ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் பதவி விலகும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும். இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது. குறைந்தபட்ச அதிகாரம் இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும். …
-
- 2 replies
- 287 views
-
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்; புலமைப் பரிசில் பரீட்சை குறித்து துரித நடவடிக்கை - பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர Published By: Vishnu 01 Jan, 2025 | 01:30 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 250 views
-
-
யாழ்நகரில் மக்கள் மகிழ்வுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அலங்கார விளக்குகள், வாணவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் மகிழ்வுடன் கொண்டாடினர். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று அனைவரும் சந்தோசத்துடன் கலந்து கொண்டனர்.
-
- 0 replies
- 286 views
-
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்! இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்! நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது. யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆசிய…
-
-
- 42 replies
- 3k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான படைத்தரப்பு உறவுகள் வலுவாக இருப்பதாக இந்தியா தெரிவித்து வருகின்றது. புலனாய்வு அமைப்புக்களின் தலையீடு இல்லாமல் இவ்வாறு படைத்தரப்பு உறவுகள் வலுவாக அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. https://tamilwin.com/article/indian-raw-activities-in-sri-lanka-1735605571
-
- 1 reply
- 222 views
-
-
2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதனால், தற்போது அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி அப்போது சரிவடைய வாய்ப்புள்ளது. தற்போது இலங்கையில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் கடன்கள் கிடைக்கப்பெறுவதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்றது. எனினும், இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படும் போதும் கடன்களை மீள செலுத்தும் போதும் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதேவேளை, இலங்கையின் கைத்தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு வளர்ச்சியை கடந்த காலங்களில் காட்டியுள்ளமை ஒரு சாதகமான பொருளாதார அம்சமாக கருதப்படுகின்றது. …
-
- 0 replies
- 286 views
-
-
திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம் பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கி…
-
- 1 reply
- 217 views
-
-
சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச December 30, 2024 1:23 pm ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது நல்லது எனவும் அவர…
-
- 2 replies
- 419 views
-
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி! யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் உடலமைப்பு அழகி ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்றுமுந்தினம் (28) இடம்பெற்றன. வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம் பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார் TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்…
-
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
31 DEC, 2024 | 06:36 PM (எம்.மனோசித்ரா) அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை பிரிவுகளை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தற்போது அரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமலும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றது. அரசு மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையிலும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விடய…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், புகையிரதத்திற்குள் அனுமதி சீட்டுகளை சரிபார்க்கும் போதும், அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் …
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 31 DEC, 2024 | 01:01 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரச பாடசாலைகளின் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கு ஜனவரி 30 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை விடுமுறையின் பின்னர் நாளை வியாழக்கிழமை மீள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சகல பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின்…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
இலங்கையில் இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்! இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மற்றும் இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடுகள் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1414590
-
- 1 reply
- 171 views
-
-
100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு December 18, 2024 10:16 pm யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். நேற்று (17) தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தார். வழக்காளியான வைத்…
-
-
- 7 replies
- 553 views
- 1 follower
-
-
இலங்கைக்கான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்! உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது. கூடுதல் விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும். மேலும், 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கும் உதவியாக அமைகிறது. மேலதிக சேவை 2025 மார்ச் 31 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும். EK654 விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி கா…
-
- 0 replies
- 189 views
-
-
யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு! நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டி பகுதியில் உள்ள நகை உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்று வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்கு சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார். குறித்த விடயத்தை தாய்க்கு தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து, மயக்கமடைந்த தந்தையை…
-
- 0 replies
- 206 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு! அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங…
-
- 0 replies
- 194 views
-
-
கொழும்பு 1 மணி நேரம் முன் தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான் அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படிஇ வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாகஇ இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஆனால்இ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று த…
-
-
- 25 replies
- 2.3k views
-
-
புதிய ஆண்டிலிருந்து எங்கள் பொதுச் சேவையை அன்பானதும் விரைவானதும் தரமானதுமாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ‘முறைமை மாற்றத்தை’ ஆரம்பிப்போம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு வடக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும். புத்தாண்டு என்பது தனியே கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல எங்கள் சிந்தனைகளை புதுப்பித்தலுக்கான தருணமும் கூட. மகிழ்வுடன் வரவேற்கும் புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? December 28, 2024 02:55 pm தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பார்வையிட்டுள்ளார். சங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வேலைகளின் தரம் குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன், மூலப்பொருட்களின் தரம் குறித்தும் அவர் பார்வையிட்டதுடன் வேலையில் ஈடுபட்டவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். https://thinakkural.lk/article/314237
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda) இராணுவத்தினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கண்கண்ட சாட்சியொருவர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் SUDA CREATION சேனலில் நேற்று (29) மாலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்கானிக்கல் பிரிவின் சிப்பாய் குறித்த நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வதியும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாய என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் கலந்து கொண்டிருந்தார். இவர் முன்னர் கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய பிரியசாந்த என்று அடையாளப…
-
-
- 4 replies
- 546 views
- 1 follower
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்ப…
-
-
- 106 replies
- 6.4k views
- 2 followers
-
-
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 DEC, 2024 | 03:21 PM இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் திங்கட்கிழமை (30) தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடா…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
29 DEC, 2024 | 02:05 PM சீன அரசாங்கத்தினால் "சீனாவின் சகோதர பாசம்" என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன. சீன தூதுவர் H.E.Qi Zhenhong திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பொதிகளை வழங்கி வைத்தார். திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சீனத்தூதுவர் …
-
-
- 4 replies
- 376 views
- 2 followers
-