Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஒன்பது நாட்களாக நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த தேவதாசன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் உறுதியளித்தார் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இன்று ஒன்பதாவது நாளாக நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்த 63 வயதான கனகசபை தேவதாசன் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலைக்குச் சென்று வழங்கிய உறுதிமொழியையடுத்து தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாக சக கைதிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இ…

    • 0 replies
    • 309 views
  2. கடற்படையிடம் கையளித்த தனது மகனைத் தேடியலைந்த தாய் முல்லைத்தீவில் மரணம்! கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி அலைந்த தாய் ஒருவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார். இவ்வாறு இன்று (புதன்கிழமை) உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார். தனது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார் . கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை ம…

  3. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ நா சமாதான சபையின் விசேட பிரதிநிதி Mr.Clément Nyaletsossi Voulé ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐநா விசேட பிரதிநிதிக்கு இதன்போது விளக்கமளித்தார். காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாகாணத்தில்…

    • 0 replies
    • 354 views
  4. அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாயக்கல் மலையடியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த மடாலயத்தை உடன் நிறுத்துமாறு கோரும் மகஜரொன்றை இறக்காமம் பிரதேச சபையிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல்.சமீம் , கடந்த இருவருடங்களுக்கு முன்பு மாயக்கல் மலையடியில் திடீரென வைக்கப்பட்ட பௌத்த புத்தர் சிலையொன்றின் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர், தமன பொலிஸாரினால் அம்பாறை நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் பேரில் இப்பிரதேசத்திற்குள் எவரும் செல்லக் கூடாதென தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதானால் அங்கு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சமும், பீதியுமான நிலை …

    • 0 replies
    • 391 views
  5. கல்முனை செயலகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மருதமுனை- நற்பட்டிமுனை பிரதேசத்தை இணைத்து மருதமுனை பிரதேச செயலகம் என 3 நிர்வாக செயலகங்களாக பிரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனை விவகாரம் குறித்து தொடர்ந்தும் உள்ளுராட்சி, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தனவை சந்தித்து வரும் முஸ்லிம், தமிழ் தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று உள்நாட்டு அழுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை…

    • 0 replies
    • 710 views
  6. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இரண்டாவது மனுதாரராகவும் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மூன்றாவது மனுதாரராகவும் Edotco Services Lanka (pvt)LTD நான…

    • 1 reply
    • 743 views
  7. 30 நாள்களைக் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர், நம்பிய தமிழர்களை ஏமாற்றி விட்டார் என்று கல்முனை வாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை உரிய முறையில் அனைத்து அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக தரம் உயர்த்த தரக்கோரி ஐவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர் . தங்களது கோரிக்கைகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வரும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என களத்தில் குதித்தனர். ஆறாம் நாள் போராட்ட களத்துக்கு விரைந்த கலகொட அத்தே ஞானசார தேரர் 30 நாள்களுக்குள் கல்முனை வடக்கு உப பிர…

  8. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்த குழு, அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு, அவரிடமிருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் கிழக்கு பகுதில் நடந்துள்ளது. கள்ளுத்தவறனையின் முகாமையாளரே தாக்குதலில் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். https://newuthayan.com/story/15/வாளைக்-காட்டி-பணத்தை-கொள.html

  9. யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/08/நெல்லியடியில்-அதிகாலை-நட.html

  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து தனது மகனை கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார் . தனது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த நிலையில் இன்றையதினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . கடந்த 2008,07.௦1 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் தனது மகனை ஒப்படைந்த நிலையில் இன்றுவர…

    • 0 replies
    • 485 views
  11. பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள 130 குப்பை கொள்கலன்களையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்படி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பிரிட்டனிலிருந்து 2017இலிருந்து 2487 மெற்றிக்தொன் கழிவுகள் 12 தடவைகளில் இலங்கைக்கு வந்துள்ளன. இவை 130 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு வந்தோர் தொடர்பில் இதுவரை சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நாட்டில் தற்போது இந்த விவகாரம் பெரு…

    • 1 reply
    • 652 views
  12. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் முறையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்திருந்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா மற்…

    • 0 replies
    • 700 views
  13. 21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தில், 3 கத்தோலிக்க தேவாலயங்கள் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு …

