ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
-பொ.சோபிகா இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை குறைக்குமாறு, மீனவர்களின் உறவினர்கள் மகஜர் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (02) யாழ். ஆயர் இல்லத்தில் வழங்கினார்கள். யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், ஆயர் இல்லத்தில் இல்லாத காரணத்தால், குரு முதல்வர் யஸ்ரீன் ஞானப்பிரகாசம் மகஜரை பெற்றுக்கொண்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் 8 பேருக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை குறைக்கும்படியே 3 மீனவர்களின் உறவினர்கள் மகஜர் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில், 'யாழ் மாவட்டத்தை சேர்ந்த குருநகர், மண்டைதீவு பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் க…
-
- 0 replies
- 244 views
-
-
சீனா நெருங்கிய நண்பன், இந்தியாவின் உறவையும் சீர்குலைக்கோம் – வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவுடன் எப்போதும் கைகோர்த்து செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை சீர்குலைக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார். கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாகரீகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான பிணைப்பு காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்…
-
- 0 replies
- 235 views
-
-
பிரிட்டன் வாழ் தமிழர்களின் பிரதினிதிகளான உலக தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் சோனியா தனது கருத்தை கூறியுள்ளார். தாம் எப்போதும் தமிழர்பக்கம் என்றும் கூறியுள்ளார். தான் சிறிலங்காவில் நடந்த கொடுமைகளை வீடியோவில் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். சோனியாவின் இந்த கருத்தை உலக தமிழர் பேரவையினர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் பிரிட்டன் தமிழர்களை சோனியா வென்றுள்ளதாகவும் கூறியுள்ளது இந்திய ஊடகங்களான இந்து போன்ற பத்திரிகைகள்.. உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இது பற்றி கூறுகையில் தமது பிடியில் இருந்து சோனியா தப்பிக்க முடியவில்லையெனவும் தமது விருந்தினராக அவர் ஆக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. தேர்தல் நேரம் நெருங்குகின்றது. இந்த நேரத்தில் …
-
- 33 replies
- 4k views
-
-
மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளேன்- சந்தியா ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பேஸ்புக் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் ஞானசார தே…
-
- 2 replies
- 1.2k views
-
-
இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் JICA ! நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) அனைத்து செயற்றிட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார். நிதி நெருக்கட…
-
- 1 reply
- 477 views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 12 சனவரி 2007, 20:47 ஈழம்ஸ (காவலூர் சங்கீதன்) பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இந்தொனேசியாவில் கைது செய்யப்பட்டு, இந்தோனேசிய அதிகாரிகளால் அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட தமிழ் இளைஞர், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். இவருக்காக வாதாடவுள்ள வழக்கறிஞர், தனது கட்சிக்காரரான 32 வயதுடைய தவராஜா பிரதீபன் ஒரு நிரபராதி என்றும், அவர் எதுவித பயங்கரவாத குற்றச் செயலிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை என்றும், அமெரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக, கிழக்கு நியூயோர்க் நீதிமன்றத்தின் சார்பில் பேசவல்ல றொபேர்ட் நர்டோசா தெரிவித்துள்ளார். தற்போது விசாரணைக்காக தடுப்புக்காவலில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன நோயாளியை தாக்கிய துணைஇராணுவக்குழுவினர். - பண்டார வன்னியன் Friday, 19 January 2007 12:31 {சங்கதி} சாவகச்சேரிச் சந்தையில் நின்ற மன நோயாளியை கடத்திச் சென்ற சிறிலங்காப் படையினரின் துணைஇராணுவக்குழுவினர் நான்கு நாட்களின் பின்னர் ஆட்கள் இல்லாத வீட்டில்கடும் சித்திரவதையின் பின்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த நான்காம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியில் நின்ற இவரை ஆயுதங்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்ட சிறிலங்காப்படையினரின் துணைஇராணுவக்குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து நிற்க்கக் கூடியதாக வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசில் முறையிட்ட போதிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை கடந்த இரண்டு நாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்திய இராணுவத்தின் மீது போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தை அடைந்திருக்க முடியும். -முன்னாள் யாழ். இராணுவ தளபதி [saturday, 2011-04-02 04:59:43] பிரிகேடியர் எச்.எவ்.ரூபசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆளணி நிர்வாகப் பணிப்பாளர், இராணுவ செயலர், சட்டப்பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத் தலைமையகப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். யாழ்ப்பாணம் மற்றும மன்னார் மாவட்டங்களுக்கான இணைப்பதிகாரியாகவும், கூட்டுப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் ஆலோசகராகவும், இந்திய அமைதிகாக்கும் படைக்கான இணைப்பதிகாரியாகவும் இருந்தவர். சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த அவர் கொழும்பு ஆங்கில ந…
