Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. July 5, 2019 யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05.07.19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார். இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்ப…

  2. ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையில…

  3. வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர் குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை சி.ஐ.டி இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரும் நிலையிலேயே இந்த விஷேட விசாரணை அறிக்கையை முன்வைக்க சி.ஐ.டி. தீர்மனைத்துள்ளதாக நான்காம் மாடித் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் சி.ஐ.டியினர் முன்வைக்கவுள்ள விஷேட அறிக்கையில் பிரதானமாக மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதையத்த…

  4. வவுனியாவில் மயானத்தை உரிமை கோரும் பெரும்பான்மை இன மக்கள் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை பெரும்பான்மை இன மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம் 1, 2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பயன்படுத்தி வந்திருந்தனர். இந்நிலையில் குறித்த மயானத்தில் இம் மக்கள் தமது கிராமத்தில் இறந்தவர்களை புதைத்தமைக்கான நினைவுக்கற்களையும் நாட்டியுள்ளனர். தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த பொது மயானத்திற்கு அண்மையாக அருகில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் காணிக…

  5. அரசுக்கு எதிராகவே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் – மதகுருமார்! கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் அரசுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என கல்முனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மதகுருமார்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு மாகாண இந்து குருமார் அமைப்பின் தலைவர் க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள், பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) கல்முனை சுபத்ராராமய விகாரையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையினை…

  6. இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது. பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங…

    • 22 replies
    • 2.4k views
  7. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நேற்று பெயருக்கு வந்துபோன ஒரு கணக்காளர் இன்று வரவில்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகமா? அப்பாவி தமிழ் மக்களை அரசாங்கமும், த.தே.கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுகிறதா? என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் த.தே.கூட்டமைப்பினருடனான அலரிமாளிகை சந்திப்பி ன் பிரகாரம் நேற்று கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் நியமிக்கபட்டு வருகை தந்து பகல் 1.30 மணியளவில் சென்றுள்ளார். இது தொடர்பில் வண.சங்கரத்னதேரர் கருத்து தெரிவிக்கையில், நேற்று வந்த கணக்காளர் அம்பாறை அரச அதிபரின் கட்டளைக்கிணங்க தான் இங்கு வருகை தந்துள்ளதாக் கூறியு…

  8. முல்லைத்தீவில் பாரிய விபத்து ; இருவர் பலி முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் வடகாடு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற கெப் ரக வாகனம் வடகாடு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானதிலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை https://www.virakes…

  9. யாழில் நிதி நிறுவனத்தில் மோசடி; வர்த்தகர் உள்ளிட்ட மூவரின் பிணை மனு நிராகரிப்பு யாழில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கின் அந்த நிறுவனத்தின் யாழ் கிளை முகாமையாளர் உள்ளிட்ட மூவரின் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்த யாழ் நீதிவான் நீதிமன்றம், சந்தேகநபர்களின் விளக்கமறியலை வரும் 24ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டது. யாழ் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் மோசடியாக வழங்கப்பட்டது. அதனை நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், அடகுப் பிரிவு உத்தியோகத்தர…

  10. குருநாகலில் பசியின் கொடுமை காரமாண தாயும் மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்கமுவ பிரதேசத்தில் பல நாட்களாக உணவின்றி தவித்த தாயும் மகளுமே தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். எனினும் பொலிஸார் அவர்களை காப்பாற்றியுள்ளனர். கணவனால் கைவிடப்பட்ட 38 வயதான பெண்ணும் அவரது 10 வயது மகளுமே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். தாயும் மகளும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கண்ணீருடன் நிற்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களை அவ்விடத்தில் இருந்து காப்பாற்றிய வேளையில், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற…

  11. July 10, 2019 பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முள்ளிலையாவது தொடர்பான சர்ச்சைகளை அடுத்து தெரிவுக்குழுவில் தயாசிறி முன்னிலையாவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க முன்னிலையாகவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க போவதில்லை என தெரிவித்துவந்த தயாசிறி ஜயசேகர நேற்றும் இந்த விடயம் குறித்தும் பாராளுமன்றில் பேசியிருந்தார். இதன்போது சபாநாயகர் வழங்கிய தெளிவுபடுத்தலை அடுத்து தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கத் தயாராக இருப…

    • 1 reply
    • 877 views
  12. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் இரண்டு ரூபாவினாலும் (136 ரூபா), 95 ரக ஒக்டேன் பெற்றோல் ஐந்து ரூபாவினாலும் (159 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுப்பர் டீசல் ஐந்து ரூபாவினால் (131 ரூபா), குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. https://www.virakesari.lk/article/60215