  14. (எம்.என்.எம்.அப்ராஸ்)கல்முனை பிராந்திய கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான கிரீ மீன் வகைகள் நேற்றைய தினம் (23)பிடிக்கப்பட்டன. நீண்டகாலமாக இப் பிரதேச கரைவலை மீன்பிடி வாழ்வாதாரம் மிகவும் மோசமான பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ் வகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டது இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டனர். இவ் வகை மீன்க்ள் உள்ளூர் சந்தையில்கிலோ 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் மேலதிக மீன்க்ள்வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்ற இதேவேளை இப் பிரதேசத்தில் இவ் மீன்கள் கருவாட்டுக்காய் பதனிடப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது . https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add …

    • 0 replies
    • 666 views
  15. சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில், மஹிந்தவுக்கு, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக “World Icon Award” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சர்வதேச-விருதை-பெற்றார்/

  16. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிடம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற பிரான்ஸ் தேசிய தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தமைக்கு தனது நன்றியை பிரான்ஸ் தூதுவர் வெளிப்படுத்தினார். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான உறுதிப்பாட்டை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வழங்குமாக இருந்தால், இலங்கையில் பெ…

  17. 36 தென்னிலங்கை மீனவர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் என குற்றம்சாட்டி தென்னிலங்கையை சேர்ந்த 36 மீனவர்களை பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் பொலிஸார் அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர். நீண்ட காலமாக குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில் அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் , அதனால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாமே கடலில் இறங்கி சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களை மடக்கி …

  18. வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு செல்லும் வெளிநாட்டு அகதிகள் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர், வவுனியாவிலிருந்து நீர்கொழும்பிற்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையத்தில் நீர்கொழும்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக தங்கவைக்கப்பட்டிருந்த 113 பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதில் அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு 20 பேர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது 15 பேர் பூந்தோட்டம…

  19. ஜப்பான் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் பணி துரித கதியில் முன்னெடுப்பு இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் செய்பட்டு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 யூலை மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை…

  20. ''நீண்டகாலம் இடம்பெயர்ந்த திட்டத்திற்குள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவு உள்வாங்கப்படும்'' முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் நீண்டகால இடப்பெயர்வுத் திட்டத்திற்குள் இவ்வருடம் உள்வாங்கப்படுவார்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உமாமகள் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் இம்மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற…

  21. புத்தளம், வணாத்துவில்லு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வணாத்துவில் - லெக்டோ தோட்டத்திற்கு அருகிலேயே இன்று அதிகாலை குறித்த 6 பேரும்கைது செய்யப்பட்டதாக வணாத்துவில்லு பொலிசார் குறிப்பிட்டனர். கடந்த 16 ஆம் திகதியும் இப்பகுதியில் வெடிமருந்துகளுடன் 3 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/61083

    • 0 replies
    • 296 views
  22. இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும் அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள் சுடுநீரை ஊற்றியுள்ளனர். ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்ற…

  23. ரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு! இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் (SLRC) தலைவர் இன்னோகா சத்தியாங்கனியை பதிவி விலகுமாறு அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுஜன ஊடக அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்தன உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனாவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மங்கள சமரவீர வெகஜன ஊடக அமைச்சராக இருந்தபோது சத்தியங்கனி ரூபவாஹினி தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60990

    • 2 replies
    • 1.2k views
  24. தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ! நாடு முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதே தனது நோக்கமென்றும் அதைவிடுத்து அனைத்து தலைவர்களுக்கும் பெருந்தலைவனாவது தனது நோக்கமல்லவென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால்தான் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியும். சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்தால்தான் ஏனைய முஸ்லிம் மக்களுடனும் ஒன்றுசேர முடியும். அப்போதுதான் இலங்கை நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்ப முடியும். நான் நாடு முழுவதும் உள்ள தமிழ் மக்களை ஒன்று சேர்க…

  25. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து தமிழ் மக்களுடைய மனதை வென்றவர் நீங்கள் என முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார் . இன்று செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்த வேளை மேற்கண்டவாறு கூறினார். இச்சந்திப்பு கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் இடம்பெற்றதுடன் சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றது. இதன் போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.