Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர் இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே மக்களும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின் மக்களும் முழுமையாக உணரவில்லை, இதன் காரணமாகவே அந்த நாடுகளில் இருந்து முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. மூன்று தசாப்தபால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என அவர்கள் கரு…

    • 0 replies
    • 201 views
  2. 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத் திட்டத்தை திட்டத்தை பிரதமர் வெளியிடவுள்ளார் இலங்கையை அபிவிருத்திசெய்வதற்கான தேசிய அரசின் 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் வெளியிடவுள்ளார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளியன்று நாடு திரும்பவுள்ளார். அதன்பின்னர், 1500 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் பலதரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வறுமை ஒழிப்பு…

    • 0 replies
    • 238 views
  3. புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் “புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்.அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பாதுகாக்கப்படும்.புதிய அரசியலமைப்பை உருவாக்குவற்கான நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் முக்கியத்துவம் இழக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்காது என்று என்னால் உறுதியாக கூற முடியும்.புதிய அரசியலமைப்பு இன்னமும் கலந்துர…

    • 1 reply
    • 307 views
  4. மஹிந்தவின் பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது – ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுடன் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, அதற்கு முன்னர் பதவி வகித்த ஜனாதிபதியின் பெயர் பலகைகளை அகற்றி தமது பெயரை சூட்டிக்கொண்டதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பெயர் பொறிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரைத் தடாக அரங்கு பெயர்ப் பலகையை மஹிந்த அழித்…

    • 0 replies
    • 220 views
  5. மிஹின் லங்கா விமான சேவை இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இடம்பெறாதென மிஹின் லங்கா விமான சேவை அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் தமது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளுமெனவும் மிஹின் லங்கா விமான சேவை மேலும் அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/12028

    • 0 replies
    • 428 views
  6. கடந்தகால யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைத்து வேதனையுடன் காலத்தை கழிக்கும் தங்களு க்கு,மன ஆதங்கத்தைக்கூட வெளிப்படையாகக் கூறமுடியாமல் அச்சத்துடனும் மன அழுத்தத்துடனும் வாழ்ந்து வருவதாக காணா மல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஆயித்தியமலையில் சிரேஷ்ட நிபுணத்துவ உளநல மருத்துவர் ரீ.கடம்பநாதன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரில் தங்கி வாழ்ந்த உறவினர்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளே இவ்வாறு தமது நிலையை வெளிப்படுத்தினர். காணாமல் போன தமது கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நெற்றியில் பொட்டோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்த கணவனை தொலைத்த பெண்கள், நெ…

    • 0 replies
    • 498 views
  7. இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் ஏல விற்பனையாளர்கள் என்றே கூறமுடியும் என ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மைத்திரி - ரணிலின் அரசாங்கம் தவறான பொருளாதார கொள்கைகளுக்கே இட்டுச் செல்கி ன்றது என்றும் இந்த நிலையில் எந்த தாமதமும் இன்றி விரைவில் அரசைமாற்றவேண்டும் என்றும் அனுர கூறியுள்ளார். இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையை விற்பனை செய்வதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையில் 10 ஆயிரம் மெட்…

    • 0 replies
    • 239 views
  8. முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த செயற்திட்டங்களின் பெயர்ப்பலகைகளை அகற்றி அவ ற்றை மீள திறந்துவைப்பது தமது கொள்கை அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, திம்புலாகல, நுவரகல, சுகலாதேவிகம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறி யுள்ளார். தற்போதைய அரசாங்கம் புதிதாக எதனையும் செய்யாது தனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைத்து மக்களை ஏமாற்றி வருவ தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரி…

    • 0 replies
    • 232 views
  9. இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட இளம் பொறியியலாளர் பலி கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் கணகராசா கோபிநாத் 25 வயது என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 03.10.2016 இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …

    • 3 replies
    • 472 views
  10. இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது- ‘எழுக தமிழ்’ பேரணி சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான செய்தியைச் செல்லியுள்ளது:- எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின் தீர்வொன்றை வழங்குங்கள் எனக் கூறி பேரணி நடத்துவதற்கு எமக்கு உரிமை இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பினார். வடக்கில் சிங்களவர்களை குடியேறவேண்டாம் என நாம் கூற…

  11. இனங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் எனும், நிலைமையை பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால், மாத்திரமே, அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த சுவிட்ஸர்லாந்து நாட்டு நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகா வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

    • 0 replies
    • 364 views
  12. ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளை விரைவில் கூண்டில் ஏற்றுவோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இளைஞர்களே எழுந்து வாருங்கள், தலைமை தாங்குங்கள், தாய் பூமியை, தாய் நாட்டை, தாய் மொழியை, தாய் இனத்தை காப்பாற்றுவோமானால் அத்தகைய இளைஞர்களுக்கு நாம் உரிய இடத்தை வழங்க வேண்டும். இடத்தை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பை வழங்க வேண்டும். தமிழர்கள…

    • 1 reply
    • 344 views
  13. “முன்னதாக மக்கள் என்னை பலமிக்க ராஜா எனவும் மந்திரி என்றும் அழைத்தனர் ஆனால் தற்போதோ ஓநாய் என அழைக்கின்றார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை தெரிவித்துள்ளார். வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நாங்கள் ஆரம்பித்து வைத்திருந்த அபிவிருத்தி திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார். Green பல்கலைக்கழகம் நிர்மாணிக்க தீர்மானித்திருந்தது எனது அரசாங்கம் தான் ஆனால், தற்போதைய அரசாங்கம் அது அவர்களுடைய யோசனை என தெரிவித்துக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம், கூட்டு எ…

