Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன் ரூபாவாக உள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பங்குச் சந்தையில் நிதியத்தால் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த கொள்முதல் செலவு 88.67 ரூபாவாகும், மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகளிலிருந்து ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டிய மொத்த இலாபம் 21.01 பில்லியன் ரூபாவாகும். 2024 ஜூன் 30 ஆம் திகதிக்கு, கொழும்பு பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியம் செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 110.03 பில்லியன் ரூபாவாகும். தற்போது, ஊழியர் சேமலாப நிதியம் பங்குச் சந்தையில் முதலீடு…

  2. கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன 07 Jan, 2025 | 01:04 PM கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த UL-174 …

  3. தொல்லியல் திணைக்களத்தால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையே நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலே தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமன்றி. அரசினது அங்கங்களானபல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்த…

  4. இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்! நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்க நடத்தினார். இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட…

  5. 2025ஆம் ஆண்டில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடு 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச செலவுகள் குறித்து இதில் கணிப்பிடப்பட்டுள்ளதுடன், மொத்த செலவு 4,691 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார …

  6. அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும் adminJanuary 10, 2025 “அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க மண்டபத்தில் “அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வடகிழக்கு மாகாண விவசாய மேம்பாட்டு கழக உறுப்பினர் தனபாலசிங்கம் துளசிராம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதன் போது, அரிசியின் அரசியலை…

  7. தென்னன்மரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை adminJanuary 10, 2025 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால் Adaptation Fund நிதி உதவியுடன் சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புகள் ஊடாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம் மற்றும் கால நிலை மாறுபாட்டை தாங்கும் தன்மை எனும் தலைப்பில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நீண்ட காலமாக புரனமைக்காது காண…

  8. 09 JAN, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏழ்மை நிலையில் உள்ளவர…

  9. 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படும்-வடக்கு மாகாண ஆளுநர்! அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு மாகாண …

  10. 09 Jan, 2025 | 06:47 PM யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர். கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (8) சாவகச்ச…

    • 1 reply
    • 179 views
  11. முன்னாள் எம்.பி.யும் கொலைக் குற்றவாளியுமான துமிந்த சில்வாவின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பேசிய ஜெயசிங்க, “டிவி சேனல்களுக்கு நாங்கள் பயப்படவில்லை, தம்பியை விடுவிக்க மாட்டோம்” என்றார். குறித்த தொலைக்காட்சி சனலை நேரடியாகப் பெயரிட்டுக் கூறாத அதே வேளையில், அதன் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட ஜெயசிங்க, இது நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு …

  12. வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத் தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்துள்ளதுடன் தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்ததுடன் அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பியுள்…

  13. 09 Jan, 2025 | 03:28 PM யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளா…

    • 2 replies
    • 353 views
  14. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். அதேப…

  15. பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு January 9, 2025 11:07 am அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார். வல்லைப் பகுதியில் நேற்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யா/ நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வேளை வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் மந்திகை…

  16. Published By: VISHNU 08 JAN, 2025 | 09:23 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடு…

  17. வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை! வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவை ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறித்த மிதவை கடலில் மிதந்துவருவதை அவதானித்திருந்தனர் சிவப்பு நிறமுடைய கூம்பு வடிவிலான மிதவை ஒன்று கரையொதுங்கி இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.[ஒ] வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!

    • 1 reply
    • 228 views
  18. சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்றிரவு (08) மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுடன் இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது. https://athavannews.com/2025/1415842

  19. 09 JAN, 2025 | 03:24 PM இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து …

  20. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது என்று அவர் தெரிவித்தார். “முறையான தரநிலைகள் இல்லாமல்…

  21. இன்று வரை எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழக்கப்படவில்லை என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ( Ramanathan Archchuna) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (07) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் தனக்கு சரியான பதிலை வழங்குமாறும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயக்கர், இது தொடர்பில் பதில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மற்றும் இது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/tod…

      • Haha
      • Thanks
      • Like
    • 18 replies
    • 884 views
  22. வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1415833

  23. முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் படுகாயம் January 9, 2025 முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை (08) மாலை நடைபெற்றுள்ளது.ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக…

  24. வடக்கிற்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த வேண்டும்-கஜேந்திரகுமார்! வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களில் வடக்கு மாகாணத்துக்கான புகையிரதங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட…

  25. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்! புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.