ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வைத்தும் அதன் பின்னரும் பதின்நான்கு வயதுடைய சிறுமி ஒருவரை துன்பறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட குற்றவாளிக்கு நேற்று புதன்கிழமை (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 2009ம் ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தியும் பாலியல் வல…
-
- 3 replies
- 241 views
-
-
யாழில். ஏற்பட்டு உள்ள கால நிலை மாற்றத்தால் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த 96 வயதுடைய முருகன் கிருஷ்ணன் ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி காவற்துறையினர், கால நிலை மாற்றத்தால் தற்போது ஏற்பட்டு உள்ள குளிர் கால நிலையால் இருவரும் உயிரிழந்தனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனர். http://globaltamilnews.com/
-
- 0 replies
- 990 views
-
-
13வது திருத்தம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி திட்டம் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வையும் அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2023/1340993
-
- 14 replies
- 929 views
-
-
ஞாயிறு 15-04-2007 15:36 மணி தமிழீழம் [மயூரன்] கரடியனாற்றில் லெப்.கேணல் ஜீவனின் நினைவுச் சிலை படையினரால் அடித்துடைப்பு தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுத் தூபிகள், நினைவுப் படங்களை அடித்துடைத்து அழித்து வருகின்றனர். இவ்வாறு கரடியனாற்றில் அமைந்துள்ள லெப்.கேணல் ஜீவன் அவர்களின் நினைவுச் சிலையை ஆக்கிரமிப்புப் படைகளால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. மூலம் - பதிவு
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் மூன்று நாள் பயணத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார். இன்று யாழ்ப்பாணம் வரும் அவர், தனது வடக்கு, கிழக்கு பயணங்களின் முடிவில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பாதுகாப்பு நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் பிரகாரமே படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதிய அரசு தெரிவித்துள்ளது. காணி விடுவிப்பு, படை குறைப்பு தொடர்பான கோரிக்கைகளும் - அழுத்தங்களும் வலுப்பெற்று வரும் நிலையிலுமே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் இந்த வருகை அமைந்துள்ளது. படைக் குறைப்பு குறித்து தமது 100 நாள…
-
- 0 replies
- 254 views
-
-
தமிழ் மக்களுக்கெதிரான மனிதவுரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள் - பாப்பரசரிடம் கஜேந்திரன் வேண்டுகோள். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்களென யாழ்.மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் பாப்பரசர் 16ம் பெனடிக்ற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கடிதத்தின் முழுவடிவம் வருமாறு: செல்வராஜா.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ தேர்தல் மாவட்டம் 17.04.2007 ஆதிவணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் அவர்கட்கு ஐயா இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை…
-
- 2 replies
- 983 views
-
-
யூன் 2011 கணக்கறிக்கை யூன் 2011 கணக்கறிக்கை PDF வடிவில் இணைக்கப்படுகிறது. இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். யூன் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் – 70. இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் – 10. இம்மாதம் பயன்பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் – 9. நேரடிப்பயனாளிகள் தொகை இங்கே சேர்க்கப்படவில்லை. நேரடியாக உதவி வழங்குவோரும் பயனாளிகளும் நேரடித்தொடர்பில் இருக்கிறார்கள். இலங்கை ரூபாவில் அனுப்பப்பட்டுள்ள உதவிகள் எமது தொடர்பிலும் உதவுவோரின் தொடர்பிலும் இருப்போருக்கு உதவும் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. எமக்குத் தொகை தெரியப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையும் கணக்கறிக்கையில் சேர்த்துள்ளோம். உதவிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் ந…
-
- 0 replies
- 748 views
-
-
வவுனியாவில் இடம் பெற்ற டெலோவின் சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலில் சிறி டெலோவின் முக்கியஸ்தர்கள் : October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் ஆரம்ப கால சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒன்று கூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(21)மாலை வவுனியா மாவட்ட டெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற நிலையில் சிறி டெலோ கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்ட காலத்திலும்,அரசியல் களத்திலும் செயற்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் உறுப்பினர்களே இன்று இடம் பெற்ற குறித்த ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர். டெலோ கட்சியின் சர்வதேச ஒருங்கிண…
-
- 0 replies
- 561 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் மனைவிமார்கள் சாட்சியம் [Thursday, 2011-07-07 08:29:59] கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்றுத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அழைக்கப்பட்ட சாட்சிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணைகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த வருடம் வடக்கில் நடைபெற்றன. இதன்பின்னர் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி வடக்கில் அமர்வுகள் நடைபெற இருந்தன. எனினும் இதனை ஆணைக்குழு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருந்தது.இந்த நிலையில் நேற்றுத…
-
- 0 replies
- 496 views
-
-
இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்று புதுடெல்லியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை சிறிசேனா ஏற்றுக் கொண்டார். பின்னர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும்…
-
- 1 reply
- 935 views
-
-
- கிளிநொச்சியிருந்து குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதாக மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல என்று தெரிவித்த ஆயர் பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். சிங்கள மக்களிம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுவதா…
-
- 0 replies
- 312 views
-
-
