Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை… June 29, 2019 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் காவற்துறை மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார். தெரிவுக் குழுவில் பாராளுமன்ற …

    • 4 replies
    • 1.2k views
  2. முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தின் மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை இன்று ஆரம்பித்துள்ளனர். வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்துக்கு முன்பாக இந்த உண்ணாவிரத போராட்டம்.நடைபெற்று வருகின்றது. முன்னதாக வள்ளிபுனம் காளிகோவிலடியிலிருந்து பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள் இனிய வாழ்வு இல்லத்துக்கு முன்பாக வந்து தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் ஏனைய பழைய மாணவர்களும் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். …

    • 1 reply
    • 676 views
  3. மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது.கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அவரசரகால சட்டம் பயங்கரவாத தாக்குதலைவிட பயங்கரமானதாகும்.அதனால் இச் சட்டத்தை பயங்கரவாதத்துக்கு மாத்திரம் பாவிக்கவேண்டும். மாறாக தொழிற்சங்களை அடக்க பாவிக்கக்கூடாது. தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அத்துடன் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். மணர தண்டனை வழங்குவதற்கு நாங்…

    • 1 reply
    • 557 views
  4. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினால் இலங்கையில் சாதாரண சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியை மையப்படுத்திய குறித்த குழு சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புப்பட்டு பயிற்சி பெற்றிருந்தமையினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் தற்கொலை தாக்குதல்களோ குண்டு வெடிப்புகளோ மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையின் புலனாய்வு துறைகள் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளன. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும் பா…

    • 0 replies
    • 477 views
  5. வெளியானது மரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் பெயர் பட்டியல் போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர் தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் உட்பட 4 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதன்படி குறித்த 20 பேரின் பெயர்கள் பின்வருமாறு, எம்.கே. பியதிலக்க எம் …

  6. நெல்லியடியில் 200 கிலோ கிராம் கஞ்சா மீட்பு நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று நண்பகல் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. 6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த குறித்த கஞ்சா பொதிகள் வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்பட…

    • 1 reply
    • 567 views
  7. சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:09 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது. இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியிலும் அவர் தொடருவார். எனினும், மேற்கு படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இரு…

    • 1 reply
    • 876 views
  8. தமிழ்சமூகத்தின் பொருளாதாரம் கல்வியிலே தங்கியுள்ளது: கவீந்திரன் கோடீஸ்வரன். ஏரூர் தில்லை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட மல்வத்தை கிராமத்திற்கு இன்று (28) அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய அதிபர் திருமதி. ஜீ.கணேஸ்வரன் தலைமையில் வித்தியாலய மைதானத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றது. மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் : எமது தமிழ்ச்சமூகம் கடந்தகால யுத்தத்தினால் பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்து பொருளாதார ரீதியில் நலிவுற்றுக்கிடக்கின்றது. தமிழர்களின் பொருளாதாரம் ஸ்த்திரத்தன்மை ப…

  9. மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் : கூட்டமைப்பு உறுதி (நா.தனுஜா) நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே முற்றாக மரணதண்டனையை இல்லாதொழிக்கும் வகையில் சட்டங்களில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாராளுமன்றத்தில் மேற்கொள்வோம் என்று கூட்டமைப்பு உறுதியளித்திருக்கிறது. போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை விரைவில் நிறைவேற்றவிருப்பதாகவும், அதற்குரிய அனுமதிப்பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக…

  10. 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான, மேச்சல் தரவைகள் தேவை June 29, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கௌரிதிலகன் தெரிவித்துள்ளார். விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பு மீன்பிடி என்பவற்றை பிரதானமான தொழிலாகக் கொண்டு மக்கள்வாழும் மாவட்டமாகக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தல் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையல் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, காலபோகச்செய்கையின் போது முழுமையான விவசாய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கால்நடைக…

  11. முரசுமோட்டையில், ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படுவதில்லை… June 29, 2019 கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது, கமக்கார அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை சேற்றுக்கண்டி மருதங்குளம் புலிங்கதேவன் முறிப்பு ஆகிய பகுதிகளில் பயிர்ச் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரியவாறு நீர் வழங்ப்படாது அப்பிரதேசத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இரவு வேளைகளில் பிரதான நீர் விநியோக வாய்க்கால்களை சட்டத்திற்கு மாறாக மறித்து நீர்ப்பாசனம் …

  12. வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம்- June 29, 2019 மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு 7ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கு மீள் குடியேறி சுமார் 10 வருடங்களை கடந்த நிலையில் இது வரை எவ்வித வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை எனவும், கிடைக்கின்ற வீட்டுத்திட்டங்கள் காரணம் இன்றி இடை நிறுத்தப்படுவதாகவும் கூறி மன்னார் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் யாக்கோப்பிள்ளை மதுரநாயகம் என்பவரே குறித்த முறைப்பாட்டை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்க…

