Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளும், ஐஎஸ்ஸும் ஒன்று அல்ல! Madawala News June 08, 2019 "முஸ்லிம்கள் ஜஎஸ்காரர்களை காட்டிக்கொடுத்தார்கள். தமிழர்கள் புலிகளை காட்டிக்கொடுக்கவில்லை". ஆகவே, முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் என சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள். இப்படி பேச வேண்டாம் என முஜிபுர் ரகுமானையும் (ஐதேக), பிமல் ரட்நாயக்கவையும் (ஜேவிபி) சமீபத்தில் ஒரு சிங்கள டீவி அரசியல் நிகழ்வின் போது நான் சொன்னேன். இது தமிழர்களையும், முஸ்லிம்களையு…

    • 1 reply
    • 800 views
  2. 2016 ம் ஆண்டு 12 ம் இலக்க தகவல்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமைகளுக்கான சட்டத்திற்கு சவால் விடும் வகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிர்வாகம் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு தகவல் வழங்க மறுப்பு தெரிவிக்கும் அதிகாரிகள் தகவல் பெற விண்ணப்பித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள நான்கு முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகள் தவிர்ந்த ஏனைய தமிழ் ப…

    • 0 replies
    • 296 views
  3. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு குறித்து நேற்று தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் இன்று மாலை அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது. தெரிவுக்குழுவில் வெளியாகும் சில விடயங்கள், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடையாக அமைவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ”அந்தக் கடிதம் தமது உத்தரவு என்றும், அதனை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்றும், 2019-06-07 அன்று ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்தார். …

    • 0 replies
    • 278 views
  4. தாக்குதல் குறித்த விசாரணைகள் – ஜனாதிபதிக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்! தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இங்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு 2018 நவம்பர் 13ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை. அவர்களை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் …

    • 3 replies
    • 923 views
  5. பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வற்புறுத்தியதாக பூஜித் சாட்சியம்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாக கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது பொலிஸ் மா அதிபர் பூஜித் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்து இரவு 8 மணிக்கு சந்திக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குழ…

    • 3 replies
    • 1.1k views
  6. யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராஜன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பிடித்துள்ளதாக கனகராஜன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கண்டி வீதி கனகராஜன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகாமையில் வவுனியா நோக்கி சென்ற அரச திணைக்களம் ஒன்றிற்கு சொந்தமான சொகுசு வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. எனினும் அவ்வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர். எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்ட போதும் வாகனம் தீயில் முற்றாக எரிந்து நாச…

  7. விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவர் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்காது , இறுதிகிரியைகளை செய்து கொண்டிருந்த வேளை, காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி சடலத்தை எடுத்து சென்றுள்ளனர். இச் சம்பவம் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள நாவலடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நடைபெற்றது. அது குறித்து தெரியவருவதாவது , அப்பகுதியை சேர்ந்த பெரியான் நாகேந்திரம் (வயது 67) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது , மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர். அதனையடுத்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்படவருக்கு யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் சாவகச்சேரி வைத்திய சாலைகளில்…

  8. June 8, 2019 யாழில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியிலுள்ள வீடொன்றினுள் பகலில் புகுந்த திருடர்கள் 5 பவுண் நகை திருடி சென்றுள்ளனர். யாழ்.பெருமாள் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களே நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி வேலைக்கு சென்றுள்ளனர். பிள்ளைகளும் பாடசாலை சென்றுள்ளனர். அச்சமயம் வீட்டில் யாருமற்ற வேளை புகுந்த திருடர்கள் வீட்டின்னுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி வீட்டில் இருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …

  9. அமெரிக்கா வழங்கிய ‘கஜபாகு’ போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைப்பு அமெரிக்கா கொடையாக வழங்கிய போர்க்கப்பல் நேற்று ‘எஸ்எல்என்எஸ் கஜபாகு’ என்ற பெயருடன், (P-626) சிறிலங்கா கடற்படையில், இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் றோகித அபேசிங்கவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போர்க்கப்பலை, இணைக்கும் ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் போர்க்கப்பல் சிறிலங்காவின் ஆழ்கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்தும…

    • 4 replies
    • 597 views
  10. ஜனாதிபதி முல்லை விஜயம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சற்று முன்னர் முல்லைத்தீவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virak…

  11. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று (09) இலங்கை வருகைதரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது. அயல்நாடுகளுக்குள்ளான நட்புறவை வெளிபடுத்துவதே இவ்விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .tamilmirror.lk/செய்திகள்/ஞாயிறன்று-மோடி-வருகிறார்/175-233878 ‘இந்தியப் பிரதமர் எப்போது இலங்கை வரவிருக்கின்றார்? எத்தனை நாட்கள் தங்கியிருக்கப் போகின்றார்? அவரது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்ன? அத்தோடு சீனா இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் வினவின…

