Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பலவந்தமாகவோ அல்லது அநாவசியமான வகையிலோ புதிதாக எந்தவொரு மத ஸ்தலங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ் ஆதீனத்துடனான சந்திப்பின்போதே இதனை கூறினார். மதங்களுக்கியடையில் தற்போது காணப்படும் புரிந்துணர்வு அற்ற தன்மையினை இல்லாது செய்யும் பொறுப்பினை மத சபைகளுக்கு பொறுப்பாக்குவதாகவும், மத தலங்களை புனர் நிர்மானம் செய்வதற்கும் , பாதுகாப்பதற்கும் தொல்பொருள் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இளம் தலைமுறையினரும், சிறுவர்களம் சிறந்த மத கொள்கை, சிறந்த அபிவிருத்தி செயற்திட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈடுப்படு…

    • 3 replies
    • 602 views
  2. ஈஸ்டர் தாக்குதலுடன் தோடர்புபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்கள். சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் கைதுகள் தொடரும். இந்த அமைப்பின் பின்னணி குறித்த புலனாய்வுத்துறை தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக. நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் வடக்கின் இராணுவ குவிப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு மாதங்கள் கடந்தாலும் இன்னமும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற…

    • 2 replies
    • 398 views
  3. நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ம.திலகராஜ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) நேற்று (14) சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகராஜ் எம்.பி, இலக்கியங்கள் ஊடாகப் பல தொடர்புகள் தனக்கு கிழக்கு மாகாணத்தில் இருப்பதாகவும் அண்மையில் தான் வாசித்த நூல்களில் சந்திரகாந்தனின் “வேட்கை” நூல் வித்தியாசமானத் தெரிந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், அவரை விடுதலைப் போராட்டக…

    • 0 replies
    • 431 views
  4. யாழ். சாவக்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். இதன் தொடராக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி உதவியினால் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி…

    • 2 replies
    • 664 views
  5. கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் போது பாதாள உலக குழு உறுப்பினரான 39 வயதான ஆனமாலு ரங்க மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஒருவாத் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்த, குறித்த பகுதியில் தேடுதல மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சா…

  6. புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதி அமைச்சு ஆலோசனை கோரியுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆள் அடையாளம் தெரியாதவகையில் தலை, முகத்தை மூடி ஆடை அணிவது தடைசெய்யப்பட்டிருக்கின்றது. குறித்த தடையானது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சட்ட ரீதியில் நிரந்தரமாக தடையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைக்கு கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இர…

    • 1 reply
    • 372 views
  7. நல்லூரில்... வழிபாடுகளை, மேற்கொண்டார் ரணில்! வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்ற அவர், நல்லூர் ஆதீன கர்த்தாவுடன் சந்திப்பினை மேற்கொண்டார். அதன்பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் எ…

  8. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தமை சரியான தீர்மானமே என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டினுள் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் எனவும், மற்றையவர் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட வேட்பாளராக தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222162/ஜனாதிபதி-வேட்பாளர்-…

    • 10 replies
    • 1.1k views
  9. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதனால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவி ரத்தாகும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . #மகிந்த ராஜபக்ஸ #சுதந்திரக் கட்சி #உறுப்புரிமை #ரத்து …

  10. August 15, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கண்காணிப்பு பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸவை மகிந்த களமிறக்கியதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தாபயவின் பிரவேசம் நாட்டை பேரழிவிற்கு இட்டுச…

  11. சிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “வசந்த கரன்னகொடவுக்கு அட்மிரல் ஒவ் தி பிளீட் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒன்பது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு கட்டளையிடும் அதிகாரிக்கு மட்டுமே வெளிநாடு நாடுகள் இத்தகைய பதவியை வழங்குகின்றன. சிறிலங்கா கடற்படை…

    • 1 reply
    • 809 views
  12. இந்து சமுத்திரத்திற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு திட்டம் இலங்கையில் நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது என ஜப்பானை தளமாக கொண்ட நிக்கேய் ஏசியன் ரிவியு தெரிவித்துள்ளது. சோபா உடன்படிக்கையின் கீழ் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை இலங்கையுடன் செய்துகொள்வதற்காக அமெரிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் இலங்கையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆழமாக பிளவுபட்டகூட்டணியில் அமெரிக்க சார்பு அணிக்கு தலைமை தாங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் கூட சீற்றமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நிக்கேய் ஏசியன் ரிவியு …

    • 2 replies
    • 326 views
  13. மன்னார் மடுமாதா திருத்தலத்தின் வருடாந்தர ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 அளவில் ஆரம்பமானது! http://www.hirunews.lk/tamil/222249/ஆவணி-மாத-திருவிழா-திருப்பலி-இன்று மடு திருத்தலத்தின் நாளை ஆவணித் திருவிழா மடு திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா திருப்பலி, நாளை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கைக் கத்தோழிக்க ஆயர் பேரவைத் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணான்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனியும் நடைபெறும். http://www.…

