ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசஸ்தலங்களை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (22) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, குறித்த வீடுகளை ஒப்படைக்காவிடின், நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத…
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
23 NOV, 2024 | 07:32 PM மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிப…
-
-
- 7 replies
- 462 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு: வெளியானது அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையும் முகாமைத்துவமும் அங்கீகரித்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும் என்றும் நான்காம் கட்ட கடனாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு வர…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
சட்டங்களை மீறாத வகையில் மாவீரர் நாளை நினைவு கூர காவல்துறை ஆலோசனை! November 23, 2024 நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது. இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் காவல்துறையினர் வழங்கி…
-
- 1 reply
- 234 views
- 1 follower
-
-
கோடிக் கணக்கில் பண மோசடி யாழில் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளில், சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்…
-
- 1 reply
- 724 views
-
-
13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல; புதிய அரசமைப்பை உடன் இயற்றுங்கள்; சஜித் அணி வேண்டுகோள் “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு:- “13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற…
-
- 1 reply
- 376 views
-
-
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் November 22, 2024 அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 இல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு ஆளும் அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நடாத்திய ஊடக சந்திப்பில் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இவ் ஊடகச் சந்திப்பு பாண்டிருப்பிலுள்ள சமூக செயற்பாட்டாளர் இரா.பிரகாசின் இல்லத்தில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்றது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்த…
-
- 1 reply
- 533 views
-
-
விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கன வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். …
-
- 0 replies
- 142 views
-
-
நினைவாலய திறப்புக்கு அழைப்பு. 982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில்,தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் , விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும், சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் இன்று (23) மாலை 6 மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீர் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் முல்லைத்தீவு, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில், தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டுதாக நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 672 views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடமாற்றம் கோரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில், மகப்பேற்று விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று வைத்தியசாலையின் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தமது கடிதத்தில் சுட்டிக்…
-
- 0 replies
- 154 views
-
-
மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இன்று (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார். அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பணியாளர்கள் அன்புடன் வரவேற்பளித்தனர். கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்க…
-
-
- 3 replies
- 348 views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பேர்த்தியார் புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொ…
-
- 0 replies
- 924 views
- 1 follower
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 நிறுவனத்திற்கு, முன்னாள் செயலாளர் அசாத் மவ்லானா வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டுள்ளார். சனல்4 காணொளியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/312408
-
- 3 replies
- 251 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி அறிக்கை எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிட…
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை இராணுவ விவகாரத்திற்குள் சர்வதேசத்தின் திடீர் தலையீடு காரணமாக புதிய நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படுமா என்னும் கேள்வி அரசியல் வட்டாரங்களில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாதுகாப்பு படைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவீனங்களை குறைப்பதற்கான கட்டாயத்தை ஜெனீவா முதலில் இருந்தே வலியுறுத்தியுள்ளது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் குறிப்பிட்டுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்களை குறைப்பதன் பின்புலத்தில் சர்வதேசங்களின் அழுத்தங்கள் உள்ளன. இலங்கையின் பாதுகாப்பு செலவீன குறைப்பையும், மறுசீரமைப்புக்களையும் அவர்கள் வேண்டி நிற்கின்றார்கள். இ…
-
- 1 reply
- 377 views
-
-
இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
வாசுகி சிவகுமார்- மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவலுகள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது. 26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திக…
-
-
- 6 replies
- 655 views
-
-
20 NOV, 2024 | 07:16 PM தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட…
-
-
- 7 replies
- 583 views
- 1 follower
-
-
22 NOV, 2024 | 04:24 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்ச ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்ப…
-
-
- 2 replies
- 513 views
- 1 follower
-
-
“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்! கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளும் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், …
-
- 0 replies
- 330 views
-
-
22 NOV, 2024 | 04:16 PM வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது…
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. பெற்றோர்களே அவதானம்.. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும். இவ்வ…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
22 NOV, 2024 | 11:01 AM இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்த விபரங்கள் வேறு நியாயாதிக்கங்களில் அம்பலமாவதை பார்த்திருக்கின்றோம் என கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார். சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் …
-
- 1 reply
- 189 views
- 1 follower
-