  14. இலங்கையில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு அரசு தயாராகிவருகின்றது. இது தொடர்பில் முப்படைத் தளபதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புத்துறைசார் நிபுணர்களுடன் பேச்சு நடத்தி ஆலோசனைகளைப் பெறவுள்ளது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முப்படைத் தளபதிகளுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும், இதற்காக விசேட பாதுகாப்புச் சபைக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதை இராணுவ…

  15. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச போலி தகவல்களை சமர்ப்பித்து, நாட்டின் நீதிமன்றத்தை கடுமையாக ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரையில் 42 மீட்டர் தூரம் எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் போட்டியில் பங்குபற்றியதன் ஊடாகவே இந்த தகவல் தெரியவந்துள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியமை தொடர்பில் பிணையில் விடுதலையாகியுள்ள யோஷித ராஜபக்சவின் பிணை நிபந்தனையாக கடுவெல நீதிமன்றில் அவரது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பிணை நிபந்தனைகளை நீக்கிக் கொள்வதற்காக கடந்த 28ம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு மனு ஒன்றின் மூலம் அவரது முழங்கால் மற்ற…

  16. அண்மையில் கௌதாரிமுனை மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொண்டுவந்ததை அடுத்து அப்பகுதிக்கு பூநகரி பிரதேச செயலாளருடன் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அங்கு நடைபெறுகின்ற அபிவிருத்திட்டங்களை பார்வையிட்ட பின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் இந்த பூநகரி பிரதேசம் பல தொன்மை வரலாறுகளை கொண்டது. குறிப்பாக பூநகரி கோட்டை மண்ணித்தலை சோழர் கால சிவன் கோவில் என்று கூறிக்கொண்டு போகலாம். நீங்கள் இருக்கும் இந்த கௌதாரிமுனைப் பகுதியும் கூட தமிழர்களின் தொன்மை வரலாற்றை கொண்டு காணப்படுகின்றது. ஆனால் இன்று இந்த வரலாறுகளை முழுமையாக இல்லாமல் ஆக்குவதற்கு பல முனைப்புக்…

  17. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமும் வட மாகாண சபையும் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென தெரிவித்த மஹிந்த, இதனால் மக்கள் கொந்தளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், அரசாங்கமும் வட மாகாண சபையு…

  18. ஓட்டமாவடி பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயம், மயானம் மற்றும் மக்களின் காணிகள் என்பவற்றை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது தான் சுவீகரித்தேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் வெளியிட்ட ஒலி நாடா என்னிடம் உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முறாவோடைக் கிராமமானது பூர்வீக தமிழ் கிராமம். இக்கிராமத்தின் எல்லை தற்போது உள்ளவ…

  19. தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி கல்லூரியில் திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் கண்டு பிடிப்பு றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர். றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை திடீர் சோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினரு…

  20. “இராணுவ பாதுகாப்பை வழங்க தயார்” அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்பதி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடையங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கின் இனவாத நகர்வுகளும் அதன் மூலமாக விக்கினேஸ்வரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் வடமாகாண உறுப்பினர்களும் மற்றும் விக்கினே…

  21. எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த வடக்கில் இடம்பெற்ற எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற எழுக தமிழ்பேரணியின் பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர், பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, நாமும் பார்த்துக்கொண்டுதானிருக்கின்றோம், சுவரை நோக்கி எம்மை தள்ளிச்செல்ல முடியும் ஆனால் சுவரில் சாய்ந்து மன்னிப்பு கேட்கும் இனம் அல்ல சிங்களவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Art…

  22. சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு -எஸ்.ஜெகநாதன் 'இலங்கையில் இனரீதியான பாகுபாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகாவை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், பாகுபாடுகளைத் …

  23. திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகம் நாட்டில் வாழு­கின்ற மானிட சமூகம் திரு­ம­ண­மா­னது, திரு­ம­ண­மா­கா­தது என்­றதன் அடிப்­ப­டையில் வாழ்ந்து வரு­கின்ற இக்­கால கட்­டத்தில் இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடை­மு­றை­யினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது. இலங்­கையில் சிறுவர் பரம்­ப­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்­குடன் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ‘பிள்­ளை­க­ளினை பாது­காப்போம்’ தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்தும் பொருட்டு பெற்­றோர் திரு­மணம் புரி­யாத சந்­தர்ப்­பத்த…

  24. சி.விக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை, பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக சிங்கலே தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை வழங்கியதாக அதன் தலைவர் அஹுலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/183121/ச-வ-க-க-எத-ர-க-ப-ல-ஸ-ல-ம-ற-ப-ப-ட-#sthash.ecbJfTpJ.dpuf

  25. பிரபாகரன் தெய்யோ… இராணுவ பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி! [Sunday 2016-10-02 19:00] யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பனம் பழம் சீசன். தீவுப்பகுதியில் கடமையிலிருந்து விட்டு விடுமுறையில் வீடு செல்வதற்காக புறப்பட்டு வந்து யாழ்ப்பாணம் நகரத்தில் பனம் பழப்பாணி, பனாட், கருப்பட்டி, பனங்குட்டான் என்று ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டிருந்த பெண் இராணுவ சிப்பாய்களுடன் பேச்சுக்கொடுத்தோம். அவர்கள் தெறிக்க விட்டவற்றிலிருந்து ஒரு பகுதியே இது… பிரதான வீதியிலிருந்து உள்ள பஸ்ஸே ஓடாத எட்டு பத்து கிலோமீற்றர்கள் கால் நடையாக நடந்தே வரவேண்டிய குக்கிராமங்களிலிருந்து முன்பெல்லாம் நாங்க சரியா கஸ்டப்பட்டிருக்கிறம். சுமாரா படிச்சிருந்தும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.