ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
Published By: VISHNU 05 MAY, 2025 | 05:42 PM பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/213753
-
- 1 reply
- 151 views
- 1 follower
-
-
07 May, 2025 | 03:43 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவை கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல கைது | Virakesari.lk
-
- 0 replies
- 244 views
-
-
07 May, 2025 | 05:18 PM நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (7) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியானது வடக்கு, கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைய வடக்கு, கிழ…
-
- 0 replies
- 272 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் ஆட்சியியல் நிர்வாகம், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது ஊழலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், சிறுபான்மையினர், பெண்கள் மற…
-
- 0 replies
- 125 views
-
-
07 May, 2025 | 06:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராகவும் மொத்தமாக 4இலட்சத்தி 88ஆயிரத்தி 406 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 9.17வீதமாகும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் வெற்றிகொள்ள முடியவில்லை. மொத்தமாக 381 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந…
-
- 0 replies
- 117 views
-
-
07 May, 2025 | 07:02 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதி…
-
- 0 replies
- 112 views
-
-
விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு! Vhg மே 05, 2025 விடுதலை புலிகளின் கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா குமுதினி உடல்சுகயீனம் காரணமாக முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை போராளியாக மலர்விழி இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் போராளியின் மரணம் முல்லைத்தீவில் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2025/05/blog-post_50.html
-
- 7 replies
- 674 views
-
-
3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்! தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது. இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு…
-
- 0 replies
- 120 views
-
-
தமிழ் கட்சிகள் விழித்துக்கொள்ளும் வழியை காட்டியுள்ள தேர்தல் முடிவுகள் May 7, 2025 11:44 am வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆறுமாதங்களே கடந்துள்ள சூழலில் இத்தகைய வீழ்ச்சி என்பது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் தமிழ் மக்கள் …
-
- 0 replies
- 303 views
-
-
Published By: VISHNU 01 MAY, 2025 | 08:56 PM மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர்களிற்காக அன்று முதல் இன்றுவரை இந் நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழ் அரசுக் கட்சி தான். தம…
-
-
- 21 replies
- 882 views
- 2 followers
-
-
எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்! - எம்.கே.சிவாஜிலிங்கம் adminMay 7, 2025 ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவை வெற்றிபெற்றது. இது தொடர்பில் வினாவிய போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் – இந்த…
-
- 0 replies
- 179 views
-
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை! பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர், அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க…
-
-
- 24 replies
- 921 views
-
-
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு May 3, 2025 தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள மு…
-
-
- 4 replies
- 491 views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ அத்துடன், ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, …
-
-
- 13 replies
- 556 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்! இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்…
-
-
- 8 replies
- 403 views
- 2 followers
-
-
06 MAY, 2025 | 01:19 PM 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் என தனது வாக்கை செலுத்திய பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான தேர்தல். எங்களின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற விடயம், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். அந்த வகையிலே எங்கள் மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக நடத்தி வருகின்ற பிரச்சார முயற்சிகள் ஊடாக இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு, அனைவரும் கட்டாய…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மாணவர் ஒன்றியத்தால் இன்றையதினம் வெளியிடப்பட் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவு கூறும் மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்ச் சமூகத்திற்கான தெளிவூட்டல். தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைவடைந்து இருக்கும் இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்க…
-
-
- 3 replies
- 341 views
- 1 follower
-
-
இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்! பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு புள்ளிவிவரங்களைக் குறைக்க முயற்சிப்பதால், குடியேற்ற திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்தது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பிரித்தானியாவுக்குள் முக்கிய விசா …
-
- 0 replies
- 212 views
-
-
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விசித்திரமான விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது மனைவி சமைக்கும் பிரியாணி சுவையில்லாமல் இருப்பதால் டென்மார்க்கைச் சேர்ந்த 41 வயதான கணவன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அடிக்கடி வாக்குவாதங்கள் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மனைவி மீதே இவ்வாறு விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு, மனைவி சமைக்கும் பிரியாணி சுவையாக இல்லாததால், கணவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு பிரியாணி மீது தனக்கு தனித்துவமான ஆர்வம் உள்ளதாகவும், சமாதானமான வாழ்க்கையை தான் விரும்புவதால் தேவையற்ற மோத…
-
-
- 9 replies
- 765 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீல விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை ம…
-
- 1 reply
- 342 views
-
-
-
பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் (04) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , பிள்ளையுடன் அவர் தும்பளை பகுதியில் வசித்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1430574
-
- 0 replies
- 162 views
-
-
வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு! வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பா…
-
- 0 replies
- 180 views
-
-
காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை adminMay 4, 2025 சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புன…
-
-
- 2 replies
- 289 views
-
-
Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 05:40 PM ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார். இந்த சந்திப்பில் நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-