  13. ஒரு பிரச்சினையை பேசி தீர்ப்பதன் மூலம், இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன்னாரிலே பல காலமாக விட்டுக் கொடுப்புக்களுடனும், பல்வேறு அர்ப்பனிப்புடனும் வாழ்ந்து வருகின்றோம் என, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (28) காலை, மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தரைத்த அவர், மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலினுடைய தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டு பின் மீண்டும்…

  14. தோல்வியடைந்த வறுமை ஒழிப்புத் திட்டமே சமுர்த்தி- சப்ரகமுவ ஆளுனர் சமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் பயனற்ற ஒரு நடவடிக்கையாகும் எனவும் தனக்கு அதிகாரம் இருக்குமாயின் சமுர்த்தித் திட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பலாங்கொடயில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். வறுமையை ஒழிப்பதற்கு சமுர்த்தி அதிகாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்ட போது அந்த அதிகாரிகளின் வறுமையே நீக்கப்படுகின்றது. பாரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டதனால், அரசியல்வாதிகளின் வறுமையே போக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமு…

    • 0 replies
    • 655 views
  15. கதிர்காமப் பாத யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவேன்: மனோ பாரம்­ப­ரி­ய­மாக வடக்கு, கிழக்கு, மலை­ய­கப் ப­கு­தி­க­ளி­லி­ருந்து வரு­டாந்தம் கதிர்­கா­மத்­திற்கு மேற்­கொ­ள்­ளப்­பட்­டு­வரும் பாத­யாத்­தி­ரை அர­ச­ அங்­கீ­கா­ரத்­துடன் தேசிய புனித யாத்­தி­ரை­யாக பிரகடனப்படுத்தப்படும் என்று தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்­னேற்ற இந்து சமய அலு­வல்கள் அமைச்­சரும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். நாட்டில் தமி­ழர்கள் தங்­களின் இருப்பை நிலைநிறுத்­து­வ­தோடு சகோ­தர இன, மத மக்­களை அர­வ­ணைக்க வேண்டும். அப்­போ­துதான் சமூக நல்­லி­ணக்­கத்­தினை பாது­காத்துக் கொண்டு தமிழ் மக்­களின் இருப்பை உறு­தி­ப்ப­டுத்­த­…

    • 1 reply
    • 607 views
  16. June 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார…

    • 2 replies
    • 471 views
  17. சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம் ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை. ஜனதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்…

    • 3 replies
    • 637 views
  18. தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது. நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

    • 65 replies
    • 5.8k views
  19. ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. இ. டபிள்யூ. குணசேகர மற்றும் பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பாக பொதுஜன பெரமுன தெரிவிக்கையில், புதிய கூட்டணியின் கொள்கையை உருவாக்கும்போது இரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பரந்த கூட்டணியை உருவா…

    • 4 replies
    • 723 views
  20. செம்மலை- நீராவியடி ஏற்றம் பிள்ளையார் ஆலயத்தில் எங்களுடைய உரித்தை நிலைநாட்டும் வகையில் எதிர்வரும் 6ம் திகதி பாரிய பொங்கல் விழாவை நடத்தபோவதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், செம்மலை - நீராவியடி ஏற்ற பிள்ளையார் ஆலயம்; மிக நீண்டகாலமாக தமிழ் மக்களால் வழிபடப்பட்ட ஆலயம். பின்னர் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அந்த பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டதுடன், அங்கு சிறிய புத்தர் சிலையையும் வைத்தனர். பின்னர் இ…

    • 0 replies
    • 402 views
  21. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்புருபிட்டியவில் நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் புதிதாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவில் இயங்கும் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டதின்; அறிக்கையொன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ பாதுகா…

    • 2 replies
    • 869 views
  22. June 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற…

  23. June 28, 2019 கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரையை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று (28) பிற்பகல் வடக்கு பிரதேச செயலகமுன்பாக ஆரம்பிக்கப்பட்டது. மனிதனால் தீர்த்துவைக்க முடியாத விடையத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர். #கல்முனை #தமிழ் பிரதேச #கதிர்காம …

  24. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் தெரிவு குழு உறுப்பினராக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கமைய தாக்குதலுக்கான பொறுப்பை யாரிடம் வழங்குவது என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச, குற்றவாளிகளான பயங்கரவாத அமைப்பின் 26 பேருக்கு சம்பளம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் சுமத…

    • 4 replies
    • 1.2k views
  25. அவசரகால சட்டத்தைக் கொண்டு வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த அரசாங்கம் முயற்சி : ஸ்ரீதரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் சபையில் தெரி­வித்தார். வடக்கிலிருந்து உட­ன­டி­யாக இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை நீ­டிப்­பது குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.