Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் படுகாயம் January 9, 2025 முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை (08) மாலை நடைபெற்றுள்ளது.ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக…

  2. வடக்கிற்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த வேண்டும்-கஜேந்திரகுமார்! வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களில் வடக்கு மாகாணத்துக்கான புகையிரதங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட…

  3. அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்! நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1415826

  4. ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை! இஸ்லாம் மததத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூலை 16 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். https://athavannews.com/2025/1415834

  5. வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1415833

  6. சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்றிரவு (08) மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுடன் இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது. https://athavannews.com/2025/1415842

  7. நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது. https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak

      • Haha
      • Like
      • Thanks
    • 14 replies
    • 785 views
  8. கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்திற்கு அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர். இருப்பினும், இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றையதினம் (08-01-2025) கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://jvpnews.com/art…

    • 0 replies
    • 290 views
  9. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அதன்படி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2026.01.30 வரை நீடித்தல். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு (இரத்மலான) திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% …

    • 0 replies
    • 203 views
  10. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். அதேப…

  11. வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றன…

  12. வடக்கில் உள்ள ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை போ…

      • Like
    • 2 replies
    • 479 views
  13. தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய், பச்சை அரிசியின் விலையை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் Published By: Digital Desk 7 08 Jan, 2025 | 07:31 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா…

  14. Published By: VISHNU 08 JAN, 2025 | 09:23 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடு…

  15. Published By: VISHNU 08 JAN, 2025 | 09:12 PM 08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/203353

  16. விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்கள், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில்,குறித்த துயிலுமில்ல காணிக்கு முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. https://thinakkural.lk/article/314489

  17. 16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு அஞ்சலி Published By: VISHNU 08 JAN, 2025 | 08:30 PM சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், புதன்கிழமை (8) பொரளை பொதுமயானத்திலுள்ள அவரது கல்லறைக்கு முன்பாக அவரின் குடும்பத்தார், நண்பர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது.... (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/203350 …

  18. Published By: VISHNU 08 JAN, 2025 | 08:45 PM வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். இதன் போது டால் பின்கள் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் இறந்த டால்பின்களை மீட்டு பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (7) சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி அ…

  19. இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்! இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள்…

      • Haha
      • Like
    • 2 replies
    • 344 views
  20. 77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு! 77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இந்த ஆண்டு இடம்பெறாது எனவும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் அம…

      • Haha
    • 4 replies
    • 350 views
  21. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்! புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் …

  22. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை 25 ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு மாநாட்டின் தொனிப்பொருளை சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புக்க…

    • 1 reply
    • 227 views
  23. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி! இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், வருகைக்கான குறிப்பிட்ட திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை. இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. அநுரகுமாரவின் இந்தியப் பயணம், பதவியேற்ற பின்னர் அவரது முதல் சர்வதேச விஜயமாக அமைந்தது. அநுரகுமாவரின் தெரிவைத் தொடர்ந்து…

  24. பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் – தனியார் பஸ் உரிமையாளர்கள்! பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கபடவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1415640

    • 3 replies
    • 320 views
  25. Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் விவாதம்! Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1415662

    • 1 reply
    • 188 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.