Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்” ; கொழும்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத் தொழிலளார்களின் சம்பளவுயர்வினைக் கோரி கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் “நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்”, “நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தில் தலையிட வேண்டும்”, “மிருகத்தை போல் நடத்தாதே”, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே”, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/12173

    • 3 replies
    • 450 views
  2. யாழ் இந்துவில் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

    • 0 replies
    • 534 views
  3. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்திரிக்கா குமாரதுங்க உட்பட மேலும் 9 அமைச்சர்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கடமை பயணங்களுக்காக விமான படையின் ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர். இதற்கான பணம் இதுவரையிலும் செலுத்தவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் உதய கம்மன்பில வாய்வழி பதில் எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜே…

  4. மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ உட்பட தெற்கிலேயிருப்பவர்கள் எழுக தமிழ்ப் பேரணியையும், முதலமைச்சர் ஆற்றிய உரையையும் ஒரு தீவிரவாதப் போக்குடையதாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள். எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மக்களுடைய அபிலாசைகளாகச் சொல்லப்பட்டவை. அது தொடர்பாக என்ன நிலைப்பாடு? இது தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்கிறதா? அல்லது அது தொடர்பாக வேறு பார்வைகள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் நிமல்கா பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் சொல்லாமல் வடமாகாண முதலமைச்சருடைய பிள்ளைகளை இந்த விடயத்தில் இழுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணாண்டோ போன்றவர்களின் தராதரத்திற்குக் குறை…

  5. அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி -சண்முகம் தவசீலன் சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சனிக்கிழமை 5.30 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனையடுத்து, நாடாளுமன் உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன் லிங்கநாதன், இந்திரராசா ஜெனோபர் உள்ளிட்டவர்களும் ஏராளமான பொதுமக்கனும் அஞ்சலி செலுத்தினார்கள். …

    • 4 replies
    • 575 views
  6. காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் மந்தகதியில்..! காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து காத்திருப்பதாகவும் இதற்கான காத்திரமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத கூட்டத்தொடரின்போது 30.1 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டதன்படி யுத்தத்தினால் காணாமலாக்கபட்ட சொந்தங்களுக்கு நீதி கிடைக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட வேண்டிய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திருந்தது. இதனடிப்படையில் 199…

  7.  1,000 ரூபாயை ஏன் கொடுக்க முடியாது? : சி.வி 'சாதாரண கூலி வேலைக்கான குறைந்தபட்ச வேதனமாக 1,000 ரூபாய் இந்நாளில் வழங்கப்படும் நிலையில், எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வேதனம் ஏன் வழங்க முடியாது?' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மேற்படி தமது சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையகத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து கொண்டு கடந்த 12 தினங்களாக தொட…

    • 1 reply
    • 479 views
  8. யாழில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதிலும் , தொடரும் தாக்குதல் சம்பவங்கள்: யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையிலும், இரவு வேளைகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களாக ஆயுதம் தாங்கிய பொலிசார் உட்பட சுமார் பத்து பொலிசார் அடங்கிய பொலிஸ் குழுக்கள் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய சந்திகளில் நிற்கும் இந்த பொலிஸ் குழுக்கள் வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் , என்பவற்றை மறித்து வாகனங்களை பரிசோதனை செய்வதுடன், ஆவணங்களையும் பரிசோதனை செய்கின்றனர். …

    • 2 replies
    • 275 views
  9. 'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' -சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன் இசைநிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் 'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' என்பதை நினைவிற் கொள்ளுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொள்ளும் 'நண்பேன்டா' இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு 200, 1,000, 5,000 ரூபாய் பெறுமதியில் நுழைவுச் சீட்ட…

  10. அதிபர் நியமனத்தில் முறைகேடு எனத் தெரிவித்து போராட்டம் வடக்கு மாகாணத்தில் அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தி பெற்ற ஒருதொகுதி அதிபர்களின் நியமனம் முறைகேடானது எனத் தெரிவித்து சித்தி பெற்றும் நியமனம் வழங்கப்படாத அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் சித்திபெற்ற அதிபர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், போட்டிப் பரீட்சைகளில் 398 அதிபர்கள் சித்தியடைந்திருந்தோம். அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டு ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வா…

  11. தெற்கில் சிறுவர்களுக்கான புற்றுநோய் வைத்திய சாலை கட்ட வடக்கில் இருந்து நடைபயணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி நாளை வியாழக்கிழமை வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ் நடைபவனியில் கலந்து கொண்டு நிதி திரட்டுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியிய் முன்னாள் தலைவர்கள் குமார் சங்ககார, மகேலஜேயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயற்சி ஒட்டாரா டி ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர். சுமார் …

  12. வடக்கைப்போன்று கிழக்கிலும் காணிகளை விடுவியுங்கள்-அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை யாழ்ப்பாணம், வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் வேகத்தில் கிழக்கிலும் படையினர் கையப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள விவசாய காணிகளை வனவள பரிபாலன திணைக்களம் கையகப்படுத்தி வருவதாக கூறிய அவர், சிங்களப் பகுதியில் ஒரு சட்டமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் பிறிதொரு சட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கல…

  13. நீர்வேலி விவகாரம்: வளர்ப்புத் தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி காலை, முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொ…

  14. திருமலையை விட மறுக்கும் இந்தியா! திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இந்தியாவின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது, இலங்கையில் பெற்றோலிய மற்றும் எரிவாயுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் சார்பில் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருகோணமலையில் உள்ள உயர்நிலை எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவ…

