ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்தப்பின் போது, சிறிலங்காவில் ஏப்ரல் 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்த ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இந்த தீவிரவாத செயற்பாடுகளையும் கண்டித்துள்ளார். 1990களில் ரஷ்யாவில் தொண்டர் நிறுவனங்களின் மூலம…
-
- 0 replies
- 593 views
-
-
"ஆன்மீகமே எனது உயிர் அரசியல் வேண்டாம்" என்மீது அரசியல் பொறுப்புக்களை சுமத்துவது தகுதியாக இருக்கும் என்று சிலர் முன் வைக்கும் கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்துவதுடன் கவலையையும் ஏற்படுத்தியிக்கின்றது. என்னுடைய ஒரேயொரு அரசியலானது இறைவன் மற்றும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதாகும். அதற்காக அரசியல் கோட்பாடுகளை அதனூடாக முன்னிறுத்துவதோ எந்தவொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதோ அரசியல் பதவிக்காக முன்வருவதோ எந்தவகையிலும் எனது நோக்கமல்ல என்பதை அறிவிக்க விரும்புகிறேன் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் கொழும்பு பேராயரின் ஊடக மற்றும் கலாசார நிலையம் விடுத்துள்ள அறிக்கைய…
-
- 2 replies
- 764 views
-
-
வன்முறைகளைத் தூண்டி விட்ட நாமல் குமார, அமித் வீரசிங்க கைது கொழும்புச் செய்தியாளர்May 14, 2019 | 8:06 by in செய்திகள் குளியாப்பிட்டிய, மினுவாங்கொட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டி விட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என கூறிக் கொள்ளும் நாமல் குமாரவும், மகாசோன் படையணியின் தலைவர் என கூறிக் கொள்ளும் அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இவர்களை சிறப்பு காவல்துறை குழுவினர் கைது செய்துள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமார, வரகாபொலவில் இன்று …
-
- 0 replies
- 697 views
-
-
கலைஞர் குடியேற்றத்திட்டத்தினை இடம் மாற்ற கோரிக்கை May 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தினை பூர்வீகமாக கொண்ட மக்கள் குடியேறுவதற்கு காணிகள் போதுமானதாக இல்லாத நிலையில், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வங்காலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ‘கலைஞர் குடியேற்றத்திட்டத்தினை’ இடம்மாற்ற கோரி நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார். குறித்த கடிதம் நேற்று திங்கட்கிழமை (13) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, நானாட்ட…
-
- 0 replies
- 420 views
-
-
’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’ உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில்,…
-
- 0 replies
- 606 views
-
-
வவுணதீவு பொலிஸார் கொலை;முறையான விசாரணை இடம்பெற்றிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம் - உதயராசா மட்டக்களப்பு, வவுணதீவு பொலிசார் கொலை செய்யப்பட்டமையை உரியமுறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா சிறிரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டு மாவீரர் தினம் அண்மித்து இருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் பொலிசார் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலை தொடர்பான பரபரப்பான நிலமை இருந்த காலத்தில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு அந்தக…
-
- 1 reply
- 451 views
-
-
பயங்கரவாதியை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை! பொலிஸ் திணைக்களத் தலைமையகமானது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியான ருவன் குணசேகரவிடம் இத் தொலைபேசி எண்ணின் மூலம் 011-2422176 / 011-2392900 தொடர்பு கொள்ளவும். http://www.virakesari.lk/article/55896
-
- 0 replies
- 474 views
-
-
பேஸ்புக் , வட்ஸ் எப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார். நேற்றைய தினம் சில பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் சமாதானத்தை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/119809
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தெரிந்தே எதுவித நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கத்தில் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு முக்கிய உரையாற்றினார். இந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 21 ஆம் திகதி அமைதியாக இருந்த இலங்கை மக்களை இலக்கு வைத்து, தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால், நாட்டில் அசாதாரண சூழ்நிலைமை ஏற்பட்டது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் காண்பித்த அசமந்த போக்கே இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்தது. …
-
- 4 replies
- 927 views
-
-
நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று (திங்கட்கிழமை) இரவு 09.00 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் பதிவான அசாதாரண சூழ்நிலைகள் வேறிடங்களுக்கு பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹாவிலும் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்! கம்பஹா பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் நிலவும் நிலைமையை கட்டுப்படுத்தும் முக…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாதுகாப்பின் காரணமாகவே நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது என பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் நிலை குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும், மதுபோதையில் சிலர் குளியாபிட்டிய – ஹெட்டிபொல பகுதியில் நேற்று சில வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு குறித்த பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது. இந்த நிலை முடிவடையும் என நாங்கள் நம்பினோம். எனினும், இன்றும் சிலர் சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை…
-
- 2 replies
- 882 views
-
-
