ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
நீர்கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை ஐ.எஸ் அமைப்பு குறி வைப்பதால், அவர்களை வவுனியாவில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது. நீர்கொழும்பில் பல வீடுகளும் வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள், அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பினையடுத்து வெளியேற்றப்பட்டனர். அவர்களைப் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியுள்ள நிலையிலி, அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/16/நீர்கொழும்பில்-தங்கியிர.html
-
- 5 replies
- 1.6k views
-
-
``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்?'' - இலங்கையிலிருந்து கவிஞர் தீபச்செல்வன் கடந்த ஞாயிறன்று உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடியிருக்க, இலங்கையில் பெரும் துயரம் நடந்தது. கொழும்பு நகரின் தேவாலயம் ஒன்றில் குண்டுகள் வெடித்து மக்கள் துடிதுடித்து இறந்தனர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இறந்தோர் எண்ணிக்கை 350-ஐக் கடந்துவிட்டது. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்களைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து இலங்கையில் வசிக்கும் கவிஞர் தீபச்செல்வனிடம் கேட்டோம். "இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெ…
-
- 0 replies
- 442 views
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது. முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சேத விபரங்கள் உடனடியாக தெரியவராதபோதிலும் வேனொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/54839
-
- 0 replies
- 585 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர் பகுதி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று (27) அதிகாலை தொடக்கம் முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 570 views
-
-
எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும், எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டும் உள் நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பினூடாகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களை அடுத்து அமெரிக்க அரசாங்கம் இலங்கை அதிகாரி…
-
- 0 replies
- 618 views
-
-
இலங்கை தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி" - பாரிசாலன் | Paari Salan | பாரியின் பார்வையில்
-
- 0 replies
- 744 views
-
-
சர்வதேச அழுத்தங்களை திசைதிருப்பும் முயற்சியா? – தாக்குதல் குறித்து சுரேஸ் கேள்வி போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலை அரசாங்கம் கண்டுக்கொள்ளாமல் இருந்ததா எனும் கேள்வி எழுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பினார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தாம் இவ்வாறு பெரும் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். …
-
- 1 reply
- 479 views
-
-
சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உட்பட 8 இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்று 6 நாட்கள் கடந்த நிலையில் இன்று குறித்த கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் கடற்படையினரின் உதவியுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ] http://athavannews.com/சுத்தம்-செய்யப்பட்டது-கொ/
-
- 0 replies
- 643 views
-
-
இலங்கையில் குண்டுவெடிப்புக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் ரமேஷ் என்பவர் தன்னுயிரை தியாகம் செய்து பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தோள் பையை திறக்க முற்பட்ட ஒரு நபரை தடுத்த ரமேஷ், அவரை தேவாலயத்திற்கு வெளியே அழைத்து சென்றார். வெளியே அழைத்து சென்ற பின் குண்டு வெடித்து ரமேஷ் உயிரிழந்துள்ளார். இலங்கையில் தன்னுயிர் தியாகம் செய்து ரமேஷ் பலரை காத்தது எப்படி என்று அவரது மனைவி தெரிவிக்கிறார் https://www.bbc.com/tamil/sri-lanka-48040186
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் – சிறிலங்கா அதிபர் போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தீவிரவாதத்துக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன. போதைப்பொருளுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு சிறிலங்காவில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம். 130- தொடக்கம் 140 வரையான ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிறிலங்காவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களில் 70…
-
- 1 reply
- 418 views
-
-
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் - National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் - Jamathei Millathu Ibraheem zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை நாட்…
-
- 0 replies
- 405 views
-
-
படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தாயார் லத்தீபா பீவி, சகோதரர் நிப்றாஸ் மற்றும் மாமா இக்பால் ஆக…
-
- 0 replies
- 687 views
-
-
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இரண்டு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அரசியல்வாதிகள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதன்படி, கொழும்பு - கொம்பனிவீதி பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 46 வாள்கள் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தன. பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டதாக ப…
-
- 0 replies
- 575 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா In இலங்கை April 26, 2019 6:30 pm GMT 0 Comments 1073 by : Litharsan இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜனா…
-
- 13 replies
- 1.4k views
-
-
April 27, 2019 இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு தேசிய பாதுகாப்புக் குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியா இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளது அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள் பயங்கரவாத விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் உத்தரவு கிடைத்ததும் இவர்கள் இலங்கை பயணமாவார்கள் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றர்போ…
-
- 0 replies
- 495 views
-
-
1 Min Read April 27, 2019 அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. #Ampara #srilanka #Nintavur #eastersundayattacklk http://globaltamilnews.net/2019/119657/
-
- 0 replies
- 883 views
-
-
April 27, 2019 இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன. இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது. இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை, கடந்த 16 ஆம் திகதி, மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் இடம்…
-
- 0 replies
- 447 views
-
-
மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 50 கத்திகளும் 2 கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா காவற்துறையினர் பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் தலையிலான காவற்துறையினர் மஸ்கெலியா பள்ளிவாசலை திடீர் முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்து 50 கத்திகளும் 2 கைக்கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டடுள்ளார்.மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக மஸ்கெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான தோட்ட விடுதியொன்றிலிருந்து வோக்கிடோக்கிகள் சில…
-
- 0 replies
- 271 views
-
-
வவுணதீவு பொலிஸார் கொலையும் சஹரான் குழுவினரின் கைவரிசை! – பயங்கரவாதி சிக்கினார்? மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் எனும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பு தேவாலய தற…
-
- 2 replies
- 913 views
-
-
யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படு கின்றன. இந்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என கூறப்படுகின்றது. https://www.ibctamil.com/srilanka…
-
- 1 reply
- 770 views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அன்மைய இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல் பற்றிய கலந்துரையாடல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி நீங்களும் கேட்கலாம் <iframe width="100%" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/…" frameborder="0" ></iframe>
-
- 0 replies
- 423 views
-
-
திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது திருகோணமலை இரக்கண்டி பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நபரிடமிருந்து 51 வோட்டர் ஜெல் வெடிபொருள் , 215 டெட்டனேடர்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரால் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54812
-
- 0 replies
- 749 views
-
-
கிளிநொச்சி தேவாலயத்தை இலக்கு வைத்த பயங்கரவாதி! – வெளிவரும் உண்மைகள் உயிர்த்த ஞாயிறன்று கிளிநொச்சி தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலய பங்கு தந்தை அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அசாதாரண சூழலில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சர்வமத ஒன்று கூடல் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த ஒன்றுகூடல் இன்று காலை 9.30 மணியளவில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலில் சர்வ மத தலைவர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் கலந்துகொண்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து …
-
- 0 replies
- 661 views
-
-
வவுனியாவில் தொடரும் சோதனை நடவடிக்கை: அச்சத்தில் மக்கள் (2ஆம் இணைப்பு) வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்நிமித்தம் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகளை இறக்கி இராணுவத்தினரால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். பயணிக…
-
- 0 replies
- 456 views
-
-
சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸ் …
-
- 5 replies
- 1.4k views
-