Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 10 MAR, 2025 | 06:27 PM கண்டி பிரதான புகையிரத நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம் பயணித்த போது சமிக்ஞைகளைக் கையாளும் கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது. அந்த நேரத்தில் புகையிரத சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, புகையிரத சாரதியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைய…

  2. Published By: Rajeeban 06 Mar, 2025 | 03:06 PM யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார் அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்…

  3. உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். குறித்த யூடியூப்பர்பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த யூடியூப்பருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த யூடியூப்பர் வந்திருந்த நேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப…

  4. Published By: VISHNU 10 MAR, 2025 | 06:36 PM (செ.சுபதர்ஷனி) அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளாக உள்ளன. ஆகையால் அவற்றுக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை. இத்துறைகளில் கடமையாற்றுபவர்களின் பொறுப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அத்துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படு…

  5. Published By: VISHNU 10 MAR, 2025 | 08:45 PM (நா.தனுஜா) பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதனை இலக்காகக்கொண்ட சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகளாவிய ரீதியில் பெண்களின் அடைவுகள், சமூக முன்னேற்றத்தில் அவர்களது பங்களிப்பு, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அவற்றிலிருந்து மீண்டெழும் ஆற்றல் மற்றும் சமத்துவத்துக்கான அவர்களது …

  6. Published By: DIGITAL DESK 3 10 MAR, 2025 | 05:38 PM தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை (10) பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை…

  7. யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்க…

  8. மதப் பிரச்சாரகர்கள் உட்பட 15 இந்திய பிரஜைகள் நாடுகடத்தப்பட்டனா் adminMarch 9, 2025 சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டுக்குள் சென்று யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரச்சாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழுவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனா். இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாகளின் கீழ் நாட்டிற்கு சென்றுள்ளனா். அவர்களில் இருவர், யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் நோய்களை குணப்படுத்துவதற்கான தீவிரவாத மத சேவையை நடத…

  9. 10 Mar, 2025 | 02:28 PM இலங்கையில் உள்ள ரோகிங்யா அகதிகள் இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு வீடு போன்ற நிரந்தர மற்றும் உடனடி உதவிகளை கோரி அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடலில் இருந்து மீட்கப்பட்டோம் ஆனால் தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் பதாகைள் உட்பட தங்கள் துயரங்களை தெரிவிக்கும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்டோம் ஆனால் தரையில் உயிரிழக்கின்றோம் - ஐநா அலுவகத்தின் முன்னால் ரோகிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  10. 10 Mar, 2025 | 03:51 PM இலங்கை முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு பங்காளராக இருக்க விரும்புவதாகவும், இலங்கை அரசாங்கத்துடனும் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப கட்ட திட்டங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட இது சிறந்த வாய்ப்பு என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர் மற்றும் தொழில்முனைவோர் அலோ பிளெக் (Aloe Blacc) தெரிவித்தார். இசைக்கு அப்பால் பரந்துபட்ட மிக முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர் மற்றும் தொழில்முனைவோர் அலோ பிளெக் (Aloe Blacc) மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை இலங்கைக்கு வருகை தந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,…

  11. 10 Mar, 2025 | 04:39 PM கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு தற்போது இராணுவத்தினரின் வசமுள்ள நீச்சல் தடாகத்தை முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் நீச்சல் பயிற்சிகளை விளையாட்டு வீரர்கள் பெறும் வகையிலும் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனிடன் கோரிக்கை ஒன்று விடுக்கப்படுள்ளது. கடந்த சனிக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் முல்லை பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி புதுக்குடியிருப்பில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கலந்துகொண்ட போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்படுள…

  12. E-சிகரெட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற நிதிக்குழுவில் தெரிய வந்துள்ளது. இந்த விடயத்தினை கருத்திற் கொண்டு ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் வரி இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படு…

  13. யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து வ…

      • Thanks
      • Like
    • 3 replies
    • 282 views
  14. 17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது! 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவு 8.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். சோதனையில்,…

  15. விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது! துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை வேட்டையாட வந்த போது பிரதேசவாசிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பேராதனை பொலிஸ் நிலையத்தில் இரவு நேர நடமாடும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உரிய இடத்திற்கு சென்று பார்த்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட பன்றியையும் விலங்குகளை வேட்டையாடிய ஆறு நபர்களையும் கைது செய்தனர். இதன்போது, 03 12-துளை ரவைகள், 03 ஸ்கால்பெல்கள், ஒரு கோடாரி, ஒரு கை கோடாரி, 02 டிராகன் லைட்டுகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை சந்தேக நபர…

  16. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை! இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் அவதானம் செலுத்தப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/399225/இலங்கை-தமிழரசு-கட்சியின்-மத்திய-க…

  17. ரணிலுக்கு எதிராக புதிய விசாரணைகள் - சுனில் வட்டகல Published By: Rajeeban 09 Mar, 2025 | 12:57 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம புதிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்தே விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த இரண்டும் ரணில் விக்கிரமசிங்;கவின் பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி வெளிப்படை தன்மை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது ரணில் விக்கிர…

  18. கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர் 09 Mar, 2025 | 01:10 PM கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சனிக்கிழமை (08) நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்று வருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த வீதியே இருந்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர். இந்த வீதியின் சில பாலங்களும் அமைக்கப்ப…

  19. நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315488

  20. 08 Mar, 2025 | 08:35 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். திருமண வயதை 18ஆக திருத்தம் மேற்கொள்ள முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். என்றாலும் தற்போது காலத்துக்கு ஏற்றவகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள நீண்டகாலமாக க…

  21. Published By: Digital Desk 2 08 Mar, 2025 | 09:13 PM திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு எதிர்காலத்தில் மேள்கொள்ளப்பட திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி தொடர்பில் இந்திய தூதுவரக உயர் அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். சனிக்கிழமை (08) கள ஆய்வு மேற்கொண்டதுடன், ஆலயத்துக்கு வருகைதந்து பல விடயங்கள் கேட்டறிந்தனர். இதன் போது, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் ஆறு.திருமுருகன் ஆலய நிர்வாக சபைத் தலைவர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தியப்பிரதமரிடம் கோணேஸ்வரத் திருப்பணிக்கு உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208642

  22. 08 Mar, 2025 | 05:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே பெண்களை துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் பெண்களை எமது தேசிய தலைவர் இணைத்துக் கொண்டார்…

  23. Published By: Digital Desk 2 08 Mar, 2025 | 09:14 PM பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின், பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் கொடி தினத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் தெரிவிக்கையில், பார்வைக் குறைபாடு உட்பட இயலாமை உடைய பெண்கள் தமது தொழில்களைப் பாதுகாப்பதற்கும், …

  24. 08 Mar, 2025 | 02:25 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கு திட்டமிடுகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். மேலும் கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடங்களை அறிந்திருந்தும் அவர்கள் கைது செய்யப்படாமையானது அரசாங்கத்துக்கு இவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது என்பதை காண்பிப்பதாகவும் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தால் மின்சாரக் …

  25. 08 Mar, 2025 | 10:43 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு சனிக்கிழமை (8) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் பூர்த்தியடைகின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.