Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு அஞ்சலி Published By: VISHNU 08 JAN, 2025 | 08:30 PM சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், புதன்கிழமை (8) பொரளை பொதுமயானத்திலுள்ள அவரது கல்லறைக்கு முன்பாக அவரின் குடும்பத்தார், நண்பர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது.... (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/203350 …

  2. Published By: VISHNU 08 JAN, 2025 | 08:45 PM வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். இதன் போது டால் பின்கள் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் இறந்த டால்பின்களை மீட்டு பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (7) சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி அ…

  3. இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்! இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள்…

      • Haha
      • Like
    • 2 replies
    • 316 views
  4. 77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு! 77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இந்த ஆண்டு இடம்பெறாது எனவும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் அம…

      • Haha
    • 4 replies
    • 330 views
  5. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்! புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் …

  6. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை 25 ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு மாநாட்டின் தொனிப்பொருளை சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புக்க…

    • 1 reply
    • 213 views
  7. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி! இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், வருகைக்கான குறிப்பிட்ட திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை. இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. அநுரகுமாரவின் இந்தியப் பயணம், பதவியேற்ற பின்னர் அவரது முதல் சர்வதேச விஜயமாக அமைந்தது. அநுரகுமாவரின் தெரிவைத் தொடர்ந்து…

  8. பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் – தனியார் பஸ் உரிமையாளர்கள்! பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கபடவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1415640

    • 3 replies
    • 300 views
  9. Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் விவாதம்! Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1415662

    • 1 reply
    • 169 views
  10. போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் ; எஸ்.எம். மரிக்கார் 08 Jan, 2025 | 12:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருள் மீதான 50 ரூபா வரியை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எரிபொருள் இறக்குமதி தரகுப்பணம் இன்றும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கா செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்ற…

  11. பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் தண்டம் adminJanuary 7, 2025 கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த, திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டன. குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றி…

  12. மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்! மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர…

      • Haha
      • Like
    • 9 replies
    • 466 views
  13. 07 JAN, 2025 | 03:18 PM இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலை…

  14. 07 JAN, 2025 | 05:08 PM நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)' மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகள் அடங்கிய நன்கொடை செவ்வாய்க்கிழமை (07) பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொக்கினால் (Qi Zenhong) குறித்த பாடசாலை பைகள் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவிடம் நன்கொடையின் அடையாளமாகக் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள…

  15. ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 7 ஜனவரி 2025, 06:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர் தேங்காய், அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்…

      • Thanks
      • Haha
      • Like
    • 6 replies
    • 526 views
  16. இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கையர்கள் தம்மை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர். இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை …

    • 1 reply
    • 162 views
  17. Published By: Digital Desk 2 07 Jan, 2025 | 04:51 PM (நமது நிருபர்) வருடமொன்றில் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அதனால் நாட்டின் கையிருப்புக்கோ அல்லது கடன் மீள்செலுத்துகைக்கோ பாதிப்பு ஏற்படாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்த வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும், கடந்த காலங்களைப்போன்று மிகையான பற்றாக்குறையைத் தோற்றுவிக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். …

  18. தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே – சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு இலங்கை அனுமதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தீர்மானத்தில் சட்ட ரீதியான சீனாவாக சீன மக்கள் குடியரசை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் என்பதை இலங்கை அதன் வெளிவிவகார கொள்கையில் கடைப்பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் பேணப்படும் என்றும் குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தைவான் முழுமையாக சீனாவுக்குச் சொந்தம…

  19. 12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வெளியானது அறிவிப்பு January 7, 2025 2:12 pm 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் கோரியுள்ளது. இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்துள்ள போதிலும், பல வேட்பாளர்கள் இன்னும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. காலக்கெடுவைக் கடைப்பிடிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த…

  20. 07 JAN, 2025 | 11:09 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப்பொறிமுறையொன்றை நிறுவுவதாகத் தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என விசனம் வெளியிட்டார். நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல…

  21. Published By: DIGITAL DESK 2 07 JAN, 2025 | 11:06 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இதன் ஆரம்பகட்டமாக 7 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக வெளிநாட்டுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அந்த நாடுகளில் அமைந்திருக்கும் தூதரகங்கள் ஊடாக தா…

  22. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார். நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பா…

  23. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் சட்டவிரோதமான முறையிலும், வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு மேலதிகமாகவும் சுண்ணக்கல் அகழ்வுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், சுண்ணக்கல் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை அடுத்து, சுண்ணக்கற்களை உரிய அனுமதிகளுடனேயே எடுத்து செல்வதாகவும், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக சுண்ணக்கல் வர்த்தகத்தில் தாம் ஈடுபட்டு வருவதாகவும்…

  24. யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னர் அங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் திடீரென அகற்றப்பட்ட அந்த சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில…

  25. Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 10:22 AM வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.