ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அத்தோடு இந்த விடயம் தொடர்பான கருத்துக்களை கூறுமாறு அவர் தெரிவித்திருந்ததோடு, அதற்கு சிலர் ஆதரவளித்திருந்தனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நிறைவ…
-
- 1 reply
- 870 views
-
-
250 மில்லியன் ரூபா செலவில் யாழில் தகவல் தொழில்நுட்ப பூங்கா! யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்வுள்ளது. இதுதொடர்பிவல் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசை…
-
- 1 reply
- 703 views
-
-
மங்களவுடன் த.தே.கூ.ப்பினர் கலந்துரையாடல்! நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன http://www.virakesari.lk/article/50463
-
- 0 replies
- 482 views
-
-
வங்கியில் பாரிய நிதி மோசடி ; கணக்கு வைப்பாளர்கள் திண்டாட்டம் வவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றிலேயே அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரால் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. குறித்த உத்தியோகத்தரும் அவரது மனைவியும் குறித்த வங்கியிலேயே பணியாற்றி வந்திருந்தனர். இந் நிலையில் குறித்த வங்கியில் பணியாற்றி வந்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக வாடிக்ககையாளர்களின் நிதிகளை தனது கணக்கில் வைப்பிளிட்டு வந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புகளில் போலி …
-
- 0 replies
- 509 views
-
-
கொழும்பில் இளைஞர்களை கடத்தி கொலை செய்த கடற்படை வீரர் கைது கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி அவர்களில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கடற்படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் காங்கேசன்துறை கடற்படை தளத்தை சேர்ந்த கடற்படைவீரர் 2008-2009 இல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை காவல்துறை பேச்சாளர் உறுதி செய்துள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் 2018 ஆகஸ்டில் நேவி சம்பத் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே மற்றொரு கடற்படை வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட …
-
- 0 replies
- 420 views
-
-
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிக்குண்டு குடும்ப பெண்ணுக்கு நிகழந்த பரிதாபம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கே. இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ அணியின் சுமார் 7 மணி நேரப் போராட்டத்தின் பின் இடது கை காப்பாற்றப்பட்டது. கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க 5 பிள்ளைகளின் தாயார், தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று மாலை தும்படிக்கும் போது, தும்படிக்கும் இயந்திரத்துக்குள் இரண்டு கைகளும் சிக்குண்டு சிதைவடைந்தன. அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்ப…
-
- 0 replies
- 396 views
-
-
தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்த்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியனந்தம் (28 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்க…
-
- 0 replies
- 316 views
-
-
நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பான கருத்துக்களை கூறுமாறும் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு சிலர் ஆதரவளித்தனர். சிலர் கருத்துக்களை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், நிறைவேற்று …
-
- 0 replies
- 237 views
-
-
... வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது. ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்…
-
- 0 replies
- 445 views
-
-
மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்? அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார் என்றும், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்பு சபையில் இரா.சம்பந்தன் இடம்பெற்றிருந்தார். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரான பின்னர், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினரானார். இதனால் சம்பந்தன் அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். அதேவேளை, இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்புச் சபை உறுப்பினராக அவரால் நியமிக…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கை – இந்தியக் கடல் எல்லையில் இரு நாட்டுக் கடற்படையினரும் ஏட்டிக்குப் போட்டியாக இரு நாட்டு மீனவர்க ளையும் நடுக் கடலில் கைது செய்தமையால் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் பதற்றம் ஏற்பட்டது. இலங்கை– இந்தியக் கடற்படையினரால் நேற்றுமுன்தினமிரவு இரு நாடுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்துக் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு நேற்றுக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத் துறைத் திணைக்கள அதிகாரிகளி…
-
- 1 reply
- 409 views
-
-
இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கு ராஜபக்ச அணியினர் அன்றும் முயற்சி செய்தார்கள் இன்றும் முயற்சி செய்கிறார்கள். இலங்கை இராணுவத்தினரின் நற்பெயரை பன்னாட்டு மட்டத்தில் நாம் பாதுகாக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் ந…
-
- 1 reply
- 520 views
-
-
கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு பிரச்சினை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்வோம் February 21, 2019 723 ஆவது நாளாக தொடர்ந்து நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இன்றைதினம் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது நிலமீட்பு தொடர்பில் அரசாங்கத்தினால் ஏதாவது வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் போராட்ட காரர்களின் தற்போதைய நிலைகுறித்தும் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு மக்களிடம் கருத்து தெரிவித்து இலங்கைக்கான சுவீஸ்தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி தான் கடந்த முறை கேப்பாபுலவு மக்களின…
-
- 1 reply
- 389 views
-
-
தூய்மையான அரசநிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது - மைத்திரி February 21, 2019 தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாத…
-
- 1 reply
- 207 views
-
-
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி February 21, 2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான க…
-
- 1 reply
- 225 views
-
-
இலங்கையின் முதலாவது பூசணிக்காய் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் (கிறீன்பாத்) நடைபெறவுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25பூசணி விவசாயிகள் இந்த பூசணி (வட்டக்காய்) திருவிழாவில் பங்கேற்கவுள்ளனர். வட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த பூசணித் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். ஐம்பது ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் கிலோ பூசணிக்காய்கள்வரை கொழும்புக்கு இதன் பொருட்டு கொண்டுவரப்படவுள்ளன. இம்முறை மேற்படி மூன்று மாவட்டங்களிலும் பூசணிக்காய் அபரிதமாக விளைந்ததால், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகி, விலை வீழ்ச்சியும் ஏற்பட்டது. தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் வீதிப்…
-
- 2 replies
- 621 views
-
-
செ.கீதாஞ்சன் மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள் இன்று (21) தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நந்திகடல் ஏரிக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுள்ள படையினர் அக்காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். போர் இறுதியாக நடைபெற்ற கரையோர பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள். அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளை படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாத…
-
- 0 replies
- 715 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) நீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அரசியலமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருந்தால் அதனை திருத்திக்கொண்டு நீதிமன்ற சுயாதீனத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் http://www.virakesari.lk/article/50432
-
- 0 replies
- 336 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்ட…
-
- 0 replies
- 558 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா நாளையதினம்(22) இரண்டாவது தடவையாக மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் 40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த பசுமை பூங்கா கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதே பசுமை பூங்காவினை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 424 views
-
-
February 21, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் சாதகமான பெறுபேறுகளை இந்த வருட நடுப்பகுதியளவில் மக்களும் அரசாங்கமும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். …
-
- 0 replies
- 211 views
-
-
February 21, 2019 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டு வருட நிறைவையும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத…
-
- 0 replies
- 159 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெள்ளப் பாதிப்பினையடுத்து தென்னிலங்கையில் பௌத்த துறவிகளால் மாணவர்கள் மற்றும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று(21-02-2019) கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு பாடசாலையில் கல்வி கற்கின்ற சுமார் 300 மாணவர்களுக்கும் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது குறித்த பௌத்த துறவிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடசாலைகள் மற்றும் சமூகத்திடம் கேசரிக்கப்பட்ட ப…
-
- 0 replies
- 162 views
-
-
யாழ்ப்பாணம் சென்றுள்ள மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார். அத்துடன் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ் நீதிமன்ற தொகுதிக்கு முன்பாக யாழ் நிர்வாக தொகுதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்த அமைச்சர் தூர சேவை பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்துள்ளார். குறித்த நிகழ்வுகளில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர்…
-
- 0 replies
- 169 views
-
-
யாழ்.ஆங்கிலிக்க திருச்சபையுடன் சுமந்திரன் சந்திப்பு புதிய சாசன வரைவு பற்றி சுமந்திரன் விளக்கம் முன்மொழியப்பட்டிருக்கும் புதிய அரசியல் சாசனம் குறித்த தெளிவற்ற தன்மையையும், ஐயப்பாடுகளையும், அது தமழருக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பது பற்றி அறிவதற்காகவும் ஒரு ஐயம் தெளிதல் நிகழ்வை அங்கிளிக்கன் தேவாலயத்தின் சமுதாயப் பொறுப்புணர்வுக்கான பிராந்திய சபையின் சார்பில் யாழ்ப்பாணத்தின் (அங்கிளிக்கன்) உதவி குருவானவர் வணக்கத்துக்குரிய அருட் தந்தை சாம் பொன்னையா சமீபத்தில் ஒழுங்கு செய்திருந்தார். குருவானவர்கள், தேவாலய அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த சமூகத் தலைவர்களும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அரசி…
-
- 2 replies
- 665 views
-