ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? October 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெற முடியுமா? என்று சட்ட மா அதிபரிடம் யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த விடயத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவித்தனர். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி யாழ்ப்பாண மாநகர சபையால் இரும்பு வேலி அமைக்கப்பட்டது. அந்த வேலியை அகற்றுதற்கு யாழ்ப்பாணம்…
-
- 1 reply
- 482 views
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் உறுதி: ஆறுமுகன் தொண்டமான் தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் எம்மால் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இறம்பொடை தொண்டமான் கலாசார மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “புதிய அரசாங்கம், புதிய பிரதமர் என உருவாக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்ட அமைச்சு நமது வடிவேல் சுரேஷிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதேபோன்று தோட்ட உட்கட்டமைப்பு சமூதா…
-
- 2 replies
- 327 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே மஹிந்தவுடனான சந்திப்பு - த.தே.கூ. ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளைப் பிற்போட்டிருந்தாலும் அதையும் மீறி பாராளுமன்றத்தை கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. ஆகையினால் ஜனாதிபதி இணங்கினாலும் இணங்காவிட்டாலும் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் சபாநாயருக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 467 views
-
-
அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு! இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியலில் நிலவும் குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சம்பந்தனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் நிலையான தீர்வொன்று காணப்படாமல் உள்ளது. குறிப்பாக பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பிரதமர் குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்…
-
- 1 reply
- 357 views
-
-
ரணில் மீண்டும் பதவியேற்றால் அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை: மைத்திரி சூளுரை ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்…
-
- 0 replies
- 487 views
-
-
மன்னார் முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குச் செல்லும் முதன்மை வீதிகளைக் கடற்படையினர் நேற்றுத்தொடக்கம் மீண்டும் முட்கம்பிகளால் தடை ஏற்படுத்தி மூடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார். முள்ளிக்குளம் கிராமத்துக்குக் கடற்படை முகாம் ஊடாகச் செல்லும் முதன்மை வீதியைக் கடந்த 21 ஆம் திகதி திடீர் என்று கடற்படையினர் முட்கம்பிகள் கொண்டு வீதியை இடைமறித்து அடைத்துள்ளனர். மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் குறித்த வீதியைக் கடற்படையினர் மீண்டும் திறந்துவிட்டிருந்தனர…
-
- 0 replies
- 403 views
-
-
October 31, 2018 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் இன்று (31.10.18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் ச…
-
- 0 replies
- 183 views
-
-
October 31, 2018 இலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்துக்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹன்னா சின்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மார்கியு, பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடா தூதுவர் டேவிட் மெக்கினோத், ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொதட் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று சபாநாயகரைச் சந்தித்துள்ளனர். குறித்த பிரதிநிதிகள் இலங்கையில் ஏற்பட்டு…
-
- 0 replies
- 334 views
-
-
October 31, 2018 அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் என முறைப்பாடு.. அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி காவற்துறை மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் எனக் கூறிய இரண்டு பேர் அலரி மாளிகைக்குள் நுழைந்த போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. …
-
- 0 replies
- 577 views
-
-
ஜனாதிபதி இரு வாராங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக் காரணமாக எதிர்வரும் இரு வராங்களுக்கு (16 ஆம் திகதி வரை) பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி உத்திரவிட்டார். இந்நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரிய 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து இன்று சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சபாநாயகர் மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்றத்தை 16 ஆம் திகதிக்கு முன் கூட்டு…
-
- 0 replies
- 244 views
-
-
இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு...
