ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை October 30, 2018 இலங்கையின் அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றின் மூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கையின் ஏனைய சர்வதேச நண்பர்களுடன் இணைந்து இலங்கையின் அரசியலமைப்பை மதிக்கும் தீர்வொன்றை விரைவில் காணுமாறு வலியுறுத்தும் நோக்குடன் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சந்தித்தார் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் எனவும…
-
- 0 replies
- 347 views
-
-
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும். http://tamil.adaderana.lk/news.php?nid=107909
-
- 0 replies
- 239 views
-
-
இன்று வன்முறை வெடிக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் நாட்டின் பிரதமரை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக, அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன. சிறிலங்கா பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று, நண்பகல் 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறும் சாத்தியம் உள்ளது. அமைதியான நோக்கில் தொடங்கும் ஆர்ப்பாட்டங்கள் கூட, மோதலாக மாறவோ, வன்முறைகள் அதிகரிக்கவோ கூடும…
-
- 0 replies
- 306 views
-
-
விரைவில் மாகாணசபைத் தேர்தல் – சிறிலங்கா அதிபர் புதிய அரசாங்கம் கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமகராமவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், “மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன், விரைவில் கலந்துரையாடவுள்ளேன். ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் இன்னொரு நடவடிக்கையாக இது இருக்கும். அரசியல் தலைமைத்துவம் இல்லாததால், ஆறு மாகாணசபைகளின் அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் இன்றி உள…
-
- 0 replies
- 312 views
-
-
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழுத்தம சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுத…
-
- 0 replies
- 397 views
-
-
சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள்! – மஹிந்தவிடம் சுட்டிக்காட்டினார் சம்பந்தன். நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தித்து இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, நாட்டின் இறையாண்மைக்கு இது பாதகமாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன், இறையாண்மையை பாதுகாக்க உடன் நாடாளுமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதனை செவிமடுத்த பிரதமர் மஹிந்த, இவ்விடயம் தொடர்பாக தா…
-
- 1 reply
- 884 views
-
-
மஹிந்தவின் பதவியேற்பில்.. கீழே விழுந்த, சிறிசேன அமரசேகர. இலங்கைப் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி கீழே விழுந்தார். நேற்று காலை பிரதமர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கீழே விழுந்த பிரதமர் மஹிந்தவின் செயலர் சிறிசேன அமரசேகரவை அருகில் நின்ற சி.பி.ரத்நாயக்க உள்ளிட்ட மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்தூக்கி எழுப்பி விட்டனர். இந்தச் சம்பவத்தினால் பதவியேற்பு நிகழ்வில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. http://athavannews.com/மகிந்தவின்-பதவியேற்பில்/ சகுனம்... சரியில்லைப் போலுள்ளது.
-
- 0 replies
- 445 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றினை ஐக்கிய தேசிய கட்சி நடத்தவுள்ளது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் இன்று நடைபெறவுள்ளது. இப்போராட்டம் முன்னாள் பிரதமர் ரணிலையோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கோ மேற்கொள்ளப்படும் போராட்டமல்ல. இருதரப்பு முரண்பாடுகளுக்காக மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கே இப்போராட்டதை நடத்தவுள்ளதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளளது. மேலும் ஜனாதிபதிபதியின் தனிப்பட்ட தீர்மானம் நாட்டின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் சீர்குழைத்துவிட்டதாகவும் ஐ.தே.க கவலை தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 300 views
-
-
மன்னார் வீடொன்றுக்குள் அதிரடிப் படையினர்! மன்னார் எழில் நகரிலுள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களை தேடி அதிரடிப் படையினர் மேற்கொண்ட அகழ்வுப் பணிகள் தோல்வியடைந்துள்ளன. கொழும்பிலிருந்து மன்னாருக்கு விரைந்த அதிரடிப் படையினர் நேற்று (திங்கட்கிழமை) குறித்த வீட்டின் சமையலறை பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த வீட்டிற்கு விசேட அதிரடிப்படையுடன் சென்று சோதனைகளை மேற்கொண்டதுடன், குறித்த வீட்ட…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கை தெருக்கள் ரத்தத்தால் நிறையும்.. மக்களை எச்சரிக்கும் சபாநாயகர்.. என்ன நடக்க போகிறது? இலங்கையில் அரசியல் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் அங்கு தெருக்களில் ரத்த வெள்ளம் ஓடும் நிலைமை ஏற்படும் என்று அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார். இதனால் அங்கு யார்தான் பாஸ் பிரதமர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் கொழும்பு நகரம் முழுக்க ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்கள் ப…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் அல்லது உத்தரவாதம் அளிக்காது விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் நடு நிலைமை வகிப்பதே சிறந்தது. இதனையே என்னுடைய கட்சி செய்யும். அதே போன்ற நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்க வேண்டும். என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கை பொருளாதாரத்தில் பலப்படுத்த விரிவான நடவடிக்கை - ஜனாதிபதி வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல் வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார கொள்கையில் காணப்படும் தவறுகள் காரணமாக எமது மரபுரிமைகள் சிதைவடைகின்றன. கலாசாரம் அளிக்கப்படுகின்றது. பல காலமாக எமது தேவைக்கான உணவினை நாமே உற்பத்தி செய்துகொண்டது மாத்திரமன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோ…
-
- 2 replies
