Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் போது, கடந்த ஆண்டு சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வாய்மூல அறிக்கை நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் வெளியிடப்படலாம் என்றும் இது …

    • 0 replies
    • 337 views
  2. பாதுகாப்புச் செயலாளராக தாம் வகித்த காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்தணி குண்டுகளை கொள்வனவு செய்ததில்லை எனவும், யுத்தம் இடம்பெற்ற போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் பற்றிய புகைப்படங்களை பிரசுரிப்பது கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியமைக்கான ஆதாரமாக கருதப்பட முடியாது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேறும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

    • 4 replies
    • 474 views
  3. அச்சுவேலி - அராலி வீதியைத் திறந்து பொதுமக்களின் பாவனைக்கு விடுமாறு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும், இராணுவத்தினர் அதற்கு மாறாக பொதுமக்களுடைய நிலங்களை ஊடறுத்து, புதிய வீதி ஒன்றினை உருவாக்கி உயர் அதிகாரிகளிடம் கையளித்துள்ளமை காணி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வரை செல்லும் பாதை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப் பாதையினை திறந்து விட்டால் அராலி, வட்டுக்கோட்டை ஊடாக இளவாலை, தெல்லிப்பளைக்கு செல்வது இலகுவாக்கப்படும் என பல முறை பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பாதுகாப்பு செயலாளரால் குறித்த வீதி ம…

  4.  இனி சீனியும் கசக்கும் சீனி உற்பத்தி பொருட்களின் வரியை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேகாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இந்த சீனி காணப்படுவதால் மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு உதாரணமாக இங்கிலாந்து நாடு காணப்படுவதை அமைச்சர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிலுள்ள மென்பான தயாரிப்பு நிறுவனங்களில் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரைய…

  5. இறுதிப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்று இராணுவத்தினரால் காண்பிக்கப்பட்ட உடல் அவருடையது இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என காண்பிக்கப்பட்ட உடலை மரபணு பரிசோதனைக்குட்படுத்த அரசு விரும்பினால் கனடா மற்றும் டென்மாக்கில் உள்ள அவரது சகோதரியும், சகோதரனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என அறிவிக்கப்பட்டவேளை நான் இந்தியாவில் இருந்தேன். இலங்கை இராணுவத்தினர் காண்பித்தது அவரின் உடலா என்பது குறித்து எனக்கு சந்தேகங்கள…

  6. பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் ஜெனீவா சென்றுள்ள கஜேந்திரகுமார், அங்கு இடம்பெறும் பக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன், மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகின்றார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு ஹியூமன் ரைட் வோச் அமைப…

    • 1 reply
    • 224 views
  7. இலங்கையில் அரசியல் மட்டுமின்றி வேறு பல சம்பவங்கள் தொடர்பிலும் சோதிடர்கள் ஆரூடம் கூறுவது கடந்த காலங்களில் பொதுவாக காணக்கூடிய ஒரு விடயமாக உள்ளன. இதன்காரணமாக பல சோதிடர்கள் இல்லாமல் போனமையும், பலர் இதனால் பிரபலமடைந்தமையும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். எப்படியிருப்பினும் நாட்டின் எதிர்காலம் மற்றும் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வத்தில் இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்துள்ளன. கடந்த காலங்களில் சலாவ தீ விபத்து உட்பட பல ஆரூடங்கள் சரியான முறையில் கூறி சமூகத்தின் அவதானத்தை பெற்றுக்கொண்ட சோதிடர் திலக் சில்வா நாட்டின் பிரதான 4 அரசியல்வாதிகள் தொடர்பில் ஆரூடம் கூறியுள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள நல்லாட…

  8. மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள். குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சார்பில் இவ்வமைப்பின் செயலாளர் தே.பி.சிந்தாத்துரை இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், எமது கத்தோலிக்க திருமறையானது கி.பி. 1500 அளவில் எமது கீழைப் பிரதேச நாடுகளில் மக்கள் மத்தியில் அழமாக வேரூன்ற ஆரம்பித்தது. எமது மன்னார் மறைமாவட…

