Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள மயமாக்கலின் இன்னொரு வடிவமாக யாழ்., கிளிநொச்சி பிரபல பாடசாலை மாணவர்கள் இராணுவ பயிற்சியில் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சியின் உருத்திரபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இராணுவப் பயிற்சிக்கு உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.எதிர்காலத்தில் உயர் இராணுவ அதிகாரிகளாக உருவாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு மாணவர்கள் இணைக்கப்பட்டுவருவது குறிப்பித்தக்கது. சிங்கள மயமாக்கலின் இன்னொரு வடிவமாக தமிழ்ப் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரச திணைக்களங்களுக்கு நியமனம் பெறுகின்ற உத்தியோகத்தர்களை தலைம…

  2. 20வயதில் போராளியாகி 20 வயதிலே களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்த போதும் , தான் நேசித்த மண்ணுக்காகத் தனது ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து 2009 மே17, வரையும் களத்தில் கடைசி மூச்சையும் அர்ப்பணிக்கும் முடிவோடு காத்திருந்தவன். நிலமைகள் நினைத்தவற்றுக்கு மாறாக தலைகீழாகி இவனதும் இவன் போன்ற ஆயிரமாயிரம் பேரினதும் கனவுகளில் துரோகங்கள் வென்றுவிட தோற்றுப்போனது தமிழினம். கண்ணீரோடு கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து இவனை இவனது தங்கைகள் காத்துக் கொண்டு போனார்கள். இவனை தடுப்பில் அடைத்தார்கள். மே16 காயமுற்ற தனது தாயார் உயிருடன் இருப்பாள் என நம்பிய இவனதும் இவனது தங்கைகளினதும் நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. காயமடைந்து ஏற்றப்பட்ட தாய் உயிருடன் இருப்பதற்கான எதுவித …

  3. தென்னாபிரிக்கத் தலையீடு; ஆளுங்கட்சிக்குள் குழப்பம்! இலங்கை இனப்பிரச்சினைக்கு சமரசம் செய்வதற்காக இலங்கை விடயத்தில் தென்னாபிரிக்கா தலையிடுவதை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்கா ஜனாதிபதியினால் இதற்கென விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் அந்த நாட்டின் உபஜனாதிபதி சிறில் ரம்போஸாவின் முயற்சி தொடர்வது சந்தேகத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த திங்களன்று கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் ஜாதிக ஹேல உறுமய மற்ற…

    • 0 replies
    • 624 views
  4. தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர் தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பு (கபே) கோரிக்கை விடுத்துள்ளது. “பதுளையில் உள்ள தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை தமது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று வணங்கி மன்னிப்புக் கோர வைத்துள்ளார்…

    • 4 replies
    • 645 views
  5. ‘‘அடுத்த ஜனாதிபதி கோத்தாதான்!” அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் அந்தத் தேர்தலில் அவரே வெற்றிபெறுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/29480

  6. சுற்றுலா விசாக்களில்... வேலை தேடி செல்லும், இலங்கையர்கள். – நாடு கடத்தும்.. மலேசியா! சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் இலங்கையர்களை மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாரந்தோறும் 20 இலங்கையர்களுக்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இலங்கைக்கு நாடுகடத்துவதாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தனது ச…

  7. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் உட்பட ஐவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் இன்று விடுதலை செய்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாகவும், போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தி காத்தான்குடி பொலிஸார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், வேலையற்ற பட்டதாhரிகள் சங்க தலைவர் ஆகியோர் மீது வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது. க…

  8. வெள்ளி, ஜூன் 27, 2014 - 08:04 மணி தமிழீழம் | வேந்தன் கிழக்கை இழக்கிறோம்! “உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள் கூடியே இருந்த தமிழர்களுக்கு இரவுத் துரோகம் செய்தமையின் ஒரு சாட்சிதான் நாகம்மாள். அது கெவிலியாமடு. இப்போது கெவிலியாமடு (அழுத்தமாக சொல்லப்படுகிறது). அதற்குள் இருக்கும் குடும்பமொன்றின் கதையை மேற்கண்ட வசனங்களில் இருந்துதான் ஆரம்பித்தார் 55ஐக் கடக்கும் நாகம்மாள். இரவில் கடத்தப்பட்டு அல்லது அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்படும் மரணத் துயரத்தின் வலியை அவரின் ஒவ்வொரு…

  9. கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை 12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம், 2,500 மில்லியன் ரூபாவை மாத்திரமே, 2017ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது. மத்திய அரசாங்கம் நிதியை வழங்கும் போது, எதற்காக இந்த நிதியைச் செலவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த நிதியை எதற்காக செலவிடுவது என்று தெரிவு செய்யும் உரிமையும…

  10. மண்முனை – கொக்கடிச்சோலை வாவியூடாக பாலம் அமைக்க கோரிக்கை 100 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மண்முனை- கொக்கடிச்சோலை வாவியுடான படகுப் பாதைக்குப் பதிலாக குறித்த நீர்வழியூடாக பாலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ் நீர் வழிப்பாதையூடாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அரச ஊழியர்களும் படகுப்பாதையுடாகவே பலவேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வழியுடாக பாலம் அமைப்பதற்கு பல அரசியல் வாதிகள் பலமுறை அடிக்கல்நாட்டியுள்ளனர் ஆனால் கடந்த பல தசாப்தங்களாக பாலம் அமைக்கப்படவேயில்லை. கிழக்கு உதயத்தின் கீழாவது படகுப் பாதைக்குப்பதிலாக பாலம் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

  11. தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது: இலங்கை அரசு கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் மோ…