-
- 17 replies
- 2.8k views
-
-
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். கடன் கிடைக்க சீனா இணங்கியது - இது என்ன தாக்கத்தை ஏற்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, …
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் போரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா- முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடு என்ற அடிப்படையில் செயற்படும் பொது எதிரணியின் அரசியல் நகா்வுகள் தென்பகுதியில் புதிய அரசியல் கலச்சாரத்தை உருவாக்கலாம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இருட்டறைக்குள் இருக்கும் ஆபத்து. பொது வேட்பாளர் வெற்றிபெற்றால் ஆறுமுகன், டக்ளஸ், ஹக்கீம், கருணா, றிஷாட் பதியுதீன் ஆகியோரை அழைத்து அமைச்சுப் பதவி கொடுத்து மீண்டும் அந்த அசிங்கமான அரசியலை தொடருவாரா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் போரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா -அ.நிக்ஸன்- ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் யார் என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் …
-
- 0 replies
- 522 views
-
-
மோதல்கள் நிறுத்தப்படுமானால் உதவிகள் கிடைக்கும் - உதவு வழங்கும் நாடுகள் விடுதலைப்புலிகளுடன் அரசு தொடரும் மோதல்களை இலங்கை உடனடியாக கைவிடாவிடின் இலங்கைக்குக் கிடைக்க இருக்கும் பல மில்லியன் ரூபாய்கள் கிடைக்காது என காலியில் நடைபெறும் அபிவிருத்திச்சாலையில் கூட்டத்தில் சர்வதேச தூதுவரகம் இ மற்றும் அதிகாரிகளும் எச்சரித்துள்ளார். இம் மோதல்களிற்கும் இ முரண்பாடுகளிற்கும் இராணுவத் தீர்வு மூலம் ஒரு போதும் தீர்வு காண முடியாது . அதிகாரப் பகிர்வு மூலம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அடிப்படையை உருவாக்கி அதன் மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் என அமெரிக்க நம்புகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிள…
-
- 0 replies
- 954 views
-
-
Friday, 15 April 2011 01:06 வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள: முன்னாள் போராளிகள் பட்டியல் நாளையதினம் வெளியிடப்படும்? வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் பெயர் விவரங்களைப் பரிசீலனை செய்யும் பணி நாளை சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. அரசு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் கூடி ஆராய்ந்ததை அடுத்து இருதரப்பு பிரதிநிதிகளும் நாளை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரச பேச்சுக் குழுவின் செயலாளர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் வவுனியாவில் நாளை சந்திக்கின்றனர்.தடுத்து வைக்கப்பட்ட போராளிகளின் பட்டியலை கூட்ட…
-
- 1 reply
- 645 views
-
-
மீண்டும் அழைத்தார் மகிந்த – வாக்குறுதி வழங்காமல் நழுவினார் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். நேற்றுப் பிற்பகல் காத்மண்டுவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேரடியாக விடுத்துள்ள மூன்றாவது அழைப்பு இதுவாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவின் போது புதுடெல்லியில் வைத்து முதல் முறையாகவும், நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் போது, இடம்பெற்ற சந்திப்பில் இரண்டாவது தடவையாகவும், சிறிலங்கா அதிபர் அழைப்…
-
- 0 replies
- 639 views
-
-
ஆளுநர் தானே பிழை செய்து விட்டு மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமா? கேள்வியும் விக்கியின் பதிலும்…1 – 2 – 1. கேள்வி – வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா? பதில் – இல்லை. ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம். மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் கௌரவ டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வடமாகாணசபை சார்பாக கௌரவ ஆளுநர் அவர்கள் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்ட…
-
- 0 replies
- 384 views
-
-
Wednesday, 20 April 2011 12:59 ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை விஜயம் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாக தூதரக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எதிர்நடவடிக்கைகளை தடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசிப்பார் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் ஐ.…
-
- 2 replies
- 576 views
-
-
நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை 24 மணிநேரத்தில் பிரதமராக்குவேன் என ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தினால் திரிவுபடுத்தி கூறப்படுவதே இந்த விடயமாகும் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாம் புதிய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து எம்முடன் பலர் வந்து இணைந்துகொண்டிருக்கின்றனர். அந்தவகையில் நவீன் திஸாநாயக்க எம்முடன் இணைந்துகொண்டமையினால் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நவீன் திசாநாயக்கவின் தந்தையான காமினி திசாநாயக்கவை போன்றே திஸாநாயக்கவும் திறமையான ஒருவர். ஆன…
-
- 0 replies
- 337 views
-
-