- 810 views
-
-
கட்சித் தலைவர்களுக்கு 300 மில்லியன் பணப் பரிமாற்றம் – மஹிந்த, மைத்திரி மீது குற்றச்சாட்டு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவதற்கு கட்சி தலைவர்களுக்கு பல மில்லியன் ரூபாய் பணம் பரிமாறப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாயும், அமைச்சர்களுக்கு 300 மில்லியன் ரூபாயும் குறுக்குவழியில் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து பல கட்சி உறுப்பினர்களும், ஐ.தே.கவுடன் கூட்டணியில் இருந்த உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துடன் கைகோத்து வருகின்றனர். அந்தவகையில் இன்று 12 அம…
-
- 1 reply
- 700 views
-
-
வடக்கில் தேர்தல் நடத்தப்படாமை குறித்து ஜீ.எல். கவலை! மாகாண சபை தேர்தலை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பது மிகவும் மோசமான செயலென பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தானே முடிவெடுப்பதாக ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்ததாகவும், இது மிகவும் பாரதூரமான செயலென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”இந்த அரசாங்கம் ஜனநாயக விழுமியங்களை மீறிச் செயற்பட்டது. ஒரு நாட்டின் மக்களுடைய விருப்பை பிரதிபலிப்பதே தேர்தல். அதனையும் நடத்தாமல் பிற்போட்டது. ஆறு மாகாண சபைக…
-
- 2 replies
- 600 views
-
-
புதிய அமைச்சரவை நியமனம் Live Update In இலங்கை October 29, 2018 2:05 pm GMT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது. மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – ஆறுமுகம் தொண்டமான் ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டசிலஸ் தேவானந்தா மாகாண சபை, உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – பைசர் முஸ்தபா கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் – விஜித் விஜயமுனி சொய்சா மின்சாரம் மற்ற…
-
- 5 replies
- 1.1k views
-
-
மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று திங்கட்கிழமை(29.10.18) மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு கணகாம்பிகை அவர்களினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுனர் றெஜினோலட் குரே மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவத்தின் வசம் காணப்…
-
- 0 replies
- 355 views
-
-
சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முட…
-
- 14 replies
- 1.7k views
-
-
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சம்பிக்க மீண்டும் தலைத்தூக்கியுள்ள மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அரசியல் ரீதியிலான பாரிய சர்ச்சையொன்று ஏற்பட்டது. அரசமைப்புக்கு முரணான இந்த செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து மேற்கொண்டுள்ளார்கள். இவர்களின் இந்த செயற்பாட்டால் நாட்டின் நிர்வாகமே முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்ப…
-
- 0 replies
- 565 views
-
-
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 உறுப்பினர்கள் சபாநாயகருக்குக் கடிதம்! October 29, 2018 – நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்… நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற சூழலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிகளான தமது கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி 126 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க உட்பட 126பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தை கூடுவது குறித்து இந்தக…
-
- 0 replies
- 680 views
-
-
கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! ரணில் மீண்டும் பிரதமராகும் சந்தர்ப்பம்? ரணில் கூறியது என்ன? ஒரே பார்வையில்! October 29, 2018 இலங்கையின் அரசியலில் திடீர் மாற்றமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதுடன் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தார். இந் நிலையில் மகிந்த ராஜபக்ச இன்று பிரதமராக கடமையை பெறுப்பேற்றுக் கொண்டார். இதேவேளை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு இன்று 126 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர். இதில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, …
-
- 0 replies
- 478 views
-
-
சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம் பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா .சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதை கருத்தில்கொண்டும் மக்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்ய்ப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள பாராளுமன்றத்தில் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டும்,பாராளுமன்றம் தனது சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொ…
-
- 1 reply
- 747 views
-
-
பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ! இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக…
-
- 11 replies
- 1.5k views
-
-
மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன? மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள் உருத்திரகுமாரன் சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த விடயம் சரியானது என்பதை நிரூபித்துள்ளார் எனவும் குறிப்…
-
- 10 replies
- 1.1k views
-
-
நல்லாட்சி கருப்பொருளை அரசாங்கத்தை உருவாக்கி மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னரே சிதைத்து விட்டார்கள். - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை October 28, 2018 1 Min Read ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. 2018.10.28 எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய திசையை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். அத்தோடு குறிப்பாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த கார…
-
- 5 replies
- 667 views
-
-
ராஜபக்ஷவின் வருகையால் அச்சமடைந்துள்ள தமிழ் மக்கள்: மாவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவத…
-
- 2 replies
- 504 views
-