ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சிறிலங்காவுக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க சீனா இணக்கம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மேலும் நிதியுதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய திட்டங்களின் மூலம், சிறிலங்காவுக்கு நிதியுதவிகளை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக, நி்தியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட நிதியமைச்சு வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு, வினவிய போது, அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. எனினும், சிறிலங்காவுக்கு உதவ சீனா எப்போதும் தயாராகவே உள்ளது என்று சீன தூதரக, அரசியல் பிரிவுக்கான தலைவ…
-
- 0 replies
- 450 views
-
-
மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 22ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான விவாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ப…
-
- 0 replies
- 352 views
-
-
தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? விளக்குகின்றார் சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி.! தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? என்ற சொற்பதங்கள் மக்கள் மத்தியில் அவரவர் அறிவுக்கு ஏற்ப பரவலாகப் பேசப்படும் பதங்களாகும். எமது இன விடுதலை தொடர்பிலும் இந்த சொற்பதங்கள் ஆழமான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன. இவையனைத்துக்கும் தெளிவான – நேர்த்தியான – விளக்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தந்துள்ளார். நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளான கற்றறிந்த சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மீது சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்கு செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு! சுமந்திரன் பதிலடி தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்குகள் மத்திய செயற்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு வருடமும் தவறாமல் தேர்தல் ஆணையகத்துக்கும் வழங்கப்படுகின்றது. தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக வேண்டுமாயின் தேர்தல் ஆணையகத்திடம் விண்ணப்பித்து பெற்று பார்வையிட்டுக்கொள்ளலாம். – இவ்வாறு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன். நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர…
-
- 0 replies
- 394 views
-
-
அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் – வடக்கு ஆளுனர் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்க…
-
- 0 replies
- 311 views
-
-
மென்வலுவூடான அரசியல் உரிமையை பெறுவது எப்படி என்கிறார் சாணக்கியர்! மென்வலுவின் ஊடாக அரசியல் உரிமையைப் பெறுவது எவ்வாறு? புதிய அரசமைப்பு உருவாக்கவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறானதொரு மென்வலுவைப் பிரயோகிக்கின்றது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளான கற்றறிந்த சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மீது சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலனமின்றி விளக்கமளிக்கையிலேயே அவர் இவை தொடர்பிலும் கருத்துரைத்திருக்கின்றார். அவரது விளக்கம் வருமாறு:- மென்வலு என்பது கத்தியின்றி, …
-
- 0 replies
- 358 views
-
-
பேருந்துக்காக ஓடிய பெண் உயிரிழப்பு! மட்டக்களப்பு – வெருகல் பகுதியில் பேருந்துக்காக ஓடிய போது கால் தடுக்கி விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) வெருகல் பகுதியிலுள்ள தனது மரக்கறித் தோட்டத்திலிருந்து கதிரவெளிக்கு செல்வதற்கு தயாரான குறித்த பெண், பேருந்து வருவதைக்கண்டு ஓடிச் சென்றுள்ளார். இதன்போது கல்லில் கால் தடுக்கி விழுந்து மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் வாகரை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிரவெளி – புதூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் செல்லாச்சி (வயது 63) என்ற 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பி…
-
- 0 replies
- 503 views
-
-
ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ந்தும் உதவ தயார் – சீனா! இலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ந்தும் உதவ தயார் என சீனா தெரிவித்துள்ளது. அந்தவகையில் பரஸ்பர நன்மையளிக்கும் திட்டங்களின் மூலம் இந்த நிதியை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சின் நம்பதகுந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நிதி அமைச்சோ, கொழும்பில் உள்ள சீனத் தூதரகமோ இது தொடர்பில் தீர்க்கமான முடிவை அறிவிக்கவில்லை. எனினும், இலங்கைக்கு உதவ சீனா எப்போதும் தயாராகவே உள்ளது என்று சீன தூதரக, அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ சொங், தெரிவித்துள்ளார். அனைத்து நிதியுதவிகளும், இலங்கையால் கோரப்பட வேண்டும், சீனாவால் முன்மொழியப்படுவதில்லை, இலங்கையில் எந்தவொரு …
-
- 0 replies
- 394 views
-
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு ஆயர் அழைப்பு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்குக்கொள்ளுமாறு இந்திய பக்தர்களுக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா இடம்பெறுகின்றது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு யாழ்பானம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை திருவிழா குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட ஆய்வு கூட்டம் யாழ்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை கு…
-
- 0 replies
- 730 views
-
-
பௌத்தமயமாக்கலை நிறுத்த வேண்டும் – வடக்கின் புதிய ஆளுநர்! வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக…
-
- 0 replies
- 840 views
-
-
இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20-ல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது! இலங்கை தொடர்பான, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரி…
-
- 0 replies
- 319 views
-
-
