ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
ஜனாதிபதியின் நிலைப்பாட்டை நான் அறிவேன் ; வெற்றுக் கதிரைகளுக்கு மத்தியில் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தின் சட்டவாக்கசபையின் சபாநாயகரும் நிறைவேற்றதிகாரத்தின் தலைவர் ஜனாதிபதியும் இணைந்து தற்போதைய பிரச்சினையை தீர்க்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, பெரும்பான்மைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளாரென்பதை நான் அறிவேன். ஆகவே அதனை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தமைமையில் கூடியது. இதன் போது பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 473 views
-
-
பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில்… November 29, 2018 பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடியது. இதனைத் தொடர்ந்து சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை முன்வைக்கப்பட்டு தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/105001/
-
- 0 replies
- 242 views
-
-
“சத்தியமாக எங்கள் கட்சியின் தலைவர் எம்.ஏ சுமந்திரன் அல்ல” - லக்ஷ்மன் கிரியெல்ல November 29, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது என்ற கருத்தில், எதுவித உண்மையுமில்லையென, ஐ.தே.கவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலையமைப்புகளில் அண்மையில் பிரபலமாகியிருந்த காணொளியொன்றில், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் நின்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கிரியெல்லவை, தனது இருக்கையிலிருந்து வேகமாக நடந்து சென்ற சுமந்திரன், திட்டுவது போன்று காணப்பட்டது. இதைத் தொடர்ந…
-
- 0 replies
- 450 views
-
-
நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவி விலக முடியாது November 29, 2018 பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்ஸவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கடியையும் அவப்பெயரையும் ஏற்படுத்தாது பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும் எதிர்வரும் 7ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்படும…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கை தொடர்பில் தவறிழைத்து விட்டதாக முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது November 28, 2018 இலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இவ்வாறு தவறினை ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதமையானது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்ப…
-
- 0 replies
- 466 views
-
-
தனது பாதுகாப்பினை அதிகரிக்குமாறு ஜனாதிபதிக்கு சி.வி கடிதம். தனது தனிப்பட்ட பாதுகாப்பினை அதிகரிக்குமாறு, தமிழ் மக்கள் கூட்டனியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகான அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட தனது உயிராபத்துக்கான காரணங்களை முன்வைத்து தன்னுடைய தனிப்பட்ட காவற்துறை பாதுகாப்பை அனுமதிக்குமாறு அந்த கடிதத்தில் கோரியுள்ளார். அத்தோடு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மீதான கொலைச் சதியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப்…
-
- 0 replies
- 275 views
-
-
வடக்கு முன்னாள் முதலமைச்சரின் பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டது மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு , கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்று 24 மணிநேரங்கள் கூட ஆகியிராத நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறான நிலைமையில் தற்போது திடீ…
-
- 4 replies
- 1.8k views
-
-
மஹிந்தவின் இடைக்கால கணக்கு அறிக்கையை அனுமதிக்க முடியாது – ரவி நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அனுமதிக்க முடியாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தில் நாளை மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும். இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். முதலில் அமைச்சரவை ஒன்று இருக்க முடியாது. பெரும்பான்மை இல்லாத, நம்பிக்கை இல்லாத அரசாங்கமொன்று எவ்வாற…
-
- 0 replies
- 341 views
-
-
1 Min Read November 28, 2018 இலங்கையில் தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையில், அந்த நாட்டின் வடக்கில் உள்ள தமிழர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை நினைவுகளை மீட்டியுள்ளனர். என சனல் 4 செய்திச் செவை குறிப்பிட்டுள்ளது. எனினும் நினைவுச்சின்ன நிகழ்வுகள் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ள சனல் 4 தொலைக்காட்சி, ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேசத்தின் விமர்சனங்களை இலங்கை எதிர்கொண்டாலும், பொறுப்புக் கூறல…
-
- 1 reply
- 661 views
-
-
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரண்டைந்தார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன. அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாகச் சரண்டைந்தார். இதனை அறிந்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் காத்திருக்கின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/109957
-
- 1 reply
- 497 views
-
-
புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுவைத்தார் பிரதமர் மஹிந்த! இலங்கை மத்திய வங்கியினால் இன்று 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய்க்கான புதிய நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டார். பார்வைத் திறன் குறைப்பாடு உடையவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த நாணயக் குற்றிகள், டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிமுதல் பாவனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிய-நாணயக்-குற்றிகளை-வ/
-
- 4 replies
- 578 views
-
-
1 Min Read மிரட்டல்கள், நெருக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாயக மக்கள் நேற்று பகிரங்கமாக துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்துள்ளார்கள் என்றும் இது எமக்குத் திருப்தியை – மன நிறைவை அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாவீரர் நினைவு தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசு அனுமதி வழங்கவில்லை எனப் போலி அரசான மஹிந்த அரசின் தகவல் திணைக்களம்…
-
- 0 replies
- 473 views
-
-