  9. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 201.3 ஏக்கர் நிலம் நேற்றய தினம் மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு அமைச்சினால் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் தொடக்கம் மேற்படி பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக தங்கள் காணிகளை அடையாளம் காணும், மற்றும் துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த கட்டுவன்(ஜே-242), குரும்பசிட்டி(ஜே-238) மற்றும் வறுத்தலை விளான்(ஜே-241), காங்கேசன்துறை புகைர நிலையத்தை அண்டிய (ஜே-233), (ஜே-234), (ஜே-235), (ஜே-236) ஆகிய பகுதிகள் நேற்றய தினம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி பகுதிகளில் இன்றைய தினம் காலை 9 ம…

  10. காந்தீய இயக்கமான சர்வோதய இயக்கத்தின் மீது நெதர்லாந்து நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்துக்காக நெதர்லாந்தின் நிறுவனம் ஒன்று வழங்கிய 100,000 யூரோக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது. மொரட்டுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கை நெதர்லாந்து நிறுவனத்தின் சார்பில் அதன் சட்டபூர்வ இலங்கை உரிமையாளர் லச்மன் பெரேரா என்பவர் தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், பயாகல மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக நிதி வழங்கிய போதும் அதனை மாற்றுத் தேவைக்காக சர்வோதய நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 411 views
  11. வவுனியாவில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு வழங்க மறுப்பு வவுனியாவில் நாளை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் ஆதரவு வழங்கவில்லை என வர்த்தக சங்கத் தலைவர்.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையததை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின தினச்சந்தை வியாபாரிகளால் நாளை (27.06) உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்த சங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எமக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எமது சங்கம் இது தொடர்பில் கலந்துரையாடி இ…

    • 0 replies
    • 363 views
  12. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் தெரிவித்திருக்கும் கருத்தானது,ஜனாதிபதி வலி.வடக்கு மக் களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு முரணானது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நோர்வேக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரஒஸ்லோவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார். அதில் வடக்கு, கிழக்கில்மக்களின் காணிகளை 2018 ஆம் ஆண்டுதான் முழுமையாக விடுவிக்க அரசுதிட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- நல்லாட்சி அரசின் ப…

    • 0 replies
    • 321 views
  13. மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேச மக்கள் விரைவாக குடியேறவேண்டும்: யாழ்.மாவட்ட செயலர் நா வேதநாயகன்: மீள் குடியேற அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீள் குடியேறுங்கள். மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் விரைவாக சென்று மீள குடியமருங்கள்.உங்களுக்கு தேவையான உரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். என யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஏற்கனவே மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள குடியமர வ…

    • 4 replies
    • 290 views
  14.  சி.எஸ்.காந்தி காலமானார் -மு.இராமசந்திரன் மலையக இலக்கியவாதியான சி.வி.வேலுப்பிள்ளையின் பேரனும் மலையகத்தின் மூத்த கவிஞரும் ஊடகவியலாளருமான சி.எஸ்.காந்தி, மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலமானார். நுவரெலியா மாவட்டத்தின் வட்டகொடை, மடகொம்பரை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக கடமையாற்றியவர். ஆங்கில புலமை நிறைந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கவிதை எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார். அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நில…

    • 1 reply
    • 423 views
  15.  விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்ய…

    • 3 replies
    • 438 views
  16. போரில் மஹிந்த ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த சமாதானம் தொடர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்து உள்ளார். வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை காங்கேசன்துறை புகையிரத நிலையம் அருகில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமக்கு கூறி இருக்கின்றார்கள் உங்களுடைய…

