Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கணக்கு வாக்கெடுப்பில் தோல்வியுற்றால் நாடாளுமன்றத்தை கலைக்கத் திட்டம்? மஹிந்தவைப் பிரதமராகக்கொண்ட புதிய அரசாங்கம், நாடாளுமன்ற கணக்கு வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைக்கும் ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என்று உயர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.தே.க.வில் இருந்து கட்சி தாவி, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்றுள்ள அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “இடைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை சமர்ப்பித்து, அதனை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதே இப்போது புதிய அரசாங்கத்தின் அவசர தேவையாக உள்ளது. நிதி ஒதுக்கீட்டை நாடாள…

  2. அரசியல் குழப்பநிலை: ஜனாதிபதி – சபாநாயகருக்கிடையில் சந்திப்பு! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கான அனுமதியை சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். அதற்கிணங்க, சமகால அரசியல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் சபாநாயகரும் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பை நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே நேற்றைய தினம், 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம் மூலமாக அறிவித்திருந்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் நாடாளுமன்றை துரிதமாகக் கூட்டுமாறே பிரதானமாக வலியு…

  3. சிவில் யுத்தத்தை நோக்கி இலங்கை! – தவிர்க்க அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளும் வகையிலும் பல்வேறு சக்திகள் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தடுக்கும் வகையில் அவசரகால நிலையை உடனடியாக பிரகடனப்படுத்துமாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இயக்கத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு நீங்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்ப்பதற்கு முன்னா…

  4. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவு நிதி? – ஐ.தே.க.வின் குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. “இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பொறுப்பற்றவை. ஒரு அயல் நட்பு நாடு என்ற வகையில், இலங்கையில் மாற்றங்களை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது ஒரு உள்நாட்டு விவகாரம், ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை சீனா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க தேவ…

  5. காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாயின் சடலம் கண்டெடுப்பு! யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்ந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சடலம் பிரேத…

  6. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அலரிமளிகையை சென்றடைந்தது! (3ஆம் இணைப்பு) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்சமயம் அலரிமளிகைக்கு முன்பாக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் (2ஆம் இணைப்பு) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்…

    • 7 replies
    • 920 views
  7. ஜே.வி.பியின் கோரிக்கைக்கு இணங்கவே மைத்திரியை ஜனாதிபதி ஆக்கினோம்: ரணில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜே.வி.பியின் கோரிக்கைக்கு இணங்கவே மைத்திரிபால சிறிசேனவை நாம் பொதுவேட்பாளராக களமிறக்கினோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டு மக்களின் நம்பிக்கை, ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இங்கு, பல்வேறு இன, மத, மொழிகளைக் கொண்ட தலைவர்கள் உள்ளார்கள். நாம் அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணி ரீதியாகவே இன்…

  8. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழரின் நிலை கேள்விக்குறியே – கஜேந்திரகுமார் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மைக் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கு எவ்வாறான வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குவார்கள். இதில் பேரம்பேசும் நிலையை எமது தமிழ்த் தரப்பினரே தீர்மானித்து தமது முடிவுகளை முன்னிறுத்த வேண்டும். இன்று அரசியல் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ள இரு பிரதான கட்சிகளும் …

  9. ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் வலைவிரித்த ரணில், மஹிந்த தரப்புக்கள் (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை தமது பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக ரணில், மஹிந்த தரப்புக்கள் பரஸ்பர முயற்சிகளை எடுத்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனை நேரடியாக தொலைபேசியில் அழைத்து ஆதரவினை கோரியதாக தெரியவருகின்றது. இதன்போது சுரேஸ்பிரேமச்சந்திரன், தங்களின் கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறி விட்டதாக அறிய முடிகின்றது என்றும் எமது கட்சியின் மத்திய குழுவில் பேசியே …

  10. வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினருக்கு மிரட்டல்… October 30, 2018 1 Min Read மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது -ஊடகவியலாளரும் மிரட்டப்படார்.. வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை காவற்துறையினர் அழைத்து மிரட்டி எச்சரித்து உள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை சேர்ந்தவர்களை வல்வெட்டித்துறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு இன்றைய தினம் செவ்வாய்கிழமை காவற்துறை நிலையத்திற்கு அழைத்திருந்தார். அதன் பிரகாரம் அங்கு சென்ற ஏற்பாட்…