தேசிய மாவீரர் தின நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைகழத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுகிறது. இந்நினைவேந்தல் பல்கலைகழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனையடுத்து மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஆசிரியர், மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. https://www.ibctamil.com/srilanka/80/109874?ref=home-imp-flag
-
- 8 replies
- 1.2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தவணை கொடுப்பனவை (லீசிங்) வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார். ‘நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தவணைப் பணத்தை வசூலிப்பதற்கு ஒழுங்கு விதிகள் உள்ளன. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த குடும்பப் பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தங்க நகையை குற்றவாளிகள் …
-
- 1 reply
- 428 views
-
-
சிவில் உடையில் வாள்களுடன் சென்று பொது மக்களை பொலிஸார் மிரட்டுகின்றனர் என்றால் வாள்வெட்டுக் கும்பலுக்கு பொலிஸாரா வாள்கள் விநியோகம் செய்கின்றனர் அல்லத வாள்வெட்டுக் கும்பல்களை நெறிப்படுத்துகின்றனரா எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நண்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: வடக்கு கிழக்கு மாகாணம் தாய்த் தமிழகம் உட்பட புலம் பெயர் தேசங்கள் எங்கும் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. ஆனாலும் வடமராட்சி பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை நடாத்துவதற்கு பல்வேறு நெருக்குதல்கள் இரானுவ…
-
- 0 replies
- 557 views
-
-
November 28, 2018 இலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இவ்வாறு தவறினை ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதமையானது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச…
-
- 0 replies
- 1k views
-
-
’ஐக்கிய தேசியக் கட்சி தன்னை பயமுறுத்த முயற்சிக்கின்றது’ Editorial / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பலர் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், தன்னுடன் அலைபேசியில் உரையாட முயற்சிப்பதாகவும் பதிவிட்டுள்ள அவர் தான் மட்டகளப்பிலுள்ள கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் யார் கருணா அம்மான் என்பதை கேட்டுத் தெரிந்துக்கொள்ளுமாறும் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐக்கிய-தேசி…
-
- 1 reply
- 606 views
-
-
மாவீரர் தின நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகளை அடித்து சேதமாக்கியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றிருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏ…
-
- 3 replies
- 1k views
-
-
கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்த தானமும் நடைபெற்றது. அத்துடன் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தின் அலங்கரிப்புப் பணிகள் தற்போது மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவால் விரைவாக முன்னெடுக்கப்பட…
-
- 1 reply
- 722 views
-
-
தான் ரணிலுக்கோ, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு போதும் செம்பு தூக்குபவனல்ல ஆனால் ஜன்நாயகத்திற்காக , ஒரு செம்பல்ல, ஒரு குடத்தையே தூக்க தயார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். "நான் ரணிலுக்கோ, ஐதேகவுக்கோ ஒரு போதும் செம்பு தூக்குபவனல்ல... ஆனால், ஜனநாயகத்துக்காக, ஒரு செம்பல்ல, ஒரு குடத்தையே தூக்க தயார்!" ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைவருக்கும் சிறுபான்மை கட்சிகள் அளவுக்கு அதிகமாக ஆதரவு வழங்குவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அவர் முகனூலில் அவர் பதிவிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2018/11/blog-post_894.html
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சீனத் தூதுவர் பேச்சு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் சென் ஷியுவான் நேற்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனத் தூதரக அதிகாரிகள் குழுவொன்றும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றது. சிறிலங்காவின் தற்போதைய சர்ச்சைக்குரிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சீனத் தூதுவர், சிறிலங்கா அரசின் உயர்மட்டங்களுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்துவது…
-
- 0 replies
- 363 views
-
-
டிசம்பருக்குள் சட்டப்படியான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் ஜனவரியிலிருந்து நாடு ஸ்தம்பிக்கும் : என்கிறார் மங்கள சட்டப் பூர்வமான அரசாங்கத்தை உடனடியாக அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்ய தவறினால் ஜனவரி மாதம் முதல் முழு நாட்டின் பொருளாதாரமும் ஸ்தம்பிதமடையும் என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடிய போது தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிசேன , ராஜபக்ஷ சூழ்ச்சி காரணமாக உருவான சட்ட விரோத அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள போதும் அந்த அரசாங்கத்தை உலகில் எந்தவொரு நாடும் இது வரை ஏற்றுக்கொள்ளவி…
-
- 0 replies
- 369 views
-
-
வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 இந்திய இளைஞர்கள் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை இந்திய ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் அழைத்து வரப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் கலேவெல – கடுபொத பகுதியில் முறையான வசதியில்லா வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை பெற்றுத் தருவதாக கூறி குறித்த 30 இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காது வேலையை மற்றும் பெற்றுக் கொண்டு முறையான வசதிகளற்ற வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். நீர் மற்றும் உணவு வசதிகளற்ற வீடொன்றில் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக தங்க…
-
- 0 replies
- 386 views
-
-
பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க!!! ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, “கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் கதிர்காமம் வரையிலும் அதன் பின்னர் கண்டி வரையிலும் பயணிக்கும். அநுராதபுரம் வரையிலும் க…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தி அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழீழத் தாயகத்தின் மூச்சுக்காற்றெங்கும் நிறைந்திருக்கும் எம் விடுதலை நாயகர்களின் பெருநாள். தமிழீழ மக்களின் விடு…
-
- 0 replies
- 659 views
-