ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
படையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதாக போலியான தகவல்களை மகிந்த அணியினர் பரப்பு வருவதாகவும் இதன் ஊடாக இராணுவத்தை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானமாக செயற்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/19537
-
- 0 replies
- 237 views
-
-
உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறைமை தொடர்பான உத்தேச திட்டம் எதிர்வரும ;இரண்டு மாதங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிவழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில்; உருவாக்கப்படவுள்ள பல்வேறு பொறிமுறைகளில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடுகளை அறிந்;து, இந்த பொறிமுறை உருவாக…
-
- 0 replies
- 264 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை எனவும் சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவை போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் இல்லை என்று குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 260 views
-
-
ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு வர உள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கு வர உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச் செயலாளரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பொதுசெயலாளர் குட்டாரெஸ், விரைவில் இலங்கை வருவதாக உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் இதுவரையில் இலங்கை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/19547
-
- 0 replies
- 323 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவே ற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்க வில்லை. 2015 ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றும் போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 18 தொடக்கம் 24 மாத கால அவகாசத்தை கோருவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், மேலதிக காலஅவகாசம் வழங…
-
- 0 replies
- 345 views
-
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் மீதான படுகொலை வழக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளி இவரே என ஒருவரை குறித்து அவர் தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் ஊடகவியலாளர்கள் சிலருக்கு இனந்தெரியாத ஒருவரால் அனுப்பப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் இடத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாத சிலரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்…
-
- 0 replies
- 496 views
-
-
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக நாம் இணைந்து கொண்டு சுமார் ஒரு வருடங்களுக்கு மேற்பட்டுள்ள அல்லது 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று நான் உரையாற்றுகிறேன். சிலர் எமது அந்த செயற்பாட்டை நாட்டுக்கு செய்த காட்டிக் கொடுத்தல் மற்றும் துரோகமாக விமர்சித்து வருகின்றனர்.…
-
- 0 replies
- 354 views
-
-
நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று, ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் முலம், கலகோட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி கோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திசநாயக்க புகாரொன்றை சமர்பித்திருந்தார். இதன்படி சட்lடமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்தி ரிக்கை வாசிக்கப்பட…
-
- 0 replies
- 321 views
-
-
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் குறித்த ஏழரை ஏக்கர் காணிக்குள் தங்களை விடும் பட்சத்திலேயே போராட்டத்தைக் கைவிடுவோம் என புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் ஆகியோர் புதுக்குடியிருப்பில் கடந்த 26 ஆவது நாளாக நிலமீட்புக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இன்று சந்தித்தனர். இதன்போது, முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரியினால் மாவட்ட அரசாங்க அதிகாரிக்கு…
-
- 0 replies
- 380 views
-
-
நலமுடன் உள்ளதாக வடக்கு முதல்வர் அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலை யில் தற்போது நலமாக இருப்பதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது தான் நலமாக இருப்பதாகவும், சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதா கவும் வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும், தனது வேலைகளை இப்போது தாமே செய்துவருவதாகவும் கூறியுள்ளார். முதல்வரின் உடல்நலம் குறித்து நேற்று சிங்கள ஊடகம் ஒன்று தவறான செய்தியை பிரசுரித்திரு…
-
- 1 reply
- 300 views
-
-
களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர். களுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வெள்ளை நிற வேன் ஒன்று, ஹொரணை - மொரகஹாஹென பகுதியில் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது. குறித்த வேன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானைப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட வேன் என்பதோடு குறித்த வேன் திருகோணமலையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (2…
-
- 0 replies
- 264 views
-
-
ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினா். 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார். முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடி …
-
- 51 replies
- 5.2k views
- 2 followers
-
-
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நிறுதிட்டமாகக் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்று முன்பும் ஒருதடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அவரின் இக்கருத்து இலங்கையின் ஆட்சிப் பீடத்துக்கு ஏதும் புதிதானதல்ல. தேர்தல் காலத்தில் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் ஆட்சி பீடமேறியதும் பன்றியோடு சேர்ந்த பசுக்களாக மாறிவிடுவர். அந்த வழமைக்கு ஜனாதிபதி மைத்திரியும் விதிவிலக்கல்ல என்பதை அவர் இப்போது நிரூபித்துள்ளார். போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்று இப்போது கூறுகின்ற ஜனாதிபதி இன்னும் ஒரு வருடம் செல்ல போர்க்குற்ற விசாரçணையே தே…
-
- 0 replies
- 406 views
-
-
ஜெனீவாவில் இன்று மங்கள உரை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று இடம்பெறும் மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளதோடு, எதிர்வரும் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=88544
-
- 4 replies
- 899 views
-
-
