ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் adminDecember 24, 2024 யாழ் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாா். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவா் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் , தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால்தான் எலிக்காய்ச்சல…
-
- 2 replies
- 315 views
-
-
வெளிமாவட்டங்களில் பணியாற்றாதவர்களுக்கு விரைவில் இடமாற்றம் adminDecember 24, 2024 ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம், செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். எமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் …
-
- 0 replies
- 146 views
-
-
23 DEC, 2024 | 08:12 PM பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட த…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 209.91 புள்ளிகள் அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்திருப்பதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,020.61 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.44 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314071
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
24 DEC, 2024 | 10:19 AM (நமது நிருபர்) பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய அரசமுறை விஜயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் அவர் இவ்வாறு …
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்! திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன்…
-
-
- 2 replies
- 448 views
-
-
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. 2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும். பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில்…
-
- 0 replies
- 432 views
-
-
23 DEC, 2024 | 04:46 PM வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதி…
-
-
- 23 replies
- 1.3k views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 2 23 DEC, 2024 | 04:39 PM இலங்கையில் 69 தொழில் வல்லுநர்கள் புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை பற்றிய முதலாவது சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளமையை அறிவிப்பதில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஊடாக அமெரிக்கா பெருமை கொள்கிறது. ஆட்கடத்தலுக்கு எதிரக போராடுவதற்கென தமது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு கருவிகளையும் அறிவுகளையும் இந்த தொழில் வல்லுநர்கள் தற்போது கொண்டுள்ளனர். இந்த ஆறு மாத கால கற்கைநெறியானது, USAID இன் 'ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு சிவில் சமூகத்தை வலுவூட்டல்' திட்டம் (Empowering Civil Society to Combat Human Trafficking project – ECCT) மற்றும் இலங்கை திறந்த…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் (Jaffna) சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை. ஆனாலும் அவை மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகவும், உற்பத்திப் பிரதேசங்களை மையமாகவும் கொண்டவை. விவசாயப் பொருட்கள் உற்பத்தி சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் தான் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையமானது, யாழ்ப்பாணம் விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்ப…
-
-
- 106 replies
- 6.1k views
- 2 followers
-
-
ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024 ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி ச…
-
- 1 reply
- 315 views
-
-
மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024 09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக போராட்டத்தில் …
-
- 1 reply
- 308 views
-
-
23 DEC, 2024 | 09:55 AM பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன சாரதிகள் மது போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்…
-
- 1 reply
- 182 views
- 1 follower
-
-
பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில்…
-
-
- 1 reply
- 336 views
-
-
மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த…
-
- 0 replies
- 120 views
-
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண வி…
-
- 0 replies
- 280 views
-
-
தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு! தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் …
-
- 0 replies
- 267 views
-
-
வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின் தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்கு…
-
- 0 replies
- 238 views
-
-
24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை, ஹெட்டிபொல, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் …
-
- 0 replies
- 234 views
-
-
கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு ப…
-
- 0 replies
- 196 views
-
-
22 DEC, 2024 | 09:49 PM இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டார…
-
- 2 replies
- 227 views
- 1 follower
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன. சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம். இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன். மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களு…
-
- 3 replies
- 597 views
- 1 follower
-
-
கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்…
-
-
- 8 replies
- 682 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கான இலங்கை இராஜதந்திரி மீள அழைப்பு 22 Dec, 2024 | 12:16 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை பொறுப்பெடுத்திருந்த ஷேனுகா செனவிரத்ன அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர் கூடிய விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். உலக நாடுகளில் பணிப்புரிகின்ற இலங்கை இராஜதந்திர மையங்களை முழு அளவ…
-
- 0 replies
- 392 views
-