ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்க…
-
- 0 replies
- 426 views
-
-
சேதமடைந்த பள்ளிவாசல்கள் புனரமைக்கப்படும் குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் இனவாதிகளால் தாக்கப்பட்டு பகுதி அளவில் அல்லது முழுமையாக சேதமடைந்த அனைத்து பள்ளிவாசல்களையும் புனரமைத்து தரப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் சேதமடைந்த பள்ளிவாசல்களின் விபரங்களை தருமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே நேற்றைய த…
-
- 0 replies
- 549 views
-
-
தற்கொலைத் தாக்குதல் குறித்து உண்மைகளைக் கண்டறிய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து முழுமையாக உண்மைகளை கண்டறியும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், மந்திரிகள் மற்றும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயமுடியும் என்ற காரணியும் புதிதாக இணைந்துகொள்ளப்பட்டது. கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் வாக்கியில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்க…
-
- 0 replies
- 338 views
-
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை திரண்டுள்ளனர். ஆவா குழுவின் உறுப்பினரான மனோஜ் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர்கள் திரண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது. அதனடிப்படையில் அந்த விடுதிக்குள் ச…
-
- 3 replies
- 763 views
- 1 follower
-
-
இரணைமடு நீர் வீண் விரையமாக்கப்படுகின்றமை குறித்து கவலை May 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் வீண் விரையமாக்கப்படுகிறது என விவசாயிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக இரணைமடுகுளத்து நீர் இடது மற்றும் வலது கரை நீர்ப்பாசன வாயக்கால் ஊடாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தற்போது அளவுக்கு அதிகமாக திறந்துவிடப்பட்டுள்ளதால் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் நிலங்களை கடந்து கழிவு வாய்க்கால்கள் ஊடாக வெறும் நிலங்களுக்குச் சென்று அங்கு சிறு குளங்கள் போன்று தேங்கி நிற்கிறது. குஞ்சுப்பரந்தன், திருவையாறு மகிழங்காடு, பன்னங்கண்டி ஆறு, நான்காம் வாய்க்கால் போன்ற இடங்களில்…
-
- 0 replies
- 727 views
-
-
கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களாலேயே விடுதலைப் புலிகள் உருவாகினர் – ரணில் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களே 1983 ஆம் ஆண்டு வன்முறைக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, டி.எஸ். சேனநாயக்கவின் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பட்ட பொதுக்கல்வி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “அனைத்து பாடசாலைகளையும் பொதுகல்வி முறைமையின் கீழ் கொண்டவருதே கல்வி அமைச்சருக்கும் மற்றும் கல்வி அமைச்சுக்குமான …
-
- 0 replies
- 279 views
-
-
அரபு மொழிக்கு ஆப்பு வைத்தார் சிறிலங்கா பிரதமர் வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சிறிலங்காவில் உள்ள எல்லா வீதி பெயர்ப் பலகைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் இருப்பைதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, உள்நாட்டு விவகார, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தனவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த மூன்று மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகள் பெயர்ப்பலகைகளில் இடம்பெறக் கூடாது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். கிழக்கிலும், வவுனியாவிலும் சில இடங்களில் வீதிகளின் பெ…
-
- 1 reply
- 590 views
-
-
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த வருடம் குறித்த வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பெக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இந்த வ…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, சிறிலங்கா காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற பதிவேட்டுப் பிரிவில் பணியாற்றிய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினரான, மொகமட் நௌசட் ஜலால்தீனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் மற்றொரு சந்தேக நபர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. http://www.puthinappalakai.net/2019/05/23/news/38113
-
- 0 replies
- 252 views
-
-
தெரிவுக்குழு விசாரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் இந்த தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் உதவியுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது. இந்த தெரிவுக்குழுவை அமைப்பதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது. றிசாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, கோரி, தெரிவுக்குழு அமைக்கும் யோசனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. எனினும், அதனைப் பொருட்படுத்தாமல், தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள…
-
- 0 replies
- 719 views
-
-
பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக, விரிவான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலர், காவல்துறை மா அதிபர், அரச புலனாய்வுச் சேவையின் தலைவர், சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மேல் மாகாணத்துக்கான மூத்த காவல்துறை அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படவுள்ளது, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக ஆராய சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் மற்றும் பரி…
-
- 0 replies
- 309 views
-
-
மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஜிகாதி தீவிரவாதம் உலகத்துக்கான பொது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.சிறிலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை, இந்தியா தனக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே கருதுகிறது என சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/120276
-
- 2 replies
- 587 views
-
-
பயங்கரவாத தாக்குதலை நடத்தக்கூடிய பிரிவினர் முஸ்லீம் சமூகத்துக்குள் உருவாக என்ன காரணம் ? சட்டத்தரணி ஹலி ஷப்றியை(கூடவே திருமதி.பேரியல் அஷ்ரப்) வசந்தம் டீவிக்காக ஊடகர் ஹிர்பான் கண்ட செல்வியின் ஒரு பகுதி பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளர் ரொஹான் குணரட்ணவின் கருத்தை தனக்கு இயன்ற எளிய தமிழில் ஷப்றி இந்த பேட்டியில் சொல்கிறார்.