பிலிப்பைன்ஸ் சிறுமியின் பிறப்பு உறுப்புகளைத் தொட்டுப் பார்த்த வெட்கம் கெட்ட இலங்கை மதகுருவின் விபஸ்தையற்ற நடத்தை [Friday, 2011-07-15 10:15:49] பிலிப்பைன்ஸில் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரை தவறான நோக்குடன் சீண்டிப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.பசே நகரத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் தாயாருடன் இருந்த சிறுமியொருவரின் பிறப்பு உறுப்புக்களை குறித்த மதகுரு தொட்டார் என பாதிப்புக்குள்ளாகிய பெண் தெரிவித்துள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட தாய் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உதவியை நாடி குறித்த இலங்கை மதகுருவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். 43 வயதான குறித்த சந்தேக நபர் மணிலாவில் உள்ள பல்கலைக்கழகத…
-
- 2 replies
- 769 views
-
-
இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கண்டனம் வெளியிட்டு யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். http://onlineuthayan.com/News_More.php?id=263733894627381176
-
- 0 replies
- 356 views
-
-
ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் நாளை (புதன் கிழமை) சென்னைக்கு வரவுள்ளார் என்றும் அப்போது அவர் தமிழக முதல்வரைச் சந்திப்பார் என்றும் செய்தி வந்துள்ள…
-
- 0 replies
- 392 views
-
-
முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு. (எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய முஸ்லிம் பாரம்பரிய கலைகலாசார நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கோலாட்டம் களிகம்பு, சீனடி, வாள்வீச்சு, கம்புவீச்சு, கஸீதா, நாட்டார் கவி, றபான், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைமன்றங்களின் உறுப்பினர்கள், …
-
- 1 reply
- 652 views
-
-
வெள்ளி 18-05-2007 16:37 மணி தமிழீழம் [மயூரன்] யாழ் பல்கலைக் கழகத்தை மூடி படைமுகாம் அமைக்க இராணுவம் முயற்சி யாழ்ப்பாணம் பல்கலைக்ழகத்தை மூடுவதற்கான முன்முயற்சி நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். இதனைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி சந்திசிறீக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பல் கலைக்கழக பதில் துனைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அறியவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் ஈ.பி.டி.பி மற்றும் ஆயுத ஒட்டுக்குழுக்களும், பல்கலைக்கழக மாணவர்களின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ரஸ்யாவுடன் ஒப்பந்தம் : 22 ஜூலை 2011 சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு, போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட விவகாரங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைக் பரிமாறிக் கொள்வது தொடர்பிலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் பேச்சுவ…
-
- 1 reply
- 346 views
-
-
மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது. பின்னர், நேற்று மாலை அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக- தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் …
-
- 0 replies
- 177 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:04 PM (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர்…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சுவிஸ் தமிழர் பேரவை [வியாழக்கிழமை, 24 மே 2007, 17:29 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிஸ் வாழ் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என சுவிஸ் தமிழர் பேரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிற்சர்லாந்து வாழ் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய…
-
- 0 replies
- 967 views
-
-
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா பெண் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை ஒரு நரகம் என்று சிறைக்கைதிகளால் வர்ணிக்கப்படுவதாக அல் ஜெசீரா சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசிய வலய நாடுகளில் அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக இலங்கை திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிராந்திய நாடுகளுக்குள் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகள் இலங்கையில் காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பான தெற்காசிய பிரதிநிதி கிறிஸ்டினா அல்பெர்டின் தெரிவித்துள்ளார். வழமையாக கைதிகளை தடுத்து வைக்கப்படும் அளவை விடவும் இ…
-
- 0 replies
- 695 views
-
-
புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருக்கின்றேன் – ஜனாதிபதி! நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையான “சண்டே டைம்ஸ்” க்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். அத்தோடு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ற்கான வாய்ப்பு இல்லை. நானே பதவியில…
-
- 2 replies
- 628 views
-
-
Posted on : Tue May 29 5:55:01 EEST 2007 மட்டு. விமானப்படைத் தளத்தினுள் நுழைய முயன்ற பெண் மீது சூடு! மட்டக்களப்பில் உள்ள விமானப்படையினரின் முகா முக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத் தின் பாதுகாப்பு வேலியைக் கடந்து குறிப்பிட்ட பெண் உள்ளே நுழைய முற்பட்ட வேளை யிலேயே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய இந்தப் பெண் எதற்காக முகாமுக்குள் நுழைய முற்பட்டார் என்பதுகுறித்து எதுவித தகவல் களும் வெளிவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் படையினர் விசாரணை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் உள்ளிட்ட பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை வவுனியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். . இதன் அடிப்படையில், குறித்த பிரதேசங்களை சொந்த இடங்களாக கொண்ட பொது மக்களை, மாற்று பிரதேசங்களில் குடியேற்ற வற்புறுத்தப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முல்லை அரசாங்க அதிபர் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என கூறியுள்ளார். . ஆனால் முள்ளீவாய்கால் மற்றும் புதுமாத்தளன் பிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Sat Jun 2 7:09:22 EEST 2007 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை கண்காணிப்புக் குழு அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக எந்த விதமான மாற்றமும் தம்மைப் பொறுத்தமட்டில் இல்லை என்று இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதனையா வது கொண்டுவருவதா அல்லது ஒப்பந் தத்தை ரத்துச் செய்வதா என்பது குறித்து அரசு தமக்கு எந்தவித அறிவுறுத்தல்களை யும் இதுவரை விடுக்கவில்லை என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்க ளுக்கு அமைய போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது என்றும் அது தெரிவித் துள்ளது. (சி) ந…
-
- 3 replies
- 1.4k views
-