  15. உளவு பார்ப்பதற்காக தமிழக மீனவர்கள் வடிவில் இலங்கைக்குள் புகும் இந்திய இராணுவம் : கைதான ஒருவர் நடுக்கடலில் இரகசியமாக விடுதலை : உளவு பிரிவு அதிர்ச்சி தகவல் எல்லைத் தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுறுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்கள் வீரகேகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தன. இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதி ஊடாக இவ்வாறு இந்திய இராணுவ வீரர் ஒருவர் இலங்கை எல்லைக்குள் ஊடுறுவ முற்படும் போது ரோந்துச் சென்ற கடற்படையினரால் கைது ச…

    • 1 reply
    • 413 views
  16.  நல்லிணக்கம்... எஸ்.கர்ணன் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டிலான பருத்தித்துறையிலிருந்து தெற்குக்கு நடை பயணத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கையின் தேசியக் கொடியை அசைத்து, நேற்று ஆரம்பித்து வைத்தார். காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நிதி சேரிப்பதற்காக இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது. இந்த நடைபவனி பருத்தித்துறை முனையில் இருந்து இன்று ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மதத்தலைவர்கள் ஆகி…

  17. யாழில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் மறுப்பு -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் பிரம்படி 2 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார். மேற்படி பகுதியில் புதன்கிழமை (05) மாலை நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலையில் அப்பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று நடந்துள்ளது. காலையில் பார்த்த போது, பொலிஸார் தேடி வந்ததாக கூறப்படும் சந்தேகநபரின் வீட்டின் மதில் சுவரில் துப்பாக்…

  18. குப்பி விளக்கு ஒளியிலேயே நான் பாடங்களைப் படித்தேன் : ஜனா­தி­பதி நான் எனது கிராமப் பாட­சா­லை­யி­லேயே பயின் ேறன். எனது வீட்டில் மின்­சாரம் இல்லை. குப்பி விளக்­கொ­ளி­யி­லேயே நான் பாடங்­களைப் படிப்பேன். அரைக்­காற்­சட்டை, செருப்­பு­டன்தான் பாட­சாலை செல்வேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சர்­வ­தேச ஆசி­ரியர் தினத்தை முன்­னிட்டு நேற்று முன்­தினம் கொழும்பு தாமரைத் தடாக மண்­ட­பத்தில் நடை­பெற்ற "குரு பிர­தீபா பிரபா "விருது வழங்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில், எமது நாட்டு கல்­வித்­த…

  19. விஷ ஊசி தொடர்பில் 146 முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை விஷ ஊசி விவ­காரம் தொடர்பில் ஐந்­தா­வது வார­மா­கவும் இடம்­பெற்ற முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மருத்­துவ பரி­சோ­த­னையில் இது­வரை 146 பேர் மருத்­துவ பரி­சோ­த­னையை மேற்­கொண்­டுள்­ள­தாக வட­மா­காண சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. விஷ ஊசி தொடர்பில் வட­மா­காண சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ஆம் திக­தியும், இரண்டாம் வாரம் 9 ஆம் திக­தியும், மூன்றாம் வாரம் 15ஆம், 16 ஆம் திக­தியும், நான்காம் வாரம் 23 ஆம் திக­தியும், ஐந்தாம் வாரம் 30 ஆம் திக­தியும் புனர்­வாழ்வு பெற்று விடு­த­லை­யான முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மருத்­துவ பரி­சோ­த­னைகள் வட­மா­காண வ…

  20. சம்பூரில் இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் - அரசாங்கம் சம்பூரில் இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக அனல் மின்சார மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்தில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூழல் தொடர்பான கோரிக்கைகளினால் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் அந்த இடத்திலேயே இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்கவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பெ…

  21. இலங்கைச் சிறுமி ஒருவரை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு சிங்கப்பூரில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதான குறித்த இலங்கைச் சிறுமி வீட்டின் குடும்பச் சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடன்களை செலுத்துவதற்காக இந்தச் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட இணங்கியுள்ளார். எனினும் அவர் கடந்த ஆண்டு மே மாதம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவருக்கும், மூன்று மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136736/language/ta-IN/article.aspx

    • 0 replies
    • 382 views
  22. நல்லாட்சி அரசாங்கத்தில் பொது மக்களின் காணிகளை படையினர் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. யாழ்ப்பாணம், வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் வேகத்தில் கிழக்கிலும் படையினர் கையப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள விவசாய காணிகளை வனவள பரிபாலன திணைக்களம் கையகப்படுத்தி வருவதாக கூறிய அவர், சிங்களப் பகுதியில் ஒரு சட்டமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் பிறிதொரு சட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரைய…

    • 1 reply
    • 255 views
  23. இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு செயல்திறனான தீர்வுக்காணும் வகையில் இலங்கை இந்திய அதிகாரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு, புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் மீனவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 2017 ஆம் ஆண்டு வெசாக் தினக்கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக பங்கேற்கவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு இந்திய பிரதமர் மோடி, உடனடியாக பதில் வழங்கவில்லை. இதற்கிடையில் இலங்கையில் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்திய இலங்கை பொரு…

  24. வட மாகாண அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது வட மாகாண அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரையில் 435 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலங்கள் அமைத்தல், படகு தயாரிப்பு, மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தல், வீதிப் புனரமைப்பு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். http:…

  25. இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கையின் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை பிரனாப் முகர்ஜியை சந்தித்தபோது மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை பிரனாப் முகஜியிடனம் தெரிவித்துள்ளார் இதன்போதே பிரனாப் முகர்ஜி, அழைப்புக்கு மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், இலங்கை ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் சிறந்த நண்பர் என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/120155?ref=youmaylike1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.