-
- 0 replies
- 319 views
-
-
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாறு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 குழுக்கள் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் இவ்வாறு இலங்கை விசாரணையாளர்களுடன் களத்தில் உள்ள வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொ…
-
- 0 replies
- 220 views
-
-
அரபு மொழிப் பதாதைகள் அனைத்தும் உடன் அகற்றப்படவேண்டும் ; பிரபா கணேசன் வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் அல்லது சில உதவிகள் வழங்கிய இடங்களில் தனி அரபு மொழியில் பதாதைகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது கவலையளிக்கின்றது. இன்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். எமது நாடு சிங்கள தமிழ் மொழி நாடு இரண்டு மொழிக்கான நாடாக இருந்து கொண்டு வேறு புரியாத மொழியான இங்குள்ள முஸ்லிம் மக்களுக்குக்கூடப் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை வேறு மொழியான அரபு மொழியிலேயே பல இடங…
-
- 3 replies
- 961 views
-
-
புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார். இலங்கை அம்பாறை மாவட்டம் - விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன், ஜெகன் வசிக்கிறார். அவருக்கு இப்போது 32 வயதாகிற…
-
- 26 replies
- 3.5k views
- 1 follower
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் சபையில் தனது நியாயங்களை முன்வைக்க எழுந்த அமைச்சர் ரிஷாத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு அடக்க முயற்சித்தனர். எனினும் உரையாற்ற ஆரம்பித்த அமைச்சர் ரிஷாத், நண்பர் மஹிந்தானந்த என ஆரம்பித்தவுடன் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிபடுத்தினர். அதனையும் மீறி உரையாற்றிய அமைச்சர் ரிஷாத், …
-
- 0 replies
- 681 views
-
-
முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகத் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் மூலம், முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள மக்களின் சந்தேகம் நீங்கும் எனவும், அக்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று (21.05.19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட…
-
- 0 replies
- 510 views
-
-
May 22, 2019 நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெறுகின்றன. அலுவலக ரயில்கள் அனைத்தும் உரிய வகையில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது. அரசாங்க மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளும் வழமை போல இயங்குகின்றன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தற்போது முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அலுவலர்களின் வருகையும் முற்றுமுழுதாக …
-
- 0 replies
- 571 views
-
-
May 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட ஒன்பது இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களால் 290இற்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.இத் தாக்குதல்கள் நாட்டின் …
-
- 0 replies
- 748 views
-
-
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள் தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பலத்த சிக்கல் நிலைக்கு அரசாங்கம் முகம் கொடுத்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா அதிகாரியொருவர் இலங்கை வருகை தந்து அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்த…
-
- 16 replies
- 2k views
-
-
ஜானக பெரேரா கொலை வழக்கு – இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை கொழும்புச் செய்தியாளர்May 22, 2019 | 4:05 by in செய்திகள் அனுராதபுரவில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், முதல் எதிரியான சண்முகநாதன் சுதர்சனுக்கு 2014, செப்ரெம்பர் 5ஆம் நாள், அனுராதபுர மேல்நீதிமன்றத்தினால், 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த …
-
- 0 replies
- 455 views
-
-
இராஜினாமா செய்யத் தயார் - அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்சியை சேர்ந்த இரண்டு பிரதி அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனத்தில் அமர்வதற்கு தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…
-
- 0 replies
- 399 views
-
-
அனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019 நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை நேற்று (21) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முன்னைய காலங்களில் பிறப்பு மற்றும் இ…
-
- 0 replies
- 556 views
-