Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420036

  2. எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதில் நம்பிக்கை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது. ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வருடம் வாகன இறக்குமதிக்காக 1000 முதல் 1200 மில்லியன் ரூபா வரை வெளிநாட்டு கையிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி. ஒருவருக்கு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் …

  3. பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் திட்டம் தொடர்பில் அறிவிப்பு! 35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு பகுதிக்கான ஆட்சேர்ப்பு உள்ள வெற்றிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் அத்துடன், அரச சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவொன்று இருப்பதாகவும், அதனைக் கையாள்வதற்காக மற்ற…

  4. மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறத…

  5. குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது - அருட் தந்தை சிறில் காமினி 06 Feb, 2025 | 12:12 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரசியல் தலையீடு தேவையற்றது. எனவே இந்த விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி வலியுறுத்தினார். நேற்று புதன்கிழமை (05) கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை …

  6. வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி February 6, 2025 07:29 am அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அந்த விளம்பரம் பரப்பப்பட்டுள்ள நிலையில், அது ஒரு போலியான விளம்ப…

  7. அநுரவின் வெற்றிக்கு புலம்பெயரிகளே காரணம்! - விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இயல்பாக வாக்குகள் கிடைத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஏனெனில் அங்குள்ள குடும்பங்களில் 90 சதவீதமானவற்றில் எவரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பார்;. அவர்கள் அங்கு பலமாக உள்ளனர். எனவே, அங்கிருந்து வரும் தகவலுக்கமைய இங்கு தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படலாம். அந்த சக்திகளை (புலம்பெயர்) திருப்திப்படுத்துவதற்கு அரசாங்…

  8. பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணியளவில் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் மாலை 6:50 மணியளவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகள் கடந்த 31ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர தபால் சேவையானது காங்கேசன்துறையிலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, அதிகாலை 4.20 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணியளவில் பயணத்தை ஆர…

  9. அர்ச்சுனா எம்.பி.யின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பு! ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டார். அங்கு அவர் தெரிவிக்கையில்; தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா? வடக்கு, கிழக்கில் …

  10. அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவித்தல்! இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் VFS கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக…

  11. ”புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு இப்போதைக்கு இல்லை” - அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளை இப்போதைக்கு ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டுவரும் பணிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானஙகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு மக்கள் ஆணைக்கமைய நடக்கும். …

  12. இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள் 04 FEB, 2025 | 06:38 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. பிரதமர் உட்பட ஏனைய பிரதம அதிதிகளின் வருகையை அடுத்து எட்டு மணிக்கு…

  13. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315130

  14. 70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது . ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது . சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந…

  15. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை வழங்காது என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ. நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315141

  16. 05 FEB, 2025 | 05:21 PM (எம்.வை.எம்.சியாம்) டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிஜிட்டல் அமைச்சர், டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் எனவும் இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது எனவும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை (05) ஏற்பாடு செய…

  17. யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்! மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது 60 குருதிக் கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெய…

  18. ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில…

  19. Published By: DIGITAL DESK 7 05 FEB, 2025 | 05:21 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை, ஜப்பான் அரசாங்கங்களுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (ஜைக்கா) நிறுவனத்துக்கும் இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கடன் மீள்கட்டமைப்புக் கலந்துரையாடல்களைப் பூர்த்தி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், ஜப்பான் அரசுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கமைய, அந்நாட்டு அரசுடன் கடன் மீள்கட்டமைப்ப…

  20. 05 Feb, 2025 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை மீறல் பத்திரத்தில் உள்ள விடயங்களைத் தவிர்த்து சபையில் உரையாற்றிய ஏனைய அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது. தயவு செய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் குறிப்பிட்டார் பாராளுமன்றம் புதன்கிழமை (5) சபாநாயகர்…

  21. ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார்- முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவரவும் அரசாங்கம் தீர்ம…

  22. 05 Feb, 2025 | 12:52 PM நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று புதன்கிழமை (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகளை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அரிசி சந்தையின் போக்கு மற்றும் விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளை மதிப்பீடு செய்த பின்னரே விலைகள் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாட்டு நெல் ஒரு கிலோவுக்கு 120 ரூபாய்க்கும். ச…

  23. 05 Feb, 2025 | 02:43 PM வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அண்மைய நாட்களாக கால்நடைகள் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்பதனால் அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையினர் பொலிஸாரின் உதவியுடன் ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, மந்துவில், சிவநகர், கோம்பாவில், கைவேலி ஆகிய பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த நடவடிக்கையில் 100க்கும் அதிகமான மாடுகள் புதுக்க…

  24. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது. பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜ் இன்று (5) இக்கடிதத்தை எழுதியுள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தங்களுடைய பாடசாலை மைதானத்துக்கு தினமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்த…

  25. Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 09:56 AM யுஎஸ்எயிட்டின் நிதி உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் மூலம் நன்மையடைந்த அரசசார்பற்ற அமைப்புகளின் விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச திட்டங்களில் யுஎஸ்எயிட் அமைப்பின் தலையீடுகள் குறித்து மேற்குலக ஊடகங்கள் எழுப்பியுள்ள கரிசனைகள் குறித்து அவர் சமூக ஊடகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் உலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.