  11. கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்கு பதில், மக்களின் நம்பிக்கை, ஆணையை காட்டிக்கொடுப்பது கேவலமான செயல்…. ரணில் October 30, 2018 மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் எனவும் அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (30.10.18) கொழும்பில் இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துரைத்த அவர், ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதே எ…

  12. Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த மகிந்ததவின் பக்கம் தாவியுள்ளார். அத்துடன் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் துனேஷ் கங்கந்த பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட…

  13. ஆளுமையற்ற பிரதேச சபையாகவே வேலணை மாறிக்கொண்டிருக்கிறது கலைமாறன் வேலணைப் பிரதேச சபை ஆளுமை அற்ற சபையாக மாறிக்கொண்டு செல்கின்றது என்று சபை உறுப்பினர்கள் சிலர் சபையில் நேற்றுத் தெரிவித்தனர். …

  14. சலுகைகளும் பறிபோகும் அபாயம்!! ராஜித ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இலங்கைக்கான சர்வதேச சலுகைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்: ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார். அத்துடன் இதன் காரணமாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் முன்னாள் அம…

  15. நாட்டின் அரசியல் நிலைமை குறித்து ஐ.நா. கவலை! நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள அரசியலமைப்பு நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் வகையில் அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா. அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இருவருக்கும், சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் நிலைமை பற்றி ஐ.நா. தூதுவர் கவலை வெளியிட்டதுடன், இந்நெருக்கடிகளை உடனடியாக தீர்க்க வேண்டியது அ…

  16. இலங்கை அரசியலில் பரபரப்பு - யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன? இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளது பற்றி யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள். https://www.bbc.com/tamil/sri-lanka-46002522

  17. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ! பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமசிறி பெர்ணான்டோ, சிறந்த நிர்வாகத் துறை நிபுணராவார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் தபாற்துறை அமைச்சின் செயலாளராகவும் ஹேமசிறி பெர்ணான்டோ பணியாற்றியுள்ளார். மேலும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் ஶ்ரீ லங்கா டெலிகொம் ஆகியவற்றின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.co…

  18. மகிந்தவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா முயற்சி? October 30, 2018 மகிந்த ராஜபக்சவின் நியமனம் அரசமைப்பிற்கு உட்பட்டதாகயிருக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார்… ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவின் என்டிரீவி தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை எதிர்பார்க்காத இந்தியா இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களிற்கு பின்னர் மகிந்தவுடன் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என என்டிரீவி தெரிவித்துள்ளது. சிறிசேனவின் நடவடிக்கை காரணமாக மகிந்த ராஜபக்ச மீள…

    • 1 reply
    • 486 views
  19. அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன். கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது. இந்நிலையில் நல்லாட்ச…

    • 2 replies
    • 1.2k views
  20. By அருச்சுனன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் யாழப்பாணத்தில் உள்ள சிறீதர் தியேட்டர் முன்பாக ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி ஆரவாரம் செய்கின்றனர். …

    • 4 replies
    • 859 views
  21. கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக வளாகத்தில் காலை பத்துமணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே கண்மூடி தூங்குகின்றாயா ?? OMP மீது எமக்கு நம்பிக்கையில்லை, சர்வதேசமே எமது உறவுகளை மீட்டுத்தா , OMP யை எங்கள் மீது திணிக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடனும் கோஷங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த போராட்டம் இடம்பெற்றது…

  22. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைதானார்…. October 29, 2018 அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்படடுள்ளதாக காவற்துறைப் ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/101163/

  23. தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… October 30, 2018 எல்லை தாண்டிச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக தெரிவித்து தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி அவர்களில் 17 பேரை கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/101255/

  24. அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை October 30, 2018 இலங்கையின் அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றின் மூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கையின் ஏனைய சர்வதேச நண்பர்களுடன் இணைந்து இலங்கையின் அரசியலமைப்பை மதிக்கும் தீர்வொன்றை விரைவில் காணுமாறு வலியுறுத்தும் நோக்குடன் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சந்தித்தார் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் எனவும…

  25. அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும். http://tamil.adaderana.lk/news.php?nid=107909

    • 0 replies
    • 239 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.