  17. பிரிட்டன் விலகினால் இலங்கைக்கு நன்மையே: கலாநிதி அமிந்த மெத்சில ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுயாதீனமானால் எமக்கு அதில் நன்மை ஏற்படும் என வயம்ப பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி மற்றும் நிதி பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு குறித்து அவர் இந்த கருத்தை கொழும்பு பத்திரிகையொன்றிடம் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழந்தால் சுயாதீனமாகும் அந்த நாட்டுடன்…

  18. வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடு…

  19. மாடும் எருமை மாடும் போன்றதே நல்லாட்சி என்கிறார் மகிந்த நாட்டில் தற்போது நல்லாட்சி இல்லையா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களிடம் கேள்வி எழுப்பியதுடன் இந்த அரசு பொருத்தமற்ற ஓர் அரசாங்கமாகும் பசு மாடும் எருமை மாடும் போன்ற அரசாங்கமே இதுவாகும் எனவும் இருவரினதும் கொள்கைகள் மாறுபட்டவை எனவும் தெரிவித்தார். பொலனறுவை மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பௌத்த பீட அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஒன்றரை ஆண்டுகள் நல்லாட்சி நிலவி வருகின்றது என இதன்போது மஹிந்த கூறினார். அங்கு கு…

  20. அண்மையில் யப்பானுக்கு பயணமாகிய சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு நரிடா விமானநிலயத்தில் உடற் பரிசோதனை நடாத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்துநாள் பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்புவதற்காக ரோக்கியோவில் உள்ள நரிடா விமானநிலையத்திற்குச் சென்ற மகிந்த ராஜபக்ஷ பயணிகளின் இரண்டாவது பரிசோதனை இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கும் (மெட்டல் டிரெக்டர்) கருவிமூலம் உடற்பரிசோதனை செய்யப்பட்டார். முன்னர் சிறீலங்காவின் பிரதமராக இருந்த ரட்ணசிறி யப்பான் பயணம் மேற்கொண்டபோதும் விமானநிலையத்தில் வைத்துப் பரிசோதிக்கப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது. மகிந்த ராஜபக்ஷ யப்பானுக்கு தனிப்பட்ட காரணகத்துக…

  21. அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணிவரை நடந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில், கோவிந்தம் கருணா…

    • 2 replies
    • 381 views
  22. இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற விரும்பாத சீனா இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள சீனாவின் ஆயுத விநியோகஸ்தர் நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பின்னர் மிதமிஞ்சிய ஆயுதங்களை மீண்டும் ஆயுத விற்பனையாளர்களின் ஊடாக மீள்விற்பனை செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. குறித்த ஆயுதங்கள் காலாவதி திகதியை அண்மித்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் அந்த ஆயுதங்கள் உரிய முறையில் பாதுகாத்து வைக்கப்படவில்லை என்று காரணம் கூறி சீன நிறுவனம் அவற்றை ப…

  23. 'பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, கடத்தல்காரர்களை காப்பாற்றுகிறது மைத்திரி அரசு": வவுனியாவில் போராட்டம் தங்கள் பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களை காப்பாற்றுவது மைத்திரி அரசு, நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை எனும் பெயரால் இந்த உண்மைகள் மறைக்கப்படுவதை பகிரங்கப்படுத்தி, வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கமும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தன. நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை பாதிக்கப்ப…

  24. நுவரெலியாவில் ஜனாதிபதி தலைமையில் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நாட்டு மக்களின் எதிர்காலம் நலன் கருதி ஜனாதிபதி ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரி…

  25. கவனிப்பாரின்றி கிடக்கும் முறிகண்டிக்குளம்! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது முறிகண்டிகுளம். முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கும், கொக்காவில் பகுதிக்கும் நடுவில் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்குதக் குளம் புனரமைக்கப்படாமையால், வருடா வருடம் வெள்ள பாதிப்புக்குள்ளாவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குளம் யுத்த காலத்தில் சேதமடைந்ததாகவும், குறித்த குளத்தினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த குளத்தினை பயன்படுத்தி 50 ஏக்கர்களிற்கு மேல் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.