ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
28 NOV, 2024 | 12:01 PM இலங்கை - சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும், சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜியின் வாழ்த்துக்களை சீன தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையி…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது! யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். சாரதிகள் வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் வீதிகளின் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410045
-
- 2 replies
- 472 views
- 1 follower
-
-
23 NOV, 2024 | 11:02 AM அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். https://www.virakesari.lk/article/199466
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்! தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும். இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் …
-
- 3 replies
- 591 views
- 1 follower
-
-
NPP எம்.பி.க்கள் செல்ஃபி எடுக்கின்றனர்;சாடுகிறார் காசிலிங்கம் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தி, வடமாகாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஃபெங்கல் சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். "தேசிய மக்கள் சக்தியின் ஊடாக வடக்கிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர்" என்று காசிலிங்கம் கூறினார், யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்ட நபர்கள…
-
- 0 replies
- 542 views
-
-
உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக்க மாவீரர்நாள் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழக்கத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேஜர் விநோதரனின் தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்தமையடுத்து, ஏனையோர் ஈகச் சுடர்களை ஏற்றி மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் மாவீரர்களின் உறவுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட…
-
- 0 replies
- 219 views
-
-
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 10 பேர் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன், குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட உடல் …
-
- 0 replies
- 791 views
- 1 follower
-
-
தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியிலில் திரு சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா?
-
-
- 249 replies
- 15.3k views
- 2 followers
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப் பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது வீட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் பல ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும் என அறிவித்திருந்தோம். இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கான…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கொழும்பு – அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஜும்மா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் (மதனி) அவர்கள் கலந்து திறந்து வைத்தார். மேலும் கெளரவ அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களும் அனைத்து பீட பீடாதிபதிகளும் மூவின மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நான்கு மதத்தினருக்கும் சரிசமமாக தலா 2 ஏக்கர் காணி, அவரவர் மத ஸ்தலங்களை அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். த…
-
- 0 replies
- 718 views
-
-
விமானத்தில் பெண்ணின் கைப் பையை திருடினார்! லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, இரட்டைக் குடியுரிமையுடைய 55 வயதான அலுவலக உதவியாளர் சிறி ஷ்யாமலி வீரசிங்கவின் கைப் பையே திருடப்பட்டிருந்தது. அவர் செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் 01.30 மணியளவில் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார். அவளது கைப்பையில் 14 இ…
-
-
- 8 replies
- 773 views
- 1 follower
-
-
27 NOV, 2024 | 09:37 PM புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சு…
-
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-
-
இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: தியாகங்களின் பெறுமதி? ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனா…
-
-
- 12 replies
- 1k views
-
-
யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.
-
-
- 68 replies
- 4k views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது! 27 NOV, 2024 | 08:59 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்…
-
-
- 3 replies
- 480 views
- 1 follower
-
-
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல், அனர்த்தங்களை எதிர்கொண்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் - ஜனாதிபதி அறிவுறுத்தல் 27 NOV, 2024 | 04:53 PM தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு செயற்படாமல் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள…
-
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
26 NOV, 2024 | 06:06 PM மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார. அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர். இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வ…
-
- 2 replies
- 247 views
- 1 follower
-
-
27 NOV, 2024 | 04:07 PM (நா.தனுஜா) இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்குப் பதிலாக நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 'ஓரிரவு கொள்கை வீதம்' என அழைக்கப்படும் ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, அதனை 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் (6 ஆவது) மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே மேற்குறித்த அறிவ…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்படத்தை நீக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸார் அறிவுறுத்தல் 26 NOV, 2024 | 05:54 PM வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் இடைநுழைந்து அங்கிருந்தவர்களை அறிவுறுத்தியதற்கிணங்க, இயக்கத் தலைவரின் புகைப்படத்தை மறைத்து கேக் வெட்டி இன்று (26) கொண்டாடியுள்ளனர். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் …
-
-
- 18 replies
- 1.1k views
- 2 followers
-
-
தமிழர் போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து தமிழ் மக்கள் சித்தரிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் இந்த அரசாங்கம் கொண்டு வருவதாக கூறும் மாற்றமானது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே அவை இருக்கும். எமது போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமத…
-
- 1 reply
- 200 views
-
-
27 NOV, 2024 | 11:31 AM நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199814
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
27 NOV, 2024 | 09:12 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199797
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
26 NOV, 2024 | 05:36 PM வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை (25) முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120 ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை (26) அதிகாலை முதல் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம்…
-
- 1 reply
- 357 views
- 1 follower
-