இரண்டு இலங்கை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தினகரனுக்குத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 555 views
-
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்க இடமளிக்கப் போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று கூறுகிறார்கள். இலங்கை எங்களது என்று கூறுங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. நாம் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் மிகப்பெரிய தலையிடியாக அமைந்தது. இனவாத,மதவாத சட்டங்களை கொண்டு வந்தனர். பெரஹெரவில் யானை பிரச்சினைகளை ஏற்படுத்தினர். சோஃபா ஒப் பந்தத்தை நிறுத்தியுள்ளனர். அரசியலமைப்பொன்றை வைத்துள்ளனர் என்றார். http://valampurii.lk/valampurii/c…
-
- 0 replies
- 279 views
-
-
க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான “பிள்ளையான்” எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையை வலியுறுத்தி, மாபெரும் கண்டனப் பேரணியென்று, மட்டக்களப்பில் இன்று (18) முன்னெடுக்கப்பட்டது. அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அவரை விடுதலை செய்ய வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டுமென, இந்தப் பேரணியில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வலியுறுத்தினர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரு…
-
- 0 replies
- 681 views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனைய இனங்கள் அனுபவிக்கும் சகலவிதமான அரசியல் உரித்துக்களையும் பெற்று, தமிழர்கள் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. புதிய அரசியலமைப்பின் மூலம் அந்த நிலைமையை உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ் குருநகரில் மீன்பிடி துறைமுகத்திற்கான அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை கட்சித் தலைவராக அறிவிக்கும்படி கோரியிருந்தார். இதற்கு பதிலளித்தபோதே, மேற்…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
பௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறும் கோத்தா வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த 11ஆம் நாள் கொழும்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் களனி ரஜமகா விகாரையில் வழிபாடுகளை ஆரம்பித்த அவர், அடுத்த நாள் அனுராதபுரவுக்குச் சென்று பல்வேறு பௌத்த ஆலயங்களில் வழிபாடுகளை நடத்தினார். அதன் பின்னர், கண்டியில் உள்ள பௌத்த ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருவதுடன், மகாநாயக்க தேரர்களையும், முக்கியமான பௌத்த விகாராதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார். பேராதனை கெட்டம்பே விகாரைக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அதன் விகாராதிபதியான கெட்…
-
- 3 replies
- 548 views
-
-
கோட்டாபயவின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியது – கெஹெலிய எம்.பி. நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையின்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராபக்ஸவின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. முதலாவது பொதுக் கூட்டத்திலேயே அதனை நாம் கண்டோம். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கணிப்பீடொன்றை செய்து தேவையான பாதுகாப்பை வழங்கும் என தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கேட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கிய நபர் என்பதை யார…
-
- 1 reply
- 391 views
-