Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நா.க. தமிழீழ அரசாங்கம் அறைகூவல் சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவ…

  2. நாட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளை கமலஹாசனின் தசாவதாரம் திரைப்படத்துக்கு ஒப்பாக்கிய ஜனாதிபதி 01 Feb, 2025 | 01:15 PM (எம்.வை.எம்.சியாம்) நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் மாற்றியமைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்.வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நடிகர…

  3. கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு 01 Feb, 2025 | 01:15 PM கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி சில நாட்களாக துண்டிக்கப்பட்டமையால் தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூநகரி போன்ற கடும் நீர் நெருக்கடியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முற்றுமுழுதாக குழாய் வழி நீ…

  4. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை. ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உய…

  5. வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு. நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்களை…

  6. வடமராட்சியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்! வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் (31) இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (ப) https://newuthayan.com/…

  7. யாழ். போதனா மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவ நிபுணர் மீள் அழைக்கப்பட வேண்டும். - சிறீதரன் எம்.பி! சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும் என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். "பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே இவ்வாறு இட…

  8. அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் ! kugen உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான போதுமான தகவல்கள் உள்ள நிலையில் அவற்றை விசாரணை செய்து வெளிப்படுத்தாது விட்டால் உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வே…

      • Like
      • Haha
    • 7 replies
    • 287 views
  9. 31 Jan, 2025 | 02:40 PM ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார். 1. யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல் வேண்டும். 2. யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகள் அதிகளவான நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. பல விடுதிகளில் கட்டில்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது நோயாளர்கள் தரையிலும் இரவு முழுவதும் கதிரைகளில் அமர்ந்தவாறும் ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்கள் என உறங்கவேண்டிய நிலைமைகள் காணப்…

    • 2 replies
    • 343 views
  10. 31 Jan, 2025 | 09:20 AM (ஆர்.ராம்) நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொகையை முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞான பூர்வமாக உறுதியான விடயமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்-முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இலங்கை மன்றக் கல்லூ…

  11. 31 JAN, 2025 | 11:12 AM (எம்.நியூட்டன்) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைமையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது. மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/205399

  12. 31 JAN, 2025 | 03:42 PM (எம்.மனோசித்ரா) பங்களாதேஷ் கடற்படையின் பி.என்.எஸ். சொமுத்ரா ரோய் போர் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நாட்டை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 115.2 மீற்றர் நீளமுடையதாகும். 274 பணியாட்களைக் கொண்ட இக்கப்பலின் கப்டனாக சஹ்ரியார் அலாம் செயற்படுகின்றார். இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளன…

  13. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரதிவாதியாக பெயரிடுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐவரடங்கிய குழுவின் உறுப்பினர் அமல் ரணராஜா நேற்று விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்படி, புதிய பெஞ்ச் ஒன்றை பெயரிடுவதற்கான உரிய மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்…

  14. 31 Jan, 2025 | 09:59 AM சமூக ஊடகங்கள் பாவனை சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் வைத்திய கலாநிதி கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி கடந்த ஆண்டில் 270 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உயிர்மாய்ப்புக்களை தடுக்க எடுக்க வேண்டிய…

  15. 31 Jan, 2025 | 02:05 PM யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. எனவே, இந்த ரயில் கடவை…

  16. Published By: Digital Desk 7 31 Jan, 2025 | 03:44 PM யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும் அரசியல்வாதி போல ஜனாதிபதியும் நடந்து கொண்டுள்ளமை எமக்கு வேதனை அளிக்கிறது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் கொண்டிருந்தார். அதன் போது , யாழ் . மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்காக வருகை தந்த போது , மாவட்ட செயலகத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகள் , வேலை கோரி கவனயீர்ப்பு ப…

  17. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்! புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்து 45,549 பேரின் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலைய…

  18. சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாத…

  19. மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார். அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குற…

    • 1 reply
    • 172 views
  20. யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையின…

  21. 29 Jan, 2025 | 10:48 AM இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கட…

  22. திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில்(Mrs. world) இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளதுடன் தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டதுடன் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419150

  23. அரசியலமைப்பு திருத்தம் இன்றி முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அனைத்தும் நீக்கப்படும் அரசியலமைப்பு திருத்தம் இன்றி, முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களையும் குறைக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்தது. இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்பட்டது. கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்…

  24. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவருக்கு விடுதலை Vhg ஜனவரி 31, 2025 ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற மாவீரர் குடும்ப உறவுகள் கௌரவிப்பு நிகழ்வினை மேற்கொண்டிருந்த போது பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகாக்கூறி இவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மட…

  25. கோட்டை- காங்கேசன்துறை தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம்! கொழும்பு - கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை 4.35 மணியளவில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.40 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/கோட்டை-_காங்கேசன்துறை_தபால்_ரயில்சேவைகள்_இன்றுமுதல்_ஆரம்பம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.