ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வெட்கம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எப்போதும் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக சிரேஸ்ட அரசியல்வாதி டொக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்க இது கட்சியல்ல ஓர் கூட்டணி என கூறியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அது கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர கட்சியை பிளவடையச் செய்யும் வகையில் அமைந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாத யாத்திரை நல்ல விடயம் எனவும், 3 -4 மில்லியன் மக்கள் அணி திரண்டதாக கூறப்பட்ட போதிலும் உண்மையில் 12000 பேர் மட்ட…
-
- 0 replies
- 233 views
-
-
நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென்னிலங்கை மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வழங்கி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, அரசசார்பற்ற நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்குவதற்குதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை உள்ளடக்க எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து பிரதமரி…
-
- 0 replies
- 386 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாணவர்கள் சுதந்திரமான மனநிலையுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 495 views
-
-
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராஜபக்ச தெரிவித்திருக்கினறார். கடந்த திங்கட்கிழமை இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் பதினைந்து அடி ஆழம் வரையில் அகழப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து சில எலும்புகள், பல் ஒன்று நாணயம் ஒன்று உட்பட பல தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வு செய்யப்பட்டு, அது தொடர்பில் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை…
-
- 1 reply
- 465 views
-
-
கஞ்சாவுடன் பூசாரி கைது -செல்வநாயகம் கபிலன் இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை, நேற்றுப் புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து, அவரைச் சோதனை செய்தபோது கஞ்சா மீட்கப்பட்டது. 26 வயதுடைய பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர். இது இவ்வாறு இருக்க, அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை ம…
-
- 12 replies
- 755 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் சிங்களமக்களுக்கு விருப்பமில்லை-என்கிறார் பிரதமர் நல்லிணக்கம், நிலைமாறு நீதிப்பொறிமுறை மற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென்பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நடா த்திய கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான பிரி ட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும ம…
-
- 0 replies
- 243 views
-
-
கண்டி ஹந்தானை பிரதேசத்தில் தலைமைத்துவ பயிற்சி நிலையம் ஒன்றில் 12 பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படும் நபர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நெருங்கிய நண்பர் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள செய்தி இணையத்தளம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மனித உரிமை பயிற்சிகளை வழங்கி வரும் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நிமல் பீரிஸ் என்ற இந்த நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனைத்து ஊடக பிரசார நடவடிக்கைகளையும் இந்த நபரே நெறிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பேனர்கள், சுவரொட்டிகள், கட்அவுட்கள் அனைத்தையும் இந்த நபரே நிர்மாணித்துள்ளதாக தகவல்க…
-
- 0 replies
- 304 views
-
-
'நீதிபதி சொன்னதால் முகத்திலேயே குத்தினேன்' -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனாலேயே, தொந்தரவு கொடுத்தவரின் முகத்திலேயே தான் குத்தியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார். 3 சகோதரிகளுக்குத் த…
-
- 2 replies
- 374 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக, அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத்தவறியதால், எதிர்வரும் 08 ஆம் திகதி அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என வாக்குறுதி அளித்து தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற போதிலும், இன்று வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் எங்களை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறு வலியுறுத்…
-
- 1 reply
- 410 views
-
-
யாழ்.குடாநாட்டுக் கடற்பரப்பில் தற்போது கட்டப்பரை மீனினத்தின் பிடிபாடு அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை மீனினம் யாழ்.குருநகர், மாதகல், தீவகம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய கடற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மீனினம் அரியவகையாகக் காணப்பட்டாலும் காலத்திற்கு ஏற்ப தற்போது அதிகம் கிடைக்கின்றன. ஒரு பெரிய கட்டப்பரையின் நிறை ஐந்து கிலோ முதல் அதற்கு உட்பட்டும் காணப்படுகின்றது. ஒரு கிலோ கட்டப்பரை மீனின் விலை 1000 ரூபாவாக விற்கப்படுகின்றது. 25 000 ரூபா முதல் 30 000 ரூபா வரை ஒருநாள் வியாபாரத்தில் வருமானமாகக் கிடைக்கப்பெறுகின்றது. இந்த மீன் வகையைப் பலரும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து செல்கின்றனர்…
-
- 5 replies
- 490 views
-
-
இருமடங்கு வேகத்துடன் நாடு முழுவதும் Wi-Fi வசதி.! எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் புதிய தொழிநுட்பத்தினூடாக இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இதன்படி 400 இடங்களில் Wi-Fi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவிததார். http://www.v…
-
- 1 reply
- 712 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோர் கைது செய்யப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலி ஆவணம் தயார் செய்தமை, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியமை, அரச வளத்தை தவறாக பயன்படுத்தியமை, வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தியமை, நீதிமன்றத்தை அவமதித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன. ஜே. ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்று, விபத்துக்கு உள்ளான வாகனத்தில் பயணித்த அவரது பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் தாய், பொலிஸ் திணைக்களத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பில் நடத்திய விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட உள்ளனர். உயிரிழந்த பொலி…
-
- 0 replies
- 308 views
-
-
குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா? பி.மாணிக்கவாசகம் குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இப்போது தீர்ப்பளிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஊடகங்களில் அதன் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை. குமாரபுரம் கொலைச் சம்பவமும், அது பற்றிய வழக்கு விசாரணையும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. அத்துடன் சமூகத்தில் உணர்வுபூர்வமானதோர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தம…
-
- 1 reply
- 411 views
-
-
"இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்." - இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித…
-
- 1 reply
- 368 views
-
-
வணக்கதலங்களை புனரமைப்பதை விடுத்து யுத்தத்தால் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை புனரமையுங்கள் -சித்தார்த்தன் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் சிதைவடைந்த விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதில் அரசாங்கம் காட்டும் அக்க றையை, யுத்தத்தால் நலிவுற்றுப் போயுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் காட்டுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யுத்தப் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சித்தார்த்தன், மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 234 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்ழகத்தின் சில பீடங்கள் தற்போது வரை இயங்காதிருக்கின்றன. குறிப்பாக விஞ்ஞானப்பீடம் இதுவரை மீள ஆரம்பிக்காது கடந்த 17 நாட்களாக மூடப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பீடங்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளவேண்டிய வழிகள் தொடர்பில் ஆராய்வதற்கே ஜனாதிபதியிடமிருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பிற்காக வடமாகாண ஆளுந…
-
- 0 replies
- 253 views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 30 வீதமான படை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு உடனடியாக படையினரை விலக்கிக் கொள்ள முடியாது எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். படை குறைப்பு குறித்த விடயத்தில் தாம் வடக்கு முதலமைச்சரின் கருத்துகளுக்கு தாம் உடன்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஆர்வம் காட்டுவதாகவும், தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்கா உட்பட்ட உலகின் பல நாடுகளில் படையினருக்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டதாகவும் கரு…
-
- 0 replies
- 369 views
-
-
ஓடி ஒழிந்தவர்கள் இன்று தலைவர்கள் என்கின்றனர் இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழர்களை அனாதைகளாக்கி ஓடி ஒழிந்த தமிழ் தலைவர்கள் இன்று தம்மை தமிழர்களின் விடுதலைத் தலைவர்கள் என அடையாளப்படுத்துவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் யாழ்.கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் சிங்களவர்களுக்கு எதிரான குரோதத்தை விதைப்பதை விக்கினேஸ்வரனும் சுமந்திரனும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழக மோதல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனவாத ரீதியான கருத்துக்களை…
-
- 2 replies
- 486 views
-
-
இலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு தினம் இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள். மூதூர் தாக்குதலில் 54 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது விடுதலைப்புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னர் அந்த பிரதேசம் பல மணித்தியாலங்கள் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. ஓரிரு நாட்கள் இதே நிலை இருந்ததாக கூறப்படுகின்றது அவ்வேளையில்தான் தங்களை வெளியெறுமாறு விடுதலைப்புலிகளினால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரி…
-
- 3 replies
- 609 views
-
-
சிங்கப்பூரில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, அங்குள்ள தமிழ் மக்களிடம் நிதி சேகரித்த 5பேரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களாவர். இவர்களில், 3பேர் சென்னையையும், 2 பேர் திருச்சியையும் நேற்றைய தினம் வந்தடைந்துள்ளனர். திருச்சியை வந்தடைந்த மகாலிங்கம் மற்றும் விஜயகுமார் ஆகியோரை திருச்சி விமான நிலையத்தில் இந்தியப் புலனாய்வுத் துறையினர் கைதுசெய்து விசாரணை நடாத்தியபோது இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. http://thuliyam.com/?p=36571
-
- 0 replies
- 573 views
-
-
தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்க வைப்பதற்காக சிவப்பரம்பொருள் புரிந்த திருவிளையாட்டுயாம் அனைவரும் அறிந்ததே. இந்த அறிகைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேனும் நகைச்சுவை நடிகர் நகேஷிம் தான் காரணம். அவர்கள் நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் இந்தக் காட்சி மிக அற்புதமாக காண்பிக்கப்படுகிறது. தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்வது மட்டுமல்ல; குற்றம் இடம்பெற்று விட்டால் அந்தக் குற்றத்தை சாட்சாத் ஈஸ்வரன் இழைத்திருந்தாலும் அது குற்றமே என்பதை சபையில் சொல்லும் துணிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்துவதும் சிவப் பரம்பொருளின் நோக்கம். இப்போது மன்னர் சபையில் தருமியில் பாட்டில் குற்றம் காணப்படுகிறது. குற்றம் கண்டவர் சங்கத் தமிழ்ப…
-
- 0 replies
- 650 views
-
-
பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நபர் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார். சுந்த…
-
- 5 replies
- 775 views
-
-
ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முதலாவது பெண் அதிகாரி நியமனம் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மெகெலி (Una McCauley) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை – ஐ.நாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் காணப்படுகின்ற நாட்டின் சூழ்நிலையும், நடவடிக்கைகள் பற்றியும் உனா மெகெலி கேட்டறிந்துகொண்டார். பிரித்தானியாவைச் சேர்ந்த உனா மெகெலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவராவார். …
-
- 0 replies
- 226 views
-
-
இந்தியா செல்கிறது இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழு இலங்கை– இந்திய மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு செல்வதற்கு முன்னதாக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் சிலரை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாத இறுதிக்குள் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மீனவப் பிரச்சினை தொடர்பாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் அமைச்சர் மஹிந்த அமரவீரரை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். …
-
- 0 replies
- 175 views
-
-
தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கதைகளை பரப்பி வருகின்றார். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் யாப்பு ஒன்று காணப்பட…
-
- 3 replies
- 365 views
-