Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மைய நாட்களில் வடக்கில் சில வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சம்பவங்களுக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் உருவாக்கப்பட்டன. யாழ் பொலிஸ்தரப்பு குறித்த சம்பவங்கள், முன்னாள் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்படுவதாக குற்றம் சுமத்தினர். வரலாறு முழுவதும் வன்முறைகளும் ஆயுதங்களும் தமிழர் தலையில் திணிக்கப்படுவதுபோலவே இந்தக் கட்டுக்கதைகளும் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்டன. தமிழ் மக்களின் தாயகத்திற்காக, அந்தக் தாயகத்தை ஆளும் சுய உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள். 2009 மே மாதத்துடன் தமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக விடுதலைப் புலிகள் இயக்கம்…

  2. நூருள் ஹுதா உமர் நாடு பாரிய‌ பொருளாதார‌ பிர‌ச்சினையில் த‌விக்கும் போது எரிகிற‌ வீட்டில் பிடுங்கிய‌து லாப‌ம் என்ப‌து போல் சாண‌க்கிய‌ன் எம். பி யின் அணியினர் ம‌ருதானை ஜும்ஆ ப‌ள்ளி முன்பு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ச‌ட்ட‌த்தை நீக்குமாறு ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ த‌டைச்ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்த‌து யார் என்ப‌து இவ‌ர்க‌ளுக்கு தெரியுமா? 1979ம் ஆண்டு ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் ஆட்சியில் அன்றைய‌ ஜ‌னாதிப‌தி ஜேஆர் ஆகும். இச்ச‌ட்ட‌ம் நாட்டுக்கு மோச‌மான‌து என்றால் க‌ட‌ந்த‌ ர‌…

    • 3 replies
    • 367 views
  3. மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாவலடி கரையோர பகுதியில் வீடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட 22 பேரும் சிலாபம், உடப்பு, மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் கூறியுள்ளனர். இவர்களுடன் வான் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கடலோடிகளின் வரைபடங்கள், உலருணவுகள்,திசை அறி கருவிகள், எரிபொருட்கள்,மருந்துப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது. http://www.thinamurasam.com/

  4. யுத்த கால வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க ஊடகங்களே சர்வதேச சமூகத்திற்கு இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான வீடியோ காட்சிகளை விநியோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக அரசாங்க ஊடகவியலாளர்களே இவ்வாறு இறுதிக் கட்ட யுத்தம் பற்றிய வீடியோ காட்சிகளை விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சில வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், அரசாங்க ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவரின் லாப்டாப்பில் இவ்வாறான வீடியோ காட்சிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மேலதி…

  5. யாழ். சிறையிலிருக்கும்கைதிக்கு ஹெரோயின் ஆடைகளுக்குள் மறைத்துக் கடத்தியவர் சிக்கினார் யாழ்ப்­பா­ணம் சிறைச்சா­லைக்­குள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கும் விளக்­க­ம­றி­யல் கைதிக்கு வழங்­கு­வ­தற்கு என ஹெரோ­யின் போதைப்­பொ­ருளை கடத்த முற்­பட்ட இளைஞ ரொரு­வர் நேற்று முன்­தி­னம் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் கைது செய்­யப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது. விளக்­க­ம­றி­ய­லில் கைதி­யான தனது சகோ­த­ரரைப் பார்ப்­ப­தற்­காக ஊர்­கா­வற்­றுறை நாரந்­த­னை­யைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ரு­வர் ஆடை­களை கொண்டு சென்­றுள்­ளார். அந்த ஆடை­கள் மீது சந்­தே­கம் கொண்ட சிறைக்­கா­வ­லர்­கள் அதனை பரி­சோ­தித்­துள்­ள­னர். …

  6. கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரை பொழுது போக்கு பிரதேசம் கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரைப் பகுதியை பொழுது போக்கும் கடற்கரைப் பகுதியாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைப்பெற்ற போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் மேலதிக புகையிரத வீதியினை நிர்மானிப்பதற்கான இடவசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் இத் திட்டத்தின் மூலம் கடலரிப்பினை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.virakesari.lk/a…

  7. மஹிந்த ராஜபக்ஷவின், இல்லத்திற்கு முன்பாக... தொடரும் போராட்டம்! தங்காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள முதல் தடை அரண்களை (barricades) உடைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ………………………………………………………………………………………………………………………………………………….. தங்காலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாட்டின் பெரு…

  8. போராட்டங்களினால்... சுற்றுலாப் பயணிகளுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது – அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சு, இலங்கை தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுடன் , கடந்த ஆண்டு …

  9. யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது அச்சம்: வரதராஜ பெருமாள் (கொழும்பு, ஏப். 4) இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப் பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார். 1990-ல் இலங்கையை விட்டு வெளியேறிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: *யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த விடுதலைப் புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, இலங்கை ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர். *தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு…