    • 1 reply
    • 435 views
  14. வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயமொன்று உடைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள புனித இராஜப்பர் தேவாலயத்தில் விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைத்திருக்கலாம் என சந்தேகத்துடன் நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச்சென்ற பொதுமக்கள் சிலுவைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பூச்சாடி எரியூட்டப்பட்டிருப்பதை அவதானித்ததையடுத்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இன்று (15.08) காலை தேவாலயத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் சென்று பார்த்த போது தேவாலயத்தின் பின் பக்கமாக உடைக்கப்பட்டு உள்ளே சிலர் சென்றுள்ளதாகவும் நிறப்பூச்சை பயன்படுத்தி ஆலயத்தின்…

    • 0 replies
    • 525 views
  15. பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுதந்திர தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை , அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு நாம் எமது உறுதியான ஆதரவை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

    • 0 replies
    • 272 views
  16. மயிலிட்டித் துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதம் தான் அவ்வாறு கூறுவதற்கு இயலாத ஒன்றாகவே உள்ளது என்றும் மக்களின்காணிகள் மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மயிலிட்டித்துறைமுகம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த ஆண்டு மயிலிட்டித்துறைமுகம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மயிலிட்டித்துறைமுகமானது பிரேமதாஸ பிரதமராக இருந்தபோது தந்தை செல்வநாயகம் மக்களின் வேண்டுகோளுக்க…

    • 1 reply
    • 658 views
  17. கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை தொடர்பில் பலரதும் அவதானம் விழுந்துள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் யானை கொடுமைப்படுத்தபடுவாதாக குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் டிகிரி தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும், தவறான சித்தரிப்புகளை மேற்கொள்ளவதாகவும் குறிப்பிட்டு வளர்ப்பு யானைகள் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி பண்டார கருணாரத்னவும் , டிகிரி யானையின் உரிமையாளர் எல்.எல்.திலகரத்னவும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டிகிரி யானை குறித்து மேலும் தெரியவருவதாவது, டிகிரி யானைக்கு …

    • 1 reply
    • 534 views
  18. சஜித் – கோத்தாவை மோதலில் சிக்க வைக்கும் இணைய முடக்கிகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவையும், சஜித் பிரேமதாசவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள். சஜித் பிரேமதாசவின் பெயரில் உள்ள, www.sajithpremadasa.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், கோத்தாபய ராஜபக்சவின் பெயரில் உள்ள, www.gota.lk என்ற இணையத்தளத்துக்கு தானாகவே கொண்டு செல்லப்படுகிறார்கள். அதுபோல, கோத்தாபய ராஜபக்சவுக்காக பரப்புரைகள் செய்யப்படும், gotabayarajapakse.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.prisons.gov.lk இற்குள் …

    • 0 replies
    • 220 views
  19. மட்டக்களப்பில் வாவியூடாக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் பிரதேச வாசிகள் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை மக்கள் இந்த மண்டூர் குருமன்வெளி வாவியூடாக இயந்திரப்படகின் மூலம் தங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இலகுவாக மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் அண்மைக்காலங்களாக இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் வாகன சாரதிகள்,பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்கள் மத்தியில்…

    • 1 reply
    • 380 views
  20. செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவான நிர்மாணக்கப்பட்ட நினைவுத் தூபி, பல்வேறு தடைகளுக்கு மத்தியில், இன்று (14) திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பொறிக்கவும் அவர்களுடைய பெயர்களை எழுதவும் தடைவிதித்திருந்த பொலிஸார், நினைவுத் தூபியை மட்டும் நிர்மாணிக்க அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில், இன்று (14) குறித்த நினைவுத் தூபியில், நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க முடியாவிட்டாலும், தற்காலிகமாக மாணவர்களுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்டும் “செஞ்சோலை வளாக வீதி” என எழுதப்பட்ட நிலையிலும், குறித்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது, நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ச…

    • 6 replies
    • 1.4k views
  21. மைலிட்டி துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர்! யாழ்ப்பாணம் மைலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர்,யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். 150 மில்லியன் ரூபாய் செலவில் மைலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைமுக மேம்படுத்தலில் 50 மீற்றர் நீளமான அணை மேம்பாடு, வலைபின்னும் மண்டபங்கள், எரிபொருள் நிலையங்க…

  22. தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார். அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வா…

  23. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நகர்வுகள் - அமெரிக்காவின் இரட்டை முகம் சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்! ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென மைத்திரியிடம் சஜித் வேண்டுதல் இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனா…

    • 1 reply
    • 567 views
  24. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமிழ் மக்கள் தெளி­வாக இருக்­கி­றார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்­று­மையைவிட கூடு­த­லாக தற்­போது ஒற்­றுமை இருக்­கி­றது. எங்­க­ளுக்கு இருப்­பது இரண்டு பலங்கள். ஒன்று எங்­க­ளது ஒற்­றுமை. மற்­றை­யது சர்­வ­தேசம். ஆகவே இவை இரண்­டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தமிழ் மக்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சம­கால அர­சியல் நிலை­வரம் …

  25. கண்டி விநாயகர் ஆலயத்தில் கோட்டாபய விசேட வழிபாடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடளாவிய ரீதியிலுள்ள மதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இதன்படி கண்டிக்கான விஜயத்தை மேற்கொடுள்ள அவர் அங்குள்ள கடுகெல விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இந்த வழிபாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றனர். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய பீடத்திற்குச…

    • 2 replies
    • 789 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.