ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த எம்-17 ஹெலிகொப்டர் காலி - பெத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைனெவும், ஹெலிகொப்டர் முற்றாக சேதடைந்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/20430
-
- 11 replies
- 944 views
-
-
அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் – சீ.வீ.கே அரசியல் தலைமைகளின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள் அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும் என மக்களுக்கு தெரியும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞாணம் தெரிவித்தார். சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வீரசிங்கம் மண்டப முதலாம் மாடியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாற…
-
- 7 replies
- 862 views
-
-
கிளிநொச்சியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களில், பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டம் 100ஆவது நாளாக இன்று இடம்பெறுகின்றது. இந்நிலையிலேயே இவ்வாறு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாலாம் எனக் கருதியே இவ்வாறு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/வன்னி/கிளிந…
-
- 4 replies
- 466 views
-
-
இரணைதீவு மக்களை நோக்கி கடற்படையினர் ஆபாச சைகை காட்டி மிரட்டினாரா ? கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரணைதீவு மக்கள் தங்கள் பூர்வீக நிலைத்தினை தம்மிடமே மீள கையளிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கடற்படையினர் எடுத்து வருவதாகவும் மக்களை நோக்கி கைகள் மூலம் ஆபாச சைகைகளை காட்டி அச்சுறுத்தி இருந்தனர் எனவும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் ‘ கடற்படையினர் புகைப்படம் எடு…
-
- 0 replies
- 299 views
-
-
முன்னாள் எம்.பி விநாயகமூர்த்தி உயிரிழப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள், கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது. http://uthayandaily.com/story/4380.html முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி அவர்கள் இன்று இயற்கை எய்தினார் முன்னாள் யாழ்மாவட்ட …
-
- 4 replies
- 628 views
-
-
மழையுடன் கூடிய காலநிலை செப்டெம்பர் வரை தொடரும் ; சூறாவளி வராது என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம் தற்போது நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் நீடிக்கும் சாத்தியம் உள்ளது. அதனால் இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. அதேநேரம் வங்களா விரிகுடாவில் மையம் கொண்டிருந்த உயர் அழுத்த காற்று இலங்கைக்கு அப்பால் பயணிப்பதால் சூறாவளி காற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாது போயுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் அதிகாரி அதுல கருணாரத்ன தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத…
-
- 0 replies
- 155 views
-
-
ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்: இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள சிங்கப்பூர் தற்போதைய இயற்கை அனர்த்த சூழ்நிலையில் இலங்கைக்குக் கைகொடுக்கும் வகையில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை சிங்கப்பூர் உதவியாக வழங்கவுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி வ…
-
- 2 replies
- 415 views
-
-
உயிரிழந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி -எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தென்னிலங்கையில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாவட்டத்தின் 2017ஆம் ஆண்டின் இரண்டாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறுகின்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், தென்னிலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மூத்த நாடாளுமன…
-
- 0 replies
- 224 views
-
-
சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 149 views
-
-
கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் முக்கிய தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒரு ங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நகர திட்டமிடல் பற்றி கூட்டத்தில் விளக்க மளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருக்கின்ற இராணுவ நினைவுச் சின்னம் யாருக்காக இருக்கிறது? டிப்போச் சந்தியில் இருக்கின்ற செங்கல் சுவர்கள் எப்போது அமைக்கப்பட்டது? எங்கிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டது? 2009 இற்கு முன் நாங்கள் இடம்பெயர்ந்…
-
- 1 reply
- 418 views
-
-
மோரா என்ற சுறாவளிக் காற்று இலங்கையை கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்களா விரிகுடாவில் இந்த சுறாவளிக் காற்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையை அண்டிய பகுதிகளில் மையம் கொண்டிருந்த சுறாவளிக் காற்று தற்போது பங்களாதேஸ் நோக்கி நகர்ந்துள்ளதாகவும் எனினும், இலங்கையில் தொடர்ந்தும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் காற்றின் சீற்றம் அதிகளவில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/archives/28398
-
- 0 replies
- 624 views
-
-
உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்தப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘Unitary…
-
- 0 replies
- 354 views
-
-
180 பேர் உயிரிழப்பு 110 பேரைக்காணவில்லை ஐந்தரை இலட்சம் பேர் பாதிப்பு 76 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிப்பு வெள்ள நீர் வழிந்தோட ஆரம்பம் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (ஆர்.யசி,எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் தொடரும் மோசமான காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் அனர்த்தங்களில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 303 குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 18,845 குடும்பங்களை சேர…
-
- 0 replies
- 779 views
-
-