‘வடக்கில் 20,000 பேருக்கு தொழில்வாய்ப்பு’ யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கில், ஆகக்குறைந்தது 20 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடியவாறு, கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா, யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக, பிரதமதர் ரணில் விக்ரமசிங்க…
-
- 0 replies
- 210 views
-
-
53 பேருக்குப் பிரித்துக் கொடுத்த பின்பும்முக்கிய அமைச்சுகள் மஹிந்த வசமே! உலக சாதனைப் பதிவேடான கின்னஸ் புத் தகத்தில் பதியும் அளவுக்கு 53 அமைச்சர்களைக் கொண்ட இராட்சத அமைச்சரவையை ஸ்தாபித்து உலக சாதனை படைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று மக்கள் வாயைப் பிளந்தால், அதற்குள்ளும் மற்றொரு பெருஞ் சாதனை புரிந்து பலரையும் வியப்பிலும் அதிர்ச்சி ஆச்சரியத்திலும் மூழ்கடித்திருக்கின் றார் அவர். ஆளுக்கு ஒரு பெயரில் ஓர் அமைச்சை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைத் தூக்கிப் போட்ட அவர், அதற்குப் பின்னரும் முக்கியமான அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் தமக்குள்ளேயே அமுக்கிக் கொண்டிருக் கின்றார் என்ற உண்மை இப்போதுதான் அம்பலத் துக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு அமைச்சர்களுக்க…
-
- 2 replies
- 808 views
-
-
வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் சில தினங்களில் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளது. புதுடில்லிக்குச் சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த யோசனை அடங்கிய அறிக்கையைக் கையளிப்பதற்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும்போது தமது யோசனையையும் கவனத்தில் கொள்ளும் எனத் தாம் நம்புவதாக சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். http://seit…
-
- 4 replies
- 569 views
-
-
வாள்வெட்டு தலையோங்க ராணுவத்தினரே காரணம்.... சிறீதரன்
-
- 1 reply
- 362 views
-
-
கனகரவி- போர் பல முனைகளினாலும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாளாந்தம் துன்ப துயரங்களையே அனுபவித்து வருகின்றனர். 05-01-2007 அன்று வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான புளியங்குளம் முள்ளியவளை வீதியின் நெடுங்கேணிக்கு தெற்குப் புறமாக சிவா நகரை அண்மித்த இடத்தில் உள்ள ஐயனார் கோவில் பகுதியில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்களின் பிக்கப் வாகனம் மீதான கிளைமோர் தாக்குலினால் இரண்டு உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உயிரிழப்பும் வெறுமனமே அவர்களின் குடும்பத்தினரிற்கும், உறவினர்களிற்குமான இழப்பாக நோக்க முடியவில்லை. காரணம் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவ…
-
- 0 replies
- 888 views
-
-
தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்! பொங்கித் தீர்த்த வைகோ சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்துஇ வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற் கண்ணியை மீட்டதற்காகஇ உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவைஇ கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன்இ இராம.சிவசங்கர்இ காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்குஇ கட்சிகளைக் கடந்து 2இ000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ்இ ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்ற 81 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த 81 பேரும் அவர்கள் தொழில் புரியும் இடங்களில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்தே வேலைவாய்ப்பு திணைக்களம் அவர்களை இலங்கைக்கு வரவழைத்துள்ளது. இதன்போது கட்டார் நாட்டிலிருந்து 31 ஆண்களும் சவுதி அரேபியாவிலிருந்து 21 பெண்களும் குவைத் நாட்டிலிருந்து 29 பேரும் இன்று 3 விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வேலைவாயப்பு திணைக்களம் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. http://virakesari.lk/articles/2014/12/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%…
-
- 0 replies
- 193 views
-
-
ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறாது விட்ட முக்கிய விடயங்கள். Posted by: on May 6, 2011 இருபதாம் நூற்றாண்டு ஜேர்மனியில் நடந்த யூத இனப் படுகொலை காரணமாக ஜெனோசைற் (Genocide) என்ற புதிய சர்வதேசச் சட்டம் ஜநாவால் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலைத் தடுப்புத் தண்டனைச் சட்டம் (The Convention on the Prevention and Punishment of Genocide) டிசம்பர் 1948ல் நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் முதலாம் சரத்து (Article 1) மிகவும் முக்கியமானது. ஒரு தேசிய, இன, வகுப்பு, மதம் சார்ந்தோரை முற்றாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்த குறிப்பிட்ட வன்செயல்களை இனப் படுகொலையாக இந்தச் சட்டம் கணிப்பிடுகிறது. இனப்படுகொலை போர்க் காலத்தில் செய்யப்பட்டாலும் அமைதிக் கால…
-
- 4 replies
- 1.1k views
-
-
கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏனைய 8 மாவட்டங்களையும் வெற்றிக்கொள்ளும் கடுமையான பல்முனை பிரச்சாரங்களில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். எதிரணியின் இந்த வெற்றிப்பாதைக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு பெரும் பலம் சேர்த்து வருகிறது என தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரச்சார…
-
- 0 replies
- 347 views
-