    • 0 replies
    • 1k views
  10. தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது பசி­லின் கருத்தை மேற்­கோள்­காட்டி அமைச்­சர் ராஜித நேற்­றுத் தெரி­விப்பு Share “காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­த­னர். பசில் ராஜ­பக்ச, காணி விடு­விப்பை தாங்­கள் எதிர்க்­க­வில்லை என்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கி­றது. பசில் ராஜ­பக்ச கூறிய விட­யங்­களை மகிந்த அன்று கேட்­டி­ருந்­தால் அவர் இன்­றும் ஆட்­சி­யில் இருந்­தி­ருப்­பார். கோத்­த­பாய கூறி­ய­தைக் கேட்­ட­தா­லேயே மகிந்­த­வுக்கு இந்­த­நிலை” இவ்­வாறு அமைச்­ச­ரும் அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித தெரி­வித்தார். அரச தக­வல் திணைக்­க­ள…

  11. தமிழர்களுடைய பிரச்சினையை மட்டும், ஏனைய தரப்பினரிடம்... கோரிக்கையாக முன்வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போத…

  12. ’21’ ஆவது திருத்தச்சட்ட விவகாரம் – இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 21ஐ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277729

  13. இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் சம்பந்தன் முன்வைத்த கருத்திற்கு இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும பாராட்டுத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அளகப்பெரும இது ஒரு முன்னேற்றகரமான பேச்சு எனவும் குறிப்பிட்டார். கடந்த நாற்பது வருடங்கில் தமிழர் தரப்பிடமிருந்து வந்துள்ள சாதகமான சமிக்ஞை இதுவெனவும் இது குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அளகப்பெரும சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் செல்லும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.…

  14. காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர். ஐக்கிய நாடுகள் சபை குழுவினரிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு…

  15. இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக... பதவியேற்க, தயாரில்லை – மைத்திரி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சம்மதத்துடன் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278678

  16. அனைத்து அரசுகளும் ஊடகவியலாளர்களை பாதுக்கவேண்டும் – ஐ.நா.செயலர் அனைத்து நாட்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக ஊடக சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிட்டு அறிக்கையிலேயே ஐ.நா.செயலாளர் நாயகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை கட்டவீழ்த்தி விடும் நபர்கள் மட்டில் பக்கசார்பற்ற விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம் மக்களின் அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனித உரிமை பிரகடனத்…

  17. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் – எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279402

  18. சிறீலங்கா சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு இதுகாள் வரை புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் சேவகம் புரிந்து வந்த, வந்து கொண்டிருக்கும்.. ஈபிடிபி எனும் தமிழ் ஆயுதக் கும்பலின் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேஜர் என்று சொல்லப்படும் இளங்கோ அல்லது ரேகன் என்பவரை சாவகச்சேரி நீதிமன்ற நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் போட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஈபிடிபி ஆயுதக் கும்பல் மீது சிறீலங்கா படையினர் கடுமையாக நடந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு பின்னர் அவர்களைக் கொண்டும் தமது சிங்களக் காடைகள் அடங்கிய புலனாய்வுத்துறையைக் கொண்டும் மக்கள் விரோத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ----------- EPDP Jaffna Deputy Mayor place…

    • 29 replies
    • 2.5k views
  19. வடக்குக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்க மாகாணத்திற்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தினை கிளிநொச்சியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.10.2017 ) நடைபெற்றது. சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்துக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான அமைக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சமூக சேவைகள். நலன்பரி மற்றும…

  20. முன்னேஸ்வரத்தில் புராதன சிலையின் பாகங்கள் கண்டுபிடிப்பு (ஒகஸ்டின் பெர்ணான்டோ) சிலாபம், முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை அண்மித்த பகுதியிலிருந்து புராதனச் சிலையொன்றின் பாகங்கள், இன்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் துப்புரவுப் பணிகளின் போது, முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை அண்மித்த குளம் ஒன்றிலிருந்தே சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னேஸ்வரத்தில்-புராதன-சிலையின்-பாகங்கள்-கண்டுபிடிப்பு/175-206046

  21. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்... இரண்டாம் நாள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வட மாகாணத்தின் ஏனைய சில பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

  22. கலைக்கப்பட்டது சைட்டம் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26422

  23. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – தேசபந்துவிடம், இன்று காலை ஒரு மணிவரை 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்குத…

  24. பிரச்சினைக்கு தீர்வுகண்டிருந்தால் மஹிந்தவே இன்றும் ஜனாதிபதி பிரச்­சினையை தீர்க்க முடிந்­தி­ருந்தும் மஹிந்த ராஜ­பக் ஷ அதனை ‍செய்யத் தவ­றி­யி­ருந்தார். எனவே தேசிய பிரச்­சி­னைக்கு அவர் தீர்வு வழங்­கி­யி­ருந்தால் இன்றும் அவர் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார். புலம்­பெ­யர்ந்­த­ தமி­ழர்கள் முத­லீ­டுகள் செய்ய தயா­ராக இருக்­கின்­றனர். எனினும் ஊக்­கு­விப்பு கிடை­யாது என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தனது உரை­யில், அர­சி­ய­ல­ம…

  25. நாட்டின் பிள்ளைகளுக்காகவே... அமைச்சுப் பதவியை, பொறுப்பேற்றேன் – ஹரின் பெர்னாண்டோ நாட்டின் பிள்ளைகளுக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியானவேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து அறிஞர்களையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.