மொஹொமட் ஆஸிக் தோட்டத்தில் தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கும் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என கண்டி, உன்னஸ்கிரிய தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர். கண்டி, உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத்தொழிலாளர்களால்,இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டதுடன், உன்னஸ்கிரிய- லூல்வத்தை பாதையை மறித்து ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,800 பேர் இத் தோட்டத்தில வாழ்வதாகவும் இவர்களுக்கு தெரியாமல் தோட்டத்தை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடி…
-
- 0 replies
- 305 views
-
-
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியை தாங்கள் இன்று செவ்வாய் கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநெச்சி நகரின் மத்தியில் 571 படைப்பிரிவின் கீழ் காணப்படுகின்ற குறித்த காணி தங்களின் ஆரம்ப பிரிவு கல்விக்குரிய காணி எனவும் அதனை மீளவும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி மகா வித்தியாலய சமூகம் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்த நிலையில் குறித்த காணியை விடுவிக்கப் ப…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழில் தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா? அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா? பிரதமர் கேள்வி தமிழ் பிள்ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடியமை எந்தளவு முக்கியத்துவம் மிக்கது. இந்நிலையில், தெரிந்த மொழியில் அவர்களுக்கு தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். சுவாஸிலாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடுகளின் முறைமைகளை கைவிட்டு சிங்கப்பூர் முறைமைக்கு வந்ததையிட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறுவேன். சிங்கப்பூரில் இருந்து வரும் போது மஹிந்த ராஜபக் ஷ எனது விமானத்தில் வந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணத்தை கேட்டிருப்பேன்.…
-
- 1 reply
- 538 views
-
-
கேப்பாப்புலவு –பிலக்குடியிருப்பில் விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கமைய மக்களின் காணிகள் நாளையதினம் கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலா ளர் சி.குணபாலன் தெரிவித்தார். விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்க ளுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த க…
-
- 0 replies
- 340 views
-
-
மட்டக்களப்பில் 8 வது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் இன்று 10 மணியளவில் சவப்பெட்டியுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளனர் . பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் போராடவுள்ள பட்டதாரிகள், இன்று பேரணியாக சென்று நகரத்தில் உள்ள 3 பாடசாலைகளுக்கு முன்பாக சென்று தங்களது பிரச்சனைகளை வெளிப்படுத்தியதுடன், அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இந்த பட்டதாரிகள் விடயம் தொடர்பாக பல அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிட்டும் இதுவரைக்கும் எந்தவிதமான முடிவும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . http://www.virakesari.lk/article/17164
-
- 1 reply
- 358 views
-
-
ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளன. இந்த தருணத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவி த்திருக்கும் கருத்தானது மிகமிக முட்டாள்தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சும த்தியுள்ளார். கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று (27) மாலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஒட்டும…
-
- 1 reply
- 341 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு கி.தவசீலன்Feb 28, 2017 | 0:25 by in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக காலஅவகாசம் வழங்குமாறு தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கம், கோரிக்கை விடுக்கவுள்ளது. இந்தநிலையில், சிறிலங்கா அரசுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேலதிக காலஅவகாசத்தை வழங்கக் கூடாது என்று கூட்டமைப்பின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிய…
-
- 2 replies
- 193 views
-
-
190 பேருக்கு எதிரான தேசத்துரோக பிரகடனத்தை நீக்க நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி 1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இது சம்மந்தமாக தான் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த மூவினத்தைச் சேர்ந்த 190 பேர் தேசத்து…
-
- 0 replies
- 305 views
-
-
பிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் சம்பந்தனை சந்திப்பு பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் சிறியளவில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த தீர்மான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரினால், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது வழங்கப்பட வேண்டும். ஜெனிவா தீர்மானம் முழு…
-
- 0 replies
- 936 views
-
-
'இலங்கை ஸ்தம்பித்துள்ளது' இலங்கைக்கு நிகரான பல நாடுகள், தற்காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. இருப்பினும், இலங்கை மாத்திரம், ஓரிடத்தில் ஸ்தம்பித்துள்ளது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமை இல்லாமல் போயிருத்தல் மற்றும் கிராமியப் பொருளாதாரம் வளர்ச்சியடையாமை போன்ற சில காரணங்களாலேயே, இலங்கையின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது என்றும், தெரிவித்த பிரதமர், தேசிய ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு, கிராமிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக, நாட்டை அபிவிருத்தி நோக்கிக் கொண்டுசெல்லலாம் என்றும் கூறினார். கிராமியப் பொருளாதார அமைச்சில், நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 549 views
-
-
“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“ நாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக பம்மபலபிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம்பெறவுள்ள விளையாட்டுச் சமர் (பிக் மெச்) கிரிக்டெ் போட்டிகள் மதுபாவனையின்றி நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் மது ஓழிப்பு திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு மேற்படி விளையாட்டுச் சமர் முன்னெடுக்கப்படவுள்ளதாக செயலகம் தெரிவிக்கின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன. இந்த ஊடகவியலாளர் சந்த…
-
- 0 replies
- 295 views
-