  12. அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கியுள்ளது: டக்ளஸ் (எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கி ஊடகங்களிலே காட்டிக் கொண்டுத்து வருகின்றது. தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்தி விட்டால் ஒரு முதலீட்டாளராவது இந்த நாட்டின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அ…

  13. சத்தியமூர்த்தியே தொடர்வார் ; சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தpia யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்பட…

  14. சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் மணலாறு (வெலிஓயா) பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதி குருகந்த ரஜமஹா விகாரை என்ற தமது ஆலயம் அமைந்துள்ள பகுதி எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டு பண்ணுவதாகவும் இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதில் கவனம் செலுத்தி தமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை புல்மோட்டை பகுதியிலிருந்…

  15. இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான, சஹ்ரான் ஹாசிம் குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் சில சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டன. அம்பாறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களின் மூளையாக இருந்து செயல்பட்ட சஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்தார் என்று இலங்கை அரசு கூறுகிறது. மே…

    • 4 replies
    • 735 views
  16. அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் பல்வேறு இரகசியங்கள் அம்பலமாகியுள்ள நிலையிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ள நிலையிலும் இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எதற்காக இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியுள்ளார் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. http://www.puthinappalakai.net/2019/06/07/news/38393

    • 0 replies
    • 286 views
  17. சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது ! கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள பெளத்த பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வைத்தியர் குறித்த தகவ…

  18. தற்கொலை குண்டு தாக்குதலில் பாதீக்கப்பட்ட நீர் கொழும்பு கட்டுவாப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி ஆலய பங்கு மக்கள் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் குறித்த மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்பை எதிர் கொண்ட நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த மக்கள் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கில் 'ஆற்றுப்படுத்தல்' பயணமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை …

    • 1 reply
    • 425 views
  19. பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் முறைபாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். விமல் வீரவன்ச மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தன் மீது சுமத்தப்பட்டு வரும் அப்பாட்டமான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே மேற்கண்ட முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாகவும் ரிஷாத் பதியூதீன் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்க்காட்டியுள்ளார். ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தான் இந்த முறைப்பாட்டைப் பதிவுசெய்யப் போவதாக ரிஷாட் குறிப்பிட்டாலும் பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொண்டு, குறித்த முறைப்ப…

  20. (எம்.ஆர்.எம்.வஸீம்) எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து தெளிவுபடுத்துவோம் என முன்னாள் அமைச்சர் எச்.எம்.ஏ, ஹலீம் சபையில் தெரிவித்தார். நாம் எமது மக்களுக்காகவே அமைச்சுப்பதவிகளை துறந்தோமே தவிர ரிஷாத் பதியுதீனுக்காக பதவி துறக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் சில ஊடகங்கள் மேற்கொண்ட பொய் பிரசாரம் காரணமாக முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முஸ்லிம் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தன. அதனால் எமக்கெதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவே நாங்கள் இந்த தீர்…

  21. காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து தாக்கல் செய்த வழக்கிற்காகவே அவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியினால் தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும், தான் நிரபராதி எனவும் விடுமுறையை ரத்துச் செய்து தனது பணியை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். #பூஜிதஜெயசுந்தர #காவற்துறைமாஅதிபர் http://globaltamilnews.net/2019/123687/

  22. June 7, 2019 கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் வடக்கு பகுதியில் வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்துள்ள விவசாயிகளின் வயல்காணிகளை அந்த மக்களுக்கே உரித்துடையது என்றும் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்;சின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு காலப்;பகுதியில் நாட்டில் நிலவிய அச…

  23. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைத் தாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தி யுள்ளார். நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் பேராபத்தான ஒரு நிலைமையை புத்த பிக்குமாரின் செல்வாக்கு தோற்றுவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை அடுத்து மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் நேற்று செய்வா…

    • 3 replies
    • 993 views
  24. தமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது -விக்னேஸ்வரன் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பசிக்கு சகோ­தர முஸ்லிம் மக்கள் இரை­யா­கி­வரும் இந்த தரு­ணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆத­ர­வு­டனும் பாசத்­து­டனும் ஆரத்­த­ழு­வு­வ­தா­கவும் அவர்­களின் துய­ரத்தில் பங்­கு­கொள்­வ­தா­கவும் வட மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்­களைப் பல தசாப்­தங்­க­ளாக பலி­கொண்­டு­வரும் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் பார்வை தற்­போது முஸ்லிம் மக்­களின் மீது திரும்­பி­யி­ருக்கும் இந்த வேளையில் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்…

    • 3 replies
    • 519 views
  25. வடக்கில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழிலிருந்து, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, செல்லும்போதும், வரும்போது தெற்கில் இல்லாத அளவுக்கு, பெரும் எண்ணிக்கையில் அடிக்கடி, ஏற்றி இறக்கும் சோதனை கெடுபிடிகள் இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்தது". இதனையடுத்து, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியுடன் நேற்று தொலைபேசியில் கதைத்திருந்தேன். வடக்கில் இருந்து வந்த புகார்களை சொன்னேன். தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.