    • 0 replies
    • 499 views
  13. பாறுக் ஷிஹான் யாழ் தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி ,வேலணை, மண்டைதீவு, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இம் மாதக் கடைசியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைக…

  14. July 10, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன. …

  15. தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை சரியான பாதையில் பயணித்திருந்தால் இன்று தமிழ் மக்களின் நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் நாம் செய்த ஊழ்வினைப்பயன் போலும் தமிழ் அரசியல் தலைமை அரசாங்கத் துடன் இணைந்து செல்வதைப் பெரிதாக நினைத்ததேயன்றி, தமிழ் மக்களின் உரிமை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவர்களிடம் இம்மியும் இருக்க வில்லை. இதன்காரணமாக தமிழ் மக்கள் எல்லா வழிகளாலும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். வன்னி யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட இழப்பை பலமாகக் கொண்டு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்று நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க, அவர் கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பது, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்துவது என்பதிலேயே த…

    • 0 replies
    • 817 views
  16. இலங்கையுடனான உறவுகள் குறித்து தான் கொண்டுள்ள முக்கியத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார் அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரொட்னி எம் பெரேரா அமெரிக்க ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் சந்தித்து நற்சான்று பத்திரங்களை கையளித்தவேளை டொனால்ட் டிரம்ப் இதனை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரை வரவேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அமெரிக்கா இலங்கையுடன் தோளோடுதோள் நிற்கும் என்ற தனது அர்ப்பணிப்பை மீள வலியுறுத்தியுள்ளார். இலங்கையுடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும், கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரிவுபடுத்துவது குறி;த்த தனது அர்ப்பணிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். …

    • 1 reply
    • 376 views
  17. தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விருப்பம் தெரிவிப்பதாக இல்லை என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவ ராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்தார். இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனத…

    • 0 replies
    • 362 views
  18. இலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை கடந்த மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா…

    • 0 replies
    • 981 views
  19. மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் தொலைபேசி மூலம் வழிநடத்தப்பட்ட நீதிமன்றங்கள் நல்லாட்சியில் சுயாதீனமாகச் செயற்படுகின்றமை, தொடர்ந்து கிடைக்கப் பெறும் தீர்ப்புகள் ஊடாக உறுதிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களில் நீதிமன்றத்தின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அதிகளவான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், நியாயமானத் தீர்ப்பை பெற்றவர்களுள் தானும் ஒருவரெனத் தெரிவித்துள்ளார். கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பை சுமத்…

    • 0 replies
    • 627 views
  20. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகஸ்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/60063

    • 2 replies
    • 443 views
  21. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர்ந்துள்ள நிலையில் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தி வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60159

  22. வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல்போய்விட்டனர் - கேப்பாபுலவு மக்கள் விரைவில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் . முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் (10) 863 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்றுவருகின்றது . கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இன்றுவரை தொடர்ந்தது இடம்பெற்றுவருகின்றது . மக்களின் தொடர் போராட்டத்தின் பலனாக ஒருதொகுதி காணிகள் …

  23. தமிழ் பேசும் மக்களின் தாயகம் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இலங்கைப் படையினர் விடுதலை குற்றங்களை நிரூபிக்க மேலதிக ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் அறிவிப்பு பதிப்பு: 2019 ஜூலை 03 16:55 புலம்: திருகோணமலை, ஈழம் புதுப்பிப்பு: ஜூலை 03 17:56 தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலை கடற்கரைப் பிரதேசத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இலங்கை விசேட அதிரடிப்படையினர் பன்னிரெண்டுபேர் உள்ளிட்ட பதின்மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டு…

  24. வேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஒத்திவைப்பு இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன…

  25. தேசிய வளங்­களை விற்­ப­தற்­கான சூழ்ச்­சியே காணி திருத்த சட்டமூலம் (இரா­ஜ­துரை ஹஷான்) காணி திருத்த சட்ட மூலம் வெற்­றி­பெ­று­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. மக்­க­ளுக்கு நன்மை புரி­வ­தாகக் குறிப்­பிட்டுக் கொண்டு ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் தொடர்ந்து தேசிய வளங்­களைப் பிற நாடு­க­ளுக்கு விற்கும் சூழ்ச்­சி­யி­னையே முன்­னெ­டுக்­கின்­றது என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார். வஜி­ரா­ஷ்­ரம விகா­ரையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். விசேட காணி திருத்­தச்­சட்ட மூலம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.