பதற்றத்திற்கு காரணமான வெளி சக்தி எது? – அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆதவனுக்கு விசேட நேர்காணல் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை பயன்படுத்தி, அச்ச நிலையை உச்ச கட்டத்தில் வைத்திருக்கவும் அதன்மூலம் அரசியல் இலாபம் காண முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் அமைதியை சீர்குலைத்து, பதற்றத்தை தோற்றுவித்து, நாட்டின் நிலையை மாற்றியமைக்க, நாட்டை கொலைகளமாக்க சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன என்றும் கூறினார். நாட்டில் தற்போது நீடிக்கும் அசாதாரண சூழல் தொடர்பாக எமது ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் சிலரின் சுயலாப அரசியல் காரணமாக, அர…
-
- 1 reply
- 805 views
-
-
IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!! எப்படி மாறினாள்? ஏன் மாறினாள்? பின்னணியில் இருப்பது யார்? https://www.ibctamil.com/srilanka/80/119070?ref=home-imp-parsely
-
- 38 replies
- 4.6k views
- 1 follower
-
-
புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/புர்கா-ஹபாயா-வேண்டா-மென-எதிர்ப்பு/175-232995
-
- 1 reply
- 810 views
-
-
சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோக…
-
- 6 replies
- 1.1k views
-
-
குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குளியாப்பிட்டிய கரந்திப்பெல பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் சிலரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, குளியாப்பிட்டிய, பிங்கிரிய, மற்றும், துமலசூரிய பொலிஸ் பிரிவுகளில் 13 ஆம் திகதி காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/55806
-
- 7 replies
- 1.3k views
-
-
அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் . அனைத்துவிதமான செய்தி, தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மை தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நாம் தெரிவிக்கும் தகவல் சிலவேளைகளில் நிரபராதிகளை சந்தேக நபர்கள் எனும் போர்வையில் காட்டும். இது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய தவறா…
-
- 0 replies
- 675 views
-
-
(நா.தனுஜா) அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். அதேபோன்று குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். தாக்குதல்களில் இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாவும், தாக்குதல்களால் பாரியளவில் காயமேற்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல்களை முன்னரே தடுக்கக்கூடிய வ…
-
- 0 replies
- 364 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையடுத்து வடக்கில் 102 பாடசாலைகளில் 200 க்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் ஆண் பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி சிவில் பாதுகாப்பு படையினர் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கில் பலராலும் சிவில் பாதுக…
-
- 0 replies
- 347 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (13) மதியம் 2 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் இடம் பெற்றது. -இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முள்ளான் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,தமிழீழ விடுதலை …
-
- 0 replies
- 761 views
-
-
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது, வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்தார். அது தொடர்பிலான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அகழ்வின் போது மீட்கப்பட்ட மனித எலும்புகள் தவிர்ந்த ஏனைய பொருட்களை நீதிமன்ற அனுமதியின் ப…
-
- 0 replies
- 369 views
-
-
நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல எனவும் எனவே இலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித் துள்ளனர். புர்காவை இலங்கையில் தடை செய்வதற்காக முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சிறிது காலம் சென்ற பின்னர் புர்காவினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும். மீண்டும் அதனை சரி செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக இலங்கையில் முழுமையாக புர்கா தடை செய்யப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அந்தத் தடையு…
-
- 0 replies
- 512 views
-
-
தாக்குதல் அச்சத்தால், கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… May 13, 2019 கொழும்பின் பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காவற்துறையினர், விசேட அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, விமானப்படை என சகல பாதுகாப்பு படையினரும் பாதுகாப…
-
- 0 replies
- 417 views
-
-
யாழ்.பல்கலையைச் சுற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்! AdminMay 13, 2019 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் கைது நடவடிக்கையை எதிர்த்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கருத்து கூறும் பதாதைகள் யாழ் பல்கலை கழகத்தை சுற்றி இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்தது நாட்டின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது. குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 3 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தினுள் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும…
-
- 0 replies
- 963 views
-
-
ஜனாதிபதி,பிரதமர் முதலில் பதவி விலக வேண்டும்:நாமல் ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் ஜனாதிபதியும்,பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகளும் சம்பந்தமில்லை எனவும், இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது எனக் கூறும், ஜனாதிபதியும் பிரதமருமே முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் கரிபிதாப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாரா…
-
- 0 replies
- 1.1k views
-