    • 2 replies
    • 727 views
  12. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கடுமையாக வாக்குவாதப்பட்ட ஆளும் தரப்பு மாகாண முதலமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரும் அந்த விவாதத்துக்கு இடையே, அந்த நேரடி ஒளிபரப்பு விளம்பரங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த போது நேரடியாகக் கைகலப்பில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். அதனால் அந்த விவாதம் அத்தோடு இடைநிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒலிபரப்பு ஒன்றின் போது இடம்பெற்றது. வடமேற்கு மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகராவும், ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான ஹரீன் பெர்னாண்டோவுமே இப்படி மோதிக் கொண்டனர். இவர்களில் தயாசிறி சேனநாயக்கா இதுவரை ஐ.தே.கட்சியின் எம்.பியாக இருந்தவர். பின்னர் அந்தப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஆளும் தரப்பின் சார்பில் மாகாண ச…

  13. மனித உரிமை ஆணைக்குழுவில் ஊவா மாகாண முதலமைச்சர் தெரிவித்த சாட்சியம் என்ன ? (இரோஷா வேலு ) கொழும்பு ஊடகங்கள் சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தியை நாட்டுக்கு பரப்பியுள்ளன. உண்மையை கண்டறிய பதுளைக்கு வர வேண்டும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தினர் செறிந்து வாழும் பிரதேசத்திலேயே குறித்த தமிழ் பாடசாலை காணப்படுகின்றது. இந்நிலையில் கூடிய புள்ளிகளை எடுத்த முஸ்லிம் மாணவியை பாடசாலையில் சேர்ப்பதற்காகவே நான் சென்றிருந்தேன். இதனை தவறாக அரசியல் நோக்குடன் கையாளப்பட்டமையே பிரச்சினைக்கு காரணம். ஒரு மாணவியின் பிரச்சினையை தீர்க்க முடியாதெனில் குறித்த மாகாணத்தில் கல்வி அமைச்சராக நான் இருப…

  14. வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!! வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!! வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், …

  15. சஜித் மற்றும் டலஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் உறுதிப்படுத்தினார். அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவும் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தினார். இதேவேளை,…

  16. புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போதே பீரிஸ் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும். யுத்த காலப்பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றது" என தெரிவித்துள்ளார். …

  17. சிறிலங்காவுக்குள் நடப்பதை அமெரிக்கா வெளிக்கொணர வேண்டும் பெப்ரவரி 4 அன்று சிறிலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பெப்ரவரி 01 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ‘அமெரிக்க-சிறிலங்கா உறவு கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரப்படுவதாகவும் இனி வருங்காலங்களில் இரு நாடுகளின் உறவையும் மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்துடனான உறவை அமெரிக்கா மேலும் பலப்படுத்தவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவட…

  18. நாட்டின் சனத்தொகையில்... இரண்டு வீதமானோர்கூட, நேரடி வரி செலுத்துவதில்லை – மனுஷ நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1298216

  19. இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு வாரம் காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் அடிப்படையில் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.http://ulavannews.blogspot.com/2010/11/blog-post_14.html

    • 0 replies
    • 509 views
  20. சூடுபிடிக்கிறது சிறிலங்கா விவகாரம் – கடும் அழுத்தம் கொடுக்குமாறு ஜெனிவா கூட்டத்தில் வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் பணியகத்தில் நேற்றுக்காலை நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், இம்மாத…

  21. துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகளால் துயரில் மூழ்கிக் கிடக்கும் அம்பாறை [30 - July - 2006] [Font Size - A - A - A] -மங்களன்- கிழக்கில் இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணை ஆயுத கும்பல்களினதும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அங்குள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் அதன் பேச்சாளர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய ஆயுத குழுக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தே குறித்த பிரதேசங்களில் நிகழும் சம்பவங்கள் இதற்கு எத…

  22. எதுவும் செய்ய முடியாதென கைகழுவினார் சபாநாயகர் ! தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை தேசிய அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தேசிய அரசாங்கம் தொடர்பில் எனது முடிவினை அறிவிப்பதாக கூறினேன்…

  23. குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர…

  24. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை மட்டுப்படுத்தப்படாத யுத்தமாக விரியும் ` அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு முழு யுத்தத்துக்குரிய அளவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்பினருமே தாங்கள் யுத்த நிறுத்த உடன் பாட்டைக் கடைப்பிடிக்க விரும்புகின்றார்கள் என்றே கூறி வருகின்றனர். அதுதான் அத்தரப்புகளின் ஒரே நிலைப்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள், நோர்வே அனு சரணைத் தரப்பினர் முதல் சர்வதேச சமூகத்தினர் வரை அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தரப்புகளின் செய்திகள், தகவல்கள், நம்பிக்கை கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விடுதலைப் புலி களின் நிலைப் பாட்டையும் இலங்கை அரசுத் தலைமை எடைபோடுகின்றது போலும். மோதல் நடைபெறு…

    • 0 replies
    • 1.9k views
  25. வவுனியா வைத்தியாலைக்குள் விகாரை? * Thursday, December 2, 2010, 14:03 வவுனியா நகரசபைக்குட்பட்ட வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்குள் பாரிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொரிவிக்கப்படுகின்றது. இவ்வைத்தியசாலைக்குள் ஆரம்ப காலம்தொட்டு விநாயகர் ஆலயம் ஒன்றும் பின்னர் சில காலம் கழித்து கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இவ்வைத்தியசாலைக்குள் அல்லது சுற்றுப்புறங்களில் பௌத்த விகாரைகள் எதுவம் இருக்கவில்லை. தற்போது வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு பௌத்தவிகாரை ஒன்று கட்டப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தொரிவிக்கப்படுகின்றது. http://www.tamilthai.com/?p=6047

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.