வவுனியாவில் வாள் ஒன்றுடன் நான்கு பேர் கைது! வவுனியாவில் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையி் போது 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது 15 பேரடங்கிய குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் பொலிஸாரின் விசாரணைகள் பக்கசார்பாக இடம்பெற்று வருவதாக எண்ணிய பாதிக்கப்பட்டவர்கள் நேற்று இரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வவுனியா பொலிஸாரின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லை. அவர்கள் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என தெரிவித்து பிறிதொரு முறைப்பாடு மேற்கொள்ளப்ப…
-
- 0 replies
- 225 views
-
-
நாவற்குழியின் பெயரை சாந்திபுரமாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு! யாழ்ப்பாண மாவட்டம், நாவற்குழிக் கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என மாற்றுவதற்கு அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவ்வூடகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாக நாவற்குழி உள்ளது. இக்கிராமத்தில் பௌத்த விகாரையொன்றும் உள்ளது. அங்கிருக்கும் பௌத்த விகாரைக்கும் அக்கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் பாதுகாப்பாக அங்கு ஒரு இராணுவ முகாமும் உண்டு. அத்துடன், அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாட்டில் ஒன்றாக இக்கிராமத்துக்கு சாந்திபுரம் என பெ…
-
- 0 replies
- 351 views
-
-
வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைக்கப்படவுள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் இன்று முற்பகல் நடப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.எம்.ஹரிஸ், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கல்வி அமைச்சர் த.குரகுலராசா உள்ளிட்ட விருந்தினர்கள் அடிக்கல் நட்டனர். http://uthayandaily.com/story/4152.html
-
- 8 replies
- 840 views
-
-
தென்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 119 பேர் இறந்து போயுள்ள தான செய்தி மிகுந்த வேதனைக்குரியது இதேவேளை சுமார் 150 பேர் வரை காணாமல்போயுள்ளதுடன் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தவண்ணமுள்ளன. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பொருட்டு இந்திய மத்திய அரசு அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு அவசர அவசரமாக நிவாரணப் பொருட்களை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளார். உண்மையில் இந்தியாவின் இந்த உதவி காலத்தால் செய்யப்பட்ட பேருதவி. இதற்காக இந்தியாவுக்கும் பிரதம…
-
- 10 replies
- 1.2k views
-
-
வெள்ளத்தை பார்வையிடச் சென்ற 18 பேர் பலி ; அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அநாவசியமான பயணங்களை மேற்கொண்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி…
-
- 0 replies
- 150 views
-
-
நீதிமன்ற அவமதிப்பு: பட்டதாரிகளுக்குப் பிணை திருகோணமலையில் நடைபெற்ற வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்றக் கட்டளையைக் கிழித்து எறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் சார்பில், நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய எம்.ஏ.சுமந்திரன், இவ்வழக்குத் தொடர்பில் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில், “நீதிமன்றுக்கு வெளியில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்விக்குட்படுத்தும் நியாயாதிக்கம், நீதவான் நீதிமன்றுக்கு இல்லை. இதனடிப்படையில், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யவேண்டுமென மன்றில் கோரியிருந்தோம். …
-
- 0 replies
- 172 views
-
-
‘நான்தான் உண்மையான இலங்கைப் பற்றாளன்’ 1 ‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒர…
-
- 0 replies
- 330 views
-
-
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். தற்போது முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவது மாத்திரமே எனத் தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச தூதுவராலய உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் தமது பிரச்சினைகளை முஸ்லிம்கள் முன்வைக்க முடியும் எனவும் கூறினார். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும்; செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரபு லீக் ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். காத்தான்க…
-
- 3 replies
- 540 views
-
-
1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர். யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த…
-
- 23 replies
- 794 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கைகொடுக்க மூன்று பிரதான நாடுகள் தயார் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு முகங்கொடுக்க இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு உலகின் பிரதான மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்க முன்வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நிதியமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கைக்கு-கைகொடுக்க-மூன்று-பிரதான-நாடுகள்-தயார்/175-197587
-
- 4 replies
- 574 views
-
-
விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியில் தோற்றதாலேயே போராட்டம் தோல்வியடைந்தது – மாவை! இராஜதந்திர ரீதியாக ஜ.நா சபையில் உலகநாடுகளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை நாம் ஏற்கவேண்டும் . இல்லாவிட்டால் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் போரியல் ரீதியில் பல வெற்றிகளை பெற்றாலும் இராஜதந்திர ரீதியில் வெற்றிபெறாததாலேயே இறுதியில் தோல்வியை சந்தித்தனர் என இலங்கை தமிழர் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்குதல், ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி…
-
- 3 replies
- 464 views
-
-
பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் என்று பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பா.ஜ.க. வின் 3 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இறுதி வரை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட விடாமல் அவர் மரணம் அடைவதற்கு தமிழகத்தை சேர்ந்த வைகோ, சீமான் மற்றும் திருமாவளவன்தான் காரணம். இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேச்சை கேட்பதில்லை, இவர்கள் பேச, பேச இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப்படு…
-
- 1 reply
- 421 views
-