-
- 15 replies
- 2k views
-
-
ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும் - கஜேந்திரகுமார் October 30, 2018 இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கைய…
-
- 10 replies
- 1.1k views
-
-
யாழிலிருந்து வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த முஸ்லிம் மக்கள்! October 31, 2018 வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டமையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணத்தின் ஐந்து சந்தியில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. யாழ்மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டதன் 28 ஆவது நினைவேந்தல் நேற்றைய தினம்(30) அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் யாழ் நகரின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்தி பகுதியில் உள்ள சில கடைகள் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக…
-
- 4 replies
- 887 views
-
-
நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த! நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள்…
-
- 2 replies
- 568 views
-
-
யாழ்.பல்கலை தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை October 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன் ஊடாக மாணவர்களுக்கு பெருந்தொகை பணம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் அதனால் நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பிலும் , எவ்வளவு நிதியுதவி க…
-
- 2 replies
- 684 views
-
-
ரஷ்யாவுக்கு தூது விட்ட மகிந்த சிறிலங்காவில் புதிதாகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக, நேற்று மொஸ்கோவில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். தெற்காசிய மற்றும் ஈரான் விவகாரங்களைக் கவனிக்கும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சின், இரண்டாவது ஆசிய டிவிசனின், அதிகாரிகளுக்கே அவர் சிறிலங்கா நிலவரங்களை விளக்கியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டலுக்கு அமையவே, கொழும்பில…
-
- 1 reply
- 530 views
-
-
வசந்த சேனநாயக்க ஏமாற்றி விட்டார் – சஜித் அதிர்ச்சி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வசந்த சேனநாயக்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது குறித்து, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த வசந்த சேனநாயக்க, தாம், ஐதேகவின் பிரதமருக்கு மாத்திரமே ஆதரவு அளிப்பேன் என்று கூறியிருந்தார். முன்னதாக அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் சஜித் பிரேமதாச அவரை, சமாதானப்படுத்தி, அலரி மாளிகைக்கு அழைத…
-
- 3 replies
- 531 views
-
-
சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம் Oct 30, 20180 முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில் உயிர்அச்சுறுத்தல் என்ற போர்வையில் குறித்த பாதுகாப்பை பெற்ற அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றிருந்த சுமந்திரன் அங்கு மக்களை வரிசையில் விட்டு பொலிசாரினால் உடற்பரிசோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15) …
-
- 3 replies
- 775 views
-
-
மஹிந்தவை நியமித்து ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்ந்துள்ளது – சமந்தா பவர் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா பவர், அதில், “மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால் இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார். அவசர இராஜதந்திரம் தேவை, இலங்…
-
- 9 replies
- 1.2k views
-
-
மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது. இந்த நிலையில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்ப்பாட்டுக்குழுவினரால் நேற்று சிரமதானம் மேற் கொள்ளப்பட்டதுடன் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி சுற்று வேலி அடைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் போது மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அப்பிரதேச இளைஞனர்களும் இணைந்து குறித்த பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/43372
-
- 7 replies
- 975 views
-
-
அறிக்கை… 26.09.2018 அன்று அரசியலமைப்பை மீறி சனாதிபதி சிறிசேன திரு. மகிந்த ராஜபக்ச அவர்களைப் பிரதமராக நியமித்ததமை அரசியலமைப்புக் கலாசாரம் தொடர்பில் இலங்கையில் பொதுவாக நிலவும் மதிப்பற்ற போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் தமக்கான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையினை குலைக்கும் இன்னுமொரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வுகளை நாம் நோக்குகிறோம். சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு ஒரு பொருட்டல்ல. தாராண்மைவாத அரசியலமைப்பு சனநாயகம் மூலமாக தமது வேணவாக்கள் எய்தப்படுவதில் உள்ள சிக்கல்களை இந்த வாரச் சம்பவங்கள் தமிழர்களுக்கு மீள ஞாபகப்படுத்துகின்றன. …
-
- 2 replies
- 525 views
-
-
பொலிஸ் தலையீடு: வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு கிணறு அமைக்கும் பணி பாதிப்பு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர். இது அரசாங்கத்துக்கு சொந்தமான இடம். மீறி செயற்பட்டால் அனைவரையும் கைது செய்வோம் என கிணறு அமைப்பதற்கு வந்தவர்களை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தை தொடர்ந்து கிணறு அமைப்பதற்கென வந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வாறான செயற்பாட…
-
- 0 replies
- 283 views
-
-
மகிந்தவை பிரதமராக நியமனம் செய்தமை ஜனநாயக விரோத செயல் – டெல்லியில் போராட்டம்.. October 31, 2018 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையையடுத்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸவினை நியமனம் செய்தமை ஜனநாயக விரோத செயல் என பேராட்டம் நடத்தப்பட்டதாக நடாத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் அவர்கள் தெரிவித்துள்ளனரர் எனவும் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று புதுடில்லியில் உள்…
-
- 0 replies
- 619 views
-
-
மஹிந்தவை சந்திக்கத் தயங்கும் இந்தியா! எக்கொனொமிக் டைம்ஸ் செய்தி In இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து,தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும் எனினும் தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும் எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய இந்திய அரசாங்க அதிகாரிகள் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிநீக்கத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார். இந்த நிலையில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தனது நியமனத்தின் சட்டபூர்வ தன்மையை நிரூபிக்கும்…
-
- 0 replies
- 523 views
-
-
வெளிநாடுகள் கோருவதன்படி நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது – கோத்தா சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. “இந்த அரசாங்கத்தில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது. அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுத்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும். வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு முகம் கொடுக்கும் பல்வேறு முயற்சிகளை சிறிலங்கா எதிர்…
-
- 0 replies
- 306 views
-