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம் வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள சம்புக்களப்பு எனும் காட்டுப் பகுதியில் இளம் குடும்பஸ்தரான மீனவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலடங்கும் அம்பந்தனாவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி வசந்தராசா (வயது 36) என்பவரின் சடலமே சம்புகளப்பு பகுதியில் காட்டு மரத்தினிடையே தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் கடந்த புதன்கிழமையிலிருந்து 09 காணாமல் போயிருந்தார் என்றும் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தைச் சட்ட வைத்திய அதிகாரி…
-
- 0 replies
- 384 views
-
-
9 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்தோடு அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கபட்டுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை யாழ்.நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நட…
-
- 0 replies
- 494 views
-
-
சிறிசேனவிற்கு சந்திரிகா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை தான் ஆதரிக்கவில்லை எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். 2005 முதல் 2015 முதல் இந்த நாட்டில் காணப்பட்ட இலஞ்சம…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கை மனித உரிமை பேரவையின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது-சவேந்திர சில்வா நியமனம் குறித்து ருத்திரகுமாரன் இலங்கை இராணுவத்தின் பிரதானியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இலங்கையின் உச்சநீதிமன்றம் செயற்பட்டுள்ள விதத்தினை வைத்து இலங்கை நீதிமன்றங்களிற்கு அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் திறன் உள்ளது என்ற முடிவிற்கு எவராவது வந்திருந்ததால் சவேந்திர சில்வாவின் நியமனம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். மோதலின் இறுதி தருணங்…
-
- 0 replies
- 292 views
-
-
ஒற்றையாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தினார் ரணில்- வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை எனவும் கூறியுள்ளார் றிக்கைகளை சேகரித்து சுமந்திரன் வீட்டில் வைத்திருக்க முடியும் என்று கிண்டலாகக் கூறியது ஜே.வி.பி புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை என்றும் சமஸ்டி ஆட்சி முறை இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளைத் தயாரிக்கும் நிபுணர்குழுவிடம் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சம…
-
- 1 reply
- 558 views
-
-
இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன…. January 10, 2019 பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 185 வருட கடூழிய சிறைத்தண்டனைய…
-
- 23 replies
- 2.5k views
-
-
January 11, 2019 யாழ்.அளவெட்டியை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள புலமை பரிசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , அளவெட்டியை சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் கோகுலன் எனும் இளம் விவசாயி மத்திய அரசின் புலமைபரிசினை பெற்று விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற இந்தியா செல்கின்றார். வர்த்தக ரீதியில் மரக்கறி பயிர்செய்கை , பழ பயிர்செய்கை என்பவற்றை மேற்கொண்டு வடமாகாணத்தில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர். அதன் பின்னர் 29.12.2018…
-
- 34 replies
- 5.4k views
-
-
தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என்று தெரிவித்துள்ளார்கள் IBC தமிழ் இணையத்தள வாசகர்கள். IBC தமிழ் இணையத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள். தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு: 48.09% வீதமானவர்கள் (27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமானவர்கள் (10,768 வாக்குகள்) இரா. சம்பந்தர் என்றும், 13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்) கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும், 3.9% வீதமானவர்கள் (2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்று…
-
- 49 replies
- 4.3k views
-
-
கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்ட விடயம் இணையத் தளத்தில் வெளியான செய்தி திரிபுபடுத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பானது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, புலிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார் என்று வெளியான செய்தி உண்மைக்குப்புறம்பானது என்றும் அது திரிபுபடுத்தப்பட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைந்தது என்றும் கருத்துத் தெரிவித்து ஊடக மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா. அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- இணையத் தளம் ஒன்றில் விடுதலைப் புலிகளின் முன்னைய செய்திகள் தொடர்பாக வடக்கு மாகாணசபை முன்ன…
-
- 0 replies
- 385 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிக…
-
- 108 replies
- 13k views
- 1 follower
-
-
நான் எவரையும் குற்றம் சுமத்தவில்லை ; பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென நினைப்பவள் - ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லையென நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்தார். இதேவேளை, நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள் , சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின…
-
- 4 replies
- 909 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயில் இனம் காணப்பட்ட ட்றைபனசோமா என்னும் நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வுகள் மூலம் கண்டறிய மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளனர். இலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில் நாய்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த நோய் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல எச்சரித்திருந்தார். தெற்கில் பலாங்கொடை மற்றும் வடக்கில் முல்லைத்தீவிலும் ட்றைபனசோம என்று சந்தேகிக்கப்படும் நோய் நாய்களில்…
-
- 1 reply
- 506 views
-
-
வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் கோரியுள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் ரவூக் ஹக்கீமை சந்தித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவரும் நிலையில் பலரது வேண்டு கோளிற்கமைய வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த உயர்கல்வி அமை…
-
- 0 replies
- 652 views
-